8/31/13

ரேடியோ சிட்டி ஆரம்பித்துள்ள 'தமிழ் ஆன்லைன் ரேடியோ'!!!

பிரபல எஃப்.எம் ரேடியோ நிறுவனமான ரேடியோ சிட்டி, தமிழ் ஆன்லைன் ரேடியோ ஆரம்பித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், இசைமைப்பாளர் டி.இமான், தயாரிப்பாளர் எஸ்.மதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு புதிய புதிய தமிழ் ஆன்லைன் ரேடியோவை துவக்கி வைத்தனர்.

முதல் வலை வானொலி நிலையமான பிளானெட்ரேடியோசிட்டி.காம் (planetradiocity.com) தனது முதல் இராந்திய வலை வானொலியான தமிழ் ரேடியோ சிட்டியை முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தமிழ் ரேடியோ சிட்டியில் 24 மணி நேரமும் இடைவிடாமல் தமிழ்ப் பாடல்கள் ஒலிபரப்பப்படும். இத்துடன் நேயர்கள் விரும்பிக் கேட்கும் 'லவ் குரு', 'ரகசிய போலீஸ் போடவா கோபி 911' ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது.

இதன் துவக்க நிகழ்ச்சி நேற்று (ஜூலை 24) சென்னையில் உள்ள ரேடியோ சிட்டி எஃப்.எம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் டி.இமான், தயாரிப்பாளர் மதன், ரேடியோ சிட்டி வானொலியின் சி.இ.ஓ அபூர்வா புரோஹித், ரேடியோ சிட்டி வானொலியின் டிஜிஜிட்டல் மீடியா மற்றும் நியூ பிசினஸ் மூத்த துணைத் தலைவர் மற்றும் பிசினஸ் தலைவரான ரச்னா கன்வார் மற்றும் ரேடியோ சிட்டி அலுவலகர்கள் என அனைவரும் கலந்துகொண்டார்கள்.


இனி, உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், இனியமையான தமிழ்ப் பாடல்களை இந்த தமிழ் ரேடியோ சிட்டி ஆன்லைன் வானொலியின் மூலம் கேட்கலாம். இதை கேட்கவிரும்புகிறவர்கள், பிளானெட்ரேடியோசிட்டி.காம் (www.planetradiocity.com) என்ற இணையதளத்திற்கு சென்று, அங்குள்ள ரேடியோசிட்டுடமில் (radiocitytamil) லிங்கை கிளிக் செய்தால், தமிழ்ப் பாடல்களையும், மிகச் சிறந்த தமிழ் இசைக் தொகுப்புகளுடன் நகைச்சுவையும், குதூகலமும் நிறைந்த லவ் குரு மற்றும் ரகசிய போலீஸ் படவா கோபி 911 போன்ற நிகழ்ச்சிகளையும் கேட்கலாம்.

இந்த புதிய ஆன்லைன் வானொலி குறித்து ரேடியோ சிட்டி நிறுவனத்தின் சி.இ.ஓ அபூர்வா புரோஹித் கூறுகையில், "பிராந்திய நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை ரேடியோ சிட்டி உணர்ந்தே உள்ளது. ஒரு எல்லைக்குள் தொடங்கப்படும் சேவைகள் சம்மந்தபட்ட பிராந்தியங்களில் சிறப்பாக இருக்கும் என்பது உண்மையே என்றாலும், வலை வானொலி நகரம் மற்றும் நாடு தாண்டி உலகளாவிய சேவைகளை வழங்கும். உலகின் மிகச் சிறந்த இசைகளுள் தமிழிசையும் குறிப்பிடத்தக்கது என்பதால் ஒரு வட்டத்திற்குள் முடங்கிவிடக் கூடாது. எனவேதான் தமிழ் இசையை உலகிலுள்ள அனைத்து இசை ஆர்வலர்களுக்கும் எடுத்துச் செல்கிறோம்." என்று தெரிவித்தார்.

ரேடியோ சிட்டி 91.1 எஃப்.எம் டிஜிடல் மீடியா மற்றும் நியூ பிசினஸ் மூத்த துணைத் தலைவர் மற்றும் பிசினஸ் தலைவர் ரச்னா கன்வார் கூறுகையில், "இந்தி ரேடியோ சிட்டு உள்பட 5 வலை வானொலி நிலையங்களைத் தொடங்கி பின்னர் பிராந்திய இசையைக் குறிப்பாக தென் இந்தியப் பிராந்திய இசையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல விரும்பினோம். இந்த ஆசை இப்போது நிறைவேறி உள்ளது. இந்தியப் பிராந்திய இசை குறிப்பாக தமிழ் இசைக்கு ஆன்லைனில் இருக்கும் இடைவெளியை இணைக்கும் பாலமாக இனி தமிழ் ரேடியோ சிட்டி செயல்படும். பழைய மற்றும் புதிய இசை ஆர்வலர்களுக்கு இதுவொரு சுரங்கமெனில் மிகையில்லை." என்று தெரிவித்தார். (டி.என்.எஸ்)

Labels: , , ,

8/28/13

கொங்கு டிவி புதிய தமிழ் பொழுதுபோக்கு & விவசாயம் சார்ந்த தொலைக்காட்சி விரைவில் ஆரம்பம். !!!

கொங்கு டிவி புதியதமிழ் தொலைக்காட்சி வரும் ஜன14 முதல் தனது ஒளிபரப்பை IS 20 68.5 டிகிரியில் துவங்கவுள்ளது. இது குறித்து கொங்கு டிவியின் MD அவர்களை நாம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது மிகவும் பொறுமையாகவும் அதன் நோக்கத்தையும் நமக்கு தெளிவாக கூறினார் . அதனை உங்களுக்கும் கூறுவோம் இது பற்றிய மேலும் தகவலுக்கும் இந்த +91 9488936369 எண்களை தொடர்பு கொள்ளுங்கள். என்னதான் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தொ(ல்)லைகாட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருந்தாலும் மக்களை ஒரு பக்கம் சிரிக்க வைக்கும் தொல்லைகாட்சிகள் ஒரு பக்கம் சிந்திக்க வைக்கும் தொல்லைகாட்சிகள் ஒருபக்கம் வேதணை அளிக்கும் தொல்லைகாட்சி கட்டப்பஞ்சாயத்து என நிறைய இருந்தாலும் மண்ணில் இறங்கி பாடு பட்டு நாட்டை உயர்த்தும் விவசாயிக்கென ஒரு தொலைகாட்சியும் இதுவரை இல்லாமல் இருந்தது , பொதிகை டிவியில் வயலும் வளமும் என ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த ஞாபகம் அந்த குறையை போக்க விவசாயிக்கு அறுதல் கூற வளர்ச்சியை மேம்படுத்த வருகிறது . கொங்கு டிவி. நாம் கொங்கு டிவி என பெயர் வைக்க
காரணம் என்ன என கேட்ட பொழுது காரணம் ஒன்றும்மில்லை கொங்குமண்டலம் என கூறிக்கும் என கூறினார் . 24மணி நேரமும் அக்ரி சம்மந்தமான நிகழ்ச்சி ஒளிபரப்பினால் எப்படி எனக் கேட்டோம் அதற்கு  இல்லை இல்லை பொழுதுபோக்கும் இருக்கும் இதுவரை 150படங்குளுக்கு மேலாக ஒளிபரப்பு உரிமை பெற்றுவிட்டோம் . தினமும் 2 படம் வீதம் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் இந்த தொலைக்காட்சி அறிமுகம் எப்பொழுது செய்தீர்கள் என கேட்ட பொழுது நேற்று முதல் இதற்கான நேரம் ஆரம்பம் ஆகிவிட்டது என கூறினார். பொங்கல் திருநாள் அல்லது உழவர் திருநாள் முதல் கொங்கு டிவி தனது வெற்றி பயணத்தை துவங்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை . இது போன்று நீங்கள் புதிதாக சேனல் ஆரம்பம் செய்பவரா தமிழன்டிடிஹச் மற்றும் பெஸ்ட்சட் இன்போ வழியாக தெரியப்படுத்துங்கள் எவ்வித கட்டணமும் இல்லை . முக்கிய குறிப்பு இந்த சேனல் சென்னை , அடுத்த பெருங்குடியில் ஆரம்பமாகிறது.

Labels: , , ,

8/27/13

சீன தமிழ் வானொலியின் ஓர் அறியா தகவல்!!!

சீன வானொலி நிலையம் 1941ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3ம் நாள் ஒலிபரப்பைத் துவங்கியது. துவக்கத்தில் ஜப்பானிய மட்டும் 15 நிமிடத்திற்கு ஒலிபரப்பானது. 60 ஆண்டுகளுக்குப் பின் 38 அந்நிய மொழிகள் சீன மொழி மற்றும் 4 உள்ளூர் மொழிகள் என நாளுக்கு 233 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.
செய்திகள், செய்தித் தொகுப்பு, அரசியல், பொருளாதாரம், பண்பாடு, அறிவியல் தொழில்நுட்பம் முதலியவற்றுடன் தொடர்புடைய சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை வானொலி நிலையத்தின் பல்வேறு மொழிப் பிரிவுகளின்நிகழ்ச்சிக் கட்டனமாகும். நிகழ்ச்சிகள் உலகமெங்கும் ஒலிக்கின்றன. அளவிலும் சரி, செல்வாக்கிலும் சரி, விஓஏ, பி.பி.சி ஆகியவற்றையடுத்து சீன வானொலி நிலையம் உலகில் மூன்றாவது சர்வதேச வானொலி நிலையமாக வளர்ந்துள்ளது. 1984ம் ஆண்டு முதல் உள்நாட்டில் 2 வரிசைகளில் அந்நிய மொழிகள் ஒலிபரப்பலாயின. 91.5 எப்எம், 1251கிஹெர்ட்ஸ் ஏஎம் வரிசையில் ஆங்கில மொழி பெய்சிங் மாநகர் பிரதேசத்திற்கு ஒலிபரப்பாகின்றது. ஆங்கிலம், ஸ்பேனிஷ், அரபு, ஜெர்மன், கொரிய, ஜப்பானிய மற்றும் ரஷிய மொழிகளில் இசைநிகழ்ச்சி ஒலிபரப்பாகின்றது.
40 சீன வானொலி செய்தியாளர் நிலையங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் நிறுவப்பட்டுள்ளன. தவிர, சீனாவின் பல்வேறு மாநிலங்கள் மாநகரங்கள் தன்னாட்சிப் பிரதேசங்கள் ஆகியவற்றிலும் ஹாங்காஹ் மற்றும் மகௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களிலும் செய்தியாளர் நிலையம் அமைந்துள்ளது. இதன் மூலம் மாபெரும் தகவல் வலைப்பின்னல் உருவாகியுள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஸவிட்சர்லாந்து, ரஷியா, ஸ்பெனிஷ், கனடா, மாலி,பிரேசில், கியூபா, அமெரிக்கா முதலிய 10க்கும் அதிகமான நாடுகள் பிரதேசங்களின் வானொலி நிலையங்களுடன் நிகழ்ச்சி ஒத்துழைப்புறவை 1987ம் ஆண்டு முதல் சீன வானொலி நிலையம் மேற்கொள்ள துவங்கியது.
ஆண்டுதோறும் சுமார் 200 நாடுகள் பிரதேசங்களில் வாழ்கின்ற நேயர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. வெளிநாட்டு நேயர்கள் விரைவாகவும் வசதியாகவும் பயன் தரும் முறையிலும் சீனாவை அறிந்து கொள்ளும் வழிமுறையாக சீன வானொலி நிலையம் மாறியுள்ளது. 2002ம் ஆண்டில் 11 லட்சத்து70 ஆயிரம் நேயர் கடிதங்கள் சீன வானொலிக்கு வந்து சேர்ந்தன.
1998ம் ஆண்டு டிசெம்பர் திங்களில் சீனா வானொலி நிலையம் தனது இணைய தளத்தைத்துவக்கியுள்ளது. தற்போது சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி, ஜெர்மன், ஜப்பானிய, ரஷிய மொழி, ஸ்பெனிஷ் மொழி, போர்த்துக்கீசிய மொழி உள்ளிட்ட 16 அந்நிய மொழிகளிலும் 17 மொழி இணையக்கிளைகள் இடம் பெறும் பன்னோக்க இணையத் தொகுதி நிறுவப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டில் சீன வானொலி நிலையத்தின் இணைய தளம் அரசின் முக்கிய செய்தி இணையதளமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது முதல் வெளிநாட்டு வானொலிகளின் மூலம் அதன் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் ஆற்றலை அதிகரித்துள்ளது. 2003ம் ஆண்டு ஜுலை திங்கள் முதல் ஆங்கிலம், ரிஷிய மொழி,ஜெர்மன், பிரெஞ்சு மொழி, ஸ்பெனிஷ் மொழி உள்ளிட்ட 16 அந்நிய மொழிகள் நாளுக்கு நாள் சுமார் 80 மணி நேரத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா, ஸபெயின் முதலிய நாடுகளின் ஏஎம், எப் எம் அலைவரிசை மூலம் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒலிபரப்புகின்றது.

Labels: , ,

8/26/13

இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி?

நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று www.wintechmobiles.co m/tools/huawei- code-calculator உங்களுடையDONGLEஇன் IMEIகொடுத்து
CALCULATE கொடுக்கவும்.
இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.
அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்தஇடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.

Labels: , , ,

8/25/13

கனடிய தமிழ் வானொலி தனியார் மயமாகிறதா?

 தமிழ் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் குருதி சிந்தி, வியர்வை சிந்தி மக்கள் குழுமமாக தங்கள் பலமாக கனடிய தமிழ் மக்கள் தமிழ் ஊடகங்களை உருவாக்கினர்.

அந்தவகையில் உருவாக்கப்பட்டவையே கனடிய தமிழ் வானொலி (CTR), தமிழ் விசன் இங்க் தொலைக்காட்சி (TVI), கனடிய பல்கலாச்சார வானொலி (CMR). இவற்றை நிர்வகிப்பதற்கு நம்பிக்கையானவர்கள் எனக்கருதியவர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தனர்.

அந்தவகையில் பொறுப்பில் இருந்தவர்;, இருப்பவர் தான் பிரபா செல்லத்துரை மற்றும் ஸ்ரெயின்ஸ்லெஸ் அன்ரனி ஆகியோர். அவர்கள் வகித்த பொறுப்புக்களுக்காக கணிசமான (ஒரு லட்சத்திற்கு மேற்ப்பட்ட) ஊதியத்தையும் இவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் இவ்வூடகங்களை முழுமையாக நிர்வகிக்க நம்பிக்கையானவர்களைக் கொண்ட நிர்வாகிகள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

தமிழர் சொத்தான இவ் ஊடகங்களை தமிழ் மக்கள் நலனுக்காகவே நல்ல முறையில் பேணுவார்கள், இதனை தமிழ் மக்கள் சொத்தாகவே தொடர்ந்தும் பேணுவார்கள், வரும் வருவாயை தமிழ் மக்கள் நலன்களுக்கு பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை அனைத்துத் தமிழ் மக்களிடமும் இருந்தது.

அதேவேளை இவ் மக்கள் சொத்தை மக்கள் பிரிதிநிதிகளைக் கொண்ட அறங்காவல் குழு ஒன்றின் கீழ் கொண்டுவருவதன் மூலம் இதனை யாரும் கையகப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்த முயற்சிகள் தொடர்ந்தும் மேற் கொள்ளப்பட்டன.

இந்நிலையிலேயே உரிமை கோரி பிரபா செல்லத்துரை வழக்கொன்றைத் தொடுத்தார். இந்த வழக்கே தற்போது தமிழர் சொத்தான ஊடகங்களின் உரிமையாளர் யார் என்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. கனடிய பல்கலாச்சார வானொலியின் (CMR) முழுமையான உரிமையாளர் நான் தான் என சொல்கிறார் ஸ்ரெயின்ஸ்லெஸ் அன்ரனி. இல்லை தமிழ் விசன் இங்க் தொலைக்காட்சி (TVI) இல் இருந்து தான் கனடிய பல்கலாச்சார வானொலி வந்தது எனவே நான் தான் உரிமையாளர் என்கிறார் பிரபா செல்லத்துரை.

இது மக்கள் சொத்து என்ற ஒரே காரணத்துக்காக தங்கள் நேரம், பணம், அனைத்தையும் ஒதுக்கி இவ்வூடகங்களினூடாக எந்தவொரு வருவாயையும் எதிர்பார்க்காமல் மக்கள் பணி செய்ய பல நூற்றுக்கணக்கானோர் இன்று ஏமாற்றப்பட்டுள்ளனர். மக்கள் சொத்து என நம்பித் தோள் கொடுத்த பல வர்த்தகர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை நிர்வாக குழுவில் இருக்கும் பலர் தொடர்ந்தும் மக்கள் பக்கமே உறுதியாக உள்ளனர். மக்கள் வழங்கிய பொறுப்பிற்கு பாத்திரமாகவும் உள்ளனர். பொறுப்பில் இருந்த இருக்கும் சிலர் தமது உறவினர்களை (முழுமையாக விபரம் விரைவில் வெளியிடப்படும்) இவ் நிர்வாக குழுவில் நியமித்துவிட்டு அவர்களை தம் பக்கம் வைத்துக் கொண்டே இன்று இவ் தமிழ் மக்கள் ஊடகங்களை தம் சொத்துரிமையாக்க முயல்கின்றனர். படித்தவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று நம்பியவர்களே இவ்வாறு சோரம் போவதே தமிழ் மக்கள் பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.

மக்கள் சொத்தில் ஏன் இந்த வெறி என்று சிலர் கேட்பது புரிகிறது. குறிப்பாக ஒரு பண்பலை வானொலி (FM) தற்போது பல மில்லியன் டொலர்கள் பெறுமதியானது என்பதே இதன் பின் உள்ள சூத்திரமாகும். மக்கள் நலனுக்கு பயன்பட வேண்டிய பணத்தை தங்கள் தனிப்பட்ட எதிர்காலத்தை வளப்படுத்தவும், தங்கள் குடும்பம் மட்டும் நல்லாக இருந்தால் போதும் என்று சிலர் நினைப்பதுவும் தான் முள்ளிவாய்கால் பேரவலம் போல் இங்கும் விரிகிறது.

அதிலும் வேதனையான விடயம் நம்பிக்கைக்கு துரோகமாக பண விடயத்திலும் பல மோசடிகள் நடந்துள்ளதாக தொடர்ந்தும் ஆதாரங்களுடன் வெளிவரும் செய்திகளே. அதுவும் பல லட்சம் டொலர்கள் பெறுமதியான மோசடிகள் என்கிறது தகவல்கள். இதில் வேதனையான விடயம் என்னவென்றால் சுருட்டியது போதாது என்று முழுமையாக கையகப்படுத்தவும் சிலர் முனைவது தான்.

ஒன்றுக்கு ஒன்று தம்மை வலுப்படுத்தி நிற்கும் என்று கருதப்பட்ட மூன்று ஊடகங்களும் இன்று தனியாக்கப்பட்டுள்ளன. இதில் கனடியத் தமிழ் வானொலி மட்டும் முழுமையான மக்கள் சொத்தாக்கும் நிலையில் உள்ளது. ஏனைய இரண்டும் தமிழ் விசன் இங்க் தொலைக்காட்சி (TVI), கனடிய பல்கலாச்சார வானொலி (CMR) என்பவற்றை தம் தனிப்பட்ட சொத்தாக்க முயற்சிகள் தொடர்கின்றன.

இதில் மாற்றத்தை ஏற்படுத்த பல்தரப்பாலும் எடுக்கப்பட்ட பல முயற்சிகளும் எந்தவித நல்ல பெறுபேறையும் எட்டவில்லை. அலைக்கழிப்பும், ஏமாற்றலுமாகவே இம்முயறிசகள் முள்ளிவாய்காலுக்கு பின்னரான நான்கு வருடமும் கழிந்துள்ளது. இந்நிலையிலேயே பொறுத்தது போதும் என்ற வகையில் கனடிய தமிழ் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். கனடிய வானொலி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கடிதங்கள் அனுப்ப முனைந்துள்ளனர்.

கனடிய பல்கலாச்சார வானொலி (CMR) மீண்டும் தன் உரிமத்தை புதுப்பிக்க முனைந்துள்ள நிலையில் அதில் தான் தான் முழுமையான உரிமையாளர் என்று ஸ்ரெயின்ஸ்லெஸ் அன்ரனி கோருவதை முழுமையாக விசாரித்து உண்மையை கண்டறியுமாறு கோருகின்றனர்.

மக்கள் சொத்தான ஊடகத்தை மக்கள் சொத்தை உறுதிப்படுத்துமாறு வேண்டுகின்றனர். மக்களின் இப்பேரெழுச்சி மக்கள் சொத்தை காக்கும் எனத்திடமாக நம்புவோம். மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்து வாழும் ஈனப்பிறப்பை கைவிடுவோம். மேலும் விபரமான விபரங்கள் விரைவில்http://goldtamil.com/?p=2751

Labels:

8/23/13

Vasanth tv தற்பொழுது டாடா ஸ்கை இலவசமாக விடப்பட்டுள்ளது !!

வசந்த் டிவி  தற்காலிகமாக டாடா ஸ்கை அலைவரிசையில் இலவசமாக விடப்பட்டுள்ளது .இதன் ஒரு சில படகாட்சிகள் உங்களுக்காக இதோ ,

TP     :   11470
SR    ;    30000
PO    ;     H







VIDEOCON டிடிஎச் சேவையில் AIR தமிழ்  மற்றும்  RAINBOW சென்னை  ஆகிய இரண்டு தமிழ் ரேடியோ சேனல்கள் இலவசமாக கிடைக்குறது .அதான் ஒரு சில படகாட்சிகள் உங்களுக்காக இதோ ,



Labels: , ,

8/21/13

2018 ல் நான்கில் ஒரு வீடு DTH இணைப்பு கொண்டதாக இருக்கும் � டிஜிட்டல் ஆய்வறிக்கை...!!

கட்டண தொலைக்காட்சி மற்றும் DTH வீடுகளின் எண்ணிக்கை 2018  ஆண்டில் சுமார் 251 மில்லியனை அடையும் எனவும், 2008 இல் 103 மில்லியனாகவும் பின்பு 2012 இறுதியில் 178 மில்லியன் ஆக இருந்த எண்ணிக்கை 2018  ஆம் ஆண்டில் கணிசமாக உயரும் என டிஜிட்டல் தொலைக்காட்சி ஆராய்ச்சியின் ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது... ஏறக்குறைய 97 நாடுகளில் இருந்து கணக்கிடப்பட்ட கணக்கீடு ஆகும்.

செயற்கைக்கோள் கட்டண தொலைக்காட்சி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2012 மற்றும் 2018 இடையே சுமார் 73 மில்லியன் ஆக அதிகரிக்கும் எனவும், இதில் இந்தியாவில் இருந்து மட்டும் 24.4 மில்லியன், பிரேசில் 9.2 மில்லியன், இந்தோனேஷியா 6.8 மில்லியன் மற்றும் ரஷ்யா 5.9 மில்லியன் ஆகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், உலகளாவிய சேட்டிலைட் டிவி முன்னறிவிப்புகளானது மற்ற புதிய தளங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தின் காரணமாக
மேலும் வாசிக்க

Labels: , ,

8/20/13

செப் 14 கேப்டன் டிவி குழுமத்தின் புதுவு வரவு!!!

செப் 14 அன்று தேமுதிக கட்சி 9ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அன்று முதல் கேப்டன் குழுமத்தின் சார்ப்பாக ஏற்கனவே கேப்டன் டிவி , கேப்டன் நியூஸ், உள்ள நிலையில் கேப்டன் மியூசிக் பாடல் சேனல் துவங்கபடும் என்று நிறுபர்கள் சார்பாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது நடந்து வருவதாக பெயர் கூற விரும்பாத நண்பர் தகவல் நமக்கு கொடுத்துள்ளர் , தமிழகத்தில் சில பெரிய மீடியாக்களில் பணி புரியும் பெண் பணியாளர்கள் வருவார்கள் என்று நமக்கு மட்டும் கிடைத்த ஒரு ரகசிய தகவல். எது எப்படியோ நியூஸ் சேனல் தடுக்கப்பட்டது போன்று இதுவும் தடுப்பு காவலில் வைக்காமல் இருந்தால் போதும் என்பதே நம்முள் எழுந்துள்ள கருத்து!!!

தமிழ் செய்திகளை படிக்க நமது தமிழ்சாரல் தளத்தை பாருங்கள் விரைவில் பிரமாண்டமாய். www.tamilsaral.net

Labels: , , ,

டென் ஸ்போர்ட்ஸ் தனது தலைமை அலுவலகத்தை இந்தியாவிற்கு மாற்ற முடிவு ...!!

டென் ஸ்போர்ட்ஸ் தனது தலைமை அலுவலகத்தை இந்தியாவிற்கு மாற்ற முடிவு , துபாய் நடவடிக்கைகளை இந்தியாவிற்கு மாற்ற உள்ளதால்... ஊழியர்கள் வெளியேற அல்லது சம்பளத்தை குறைக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
துபாயில் உள்ள பணியாளர்களின் குடும்பங்கள் பலர்  இன்னும் நிச்சயமற்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்... ஏனெனில் துபாய் மீடியா சிட்டி சார்ந்த நிறுவனம் அதன் துபாய் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு செப்டம்பர்15 முதல் இந்தியாவில் தனது செயல்பாடுகளை மாற்றப்போகிறது.. இது பற்றி அதன் ஊழியர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
ஒரு சிலருக்கு வெளிப்படையாக தனிப்பட்ட அனுபவம் மற்றும் பதவிகளை பொறுத்து நிர்வாக வசதிக்கு ஏற்ற அடிப்படையில் இந்திய ரூபாய் மதிப்பிற்கு ஊதியம் குறைக்கப்பட பேச்சுவார்த்தைகளும் மற்றும் சிலருக்கு வெளியேறும் படியும் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர், எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் வாசிக்க

Labels: , , ,

TV 18 மீடியா 300 க்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கம் செய்தது !!

TV18  துறைகள் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கம் செய்தது அவர்களின்  செயல்முறையில் தோன்றுகிறது.
டிவி 18 பிராட்காஸ்ட் லிமிடெட், சேனல்கள் CNBC-TV18, CNBC Awaaz, CNN-IBN, IBN7 மற்றும் IBN Lokmat  என இயங்கும் நெட்வொர்க் 18 லிமிடெட்டில் உள்ள அதன் பலதரப்பட்ட  ஊழியர்களையும் நீக்கம் செய்துள்ளது.
 பல தரப்பட்ட பிரிவு துறைகள் முழுவதும் சுமார் 300 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்ககூடும் என நமக்குள் ஒரு எண்ணம்  தோன்றுகிறது. நிறுவனத்தின் ஆதாரங்களின் படி மொத்த ஊழியர் நீக்கத்தில் CNN-IBN மற்றும் ஐபிஎன் 7 சேனல்களில் இருந்து அதிகம் பேர் செல்ல கேட்டுகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 செய்தி அறிக்கை தாக்கல் செய்யும் நேரத்தில், மக்கள் இன்னும் தங்கள் கைகளில் பணி நீக்க கடிதங்களுடன் குழுமி இருந்தனர்; எம்பையர் வர்த்தக மையத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பதட்டத்துடன் காணப்பட்டனர்...  ஊழியர் ஒருவர் கூறுகையில் தாங்கள் வெறுமனே அலுவலகத்திற்கு  வரவழைக்கப்பட்டு கையில் கடிதங்களை கொடுத்துள்ளனர்", என்றார். IBN7 சேனலில் மட்டும் கிட்டத்தட்ட மொத்த குழுவினரும் முழுவதுமாக போக சொல்லிவிட்டார்கள். என்றும் தெரிவித்தார்.
 மற்றொரு பணியாளர் கூறுகையில்: "பணி நீக்கம் கடிதங்கள் கொடுக்கப்படாத ஊழியர்கள் நமக்கு எப்போது எந்த நேரத்தில் கடிதம் கொடுப்பார்கள் என்று பயத்தில் உள்ளனர்."
மேலும் வாசிக்க

Labels: ,

8/18/13

தமிழ்சாரல் வெற்றிகராமாக உதயமானது !!!

தமிழ்சாரல் ஆன்லைன் செய்திதாளம் இன்று ஆக18 முதல் உதமாகிறது.  தமிழகம் முதல் தரணியெங்கும் உங்கள் கிராமம் முதல்  கிளிநொச்சி வரை  காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை எட்டு திசைகளிலும் நடக்கும் செய்திகளை  கொண்டு வரும் தமிழ்சாரல் ஆரம்பமாகிவிட்டது. பெண்கள் தற்காப்பு முதல்  அரசியல் ஊழல் வரை கண் முன்னே நடக்கும்  காவல் வழிப்பறி முதல்  கண்கானிப்பாளர் வரை ஊழல் , லஞ்சம் , ஆகியவற்றை மட்டும் மல்லாமல்   மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு துருப்புச்சீட்டாகவும் எழுத்து  சுதந்திரம் இல்லாவிடில் சிறை செல்லும் சிகரமாகவும் தமிழ் மொழியில்  சாரல்  மழை பொழியவுள்ளது அனைவரும் உங்கள் மேலான ஆதரவை தர  வேண்டும் என்றும் . தமிழகம் முதல்  தமிழர் வாழும் இடம் எங்குவாயின் நடக்கும்  நிகழ்வுகளை உடனே நீங்களை தமிழ்சாரல் தளத்தில் செய்தி வெளியிடலாம்.  இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் புகைபடம் மற்றும் உங்கள் முகவரியை    எங்களுக்கு கிடைக்கும் மாறு  news@tamilsaral.net  என்ற ஈமெயில் முகவரிக்கு  அனுப்பி வைக்கவும் அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தமிழ்சாரல் தளத்தில்  பணி வழங்கப்படும் . மேலும் விபரங்களுக்கு  மெயில் அனுப்பவும்.

www.tamilsaral.net

Labels: , , , , ,

8/15/13

தமிழன் டிடிஹச்-யின் சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!

ஆக 15 இன்று இந்தியநாடே தனது சுதந்திர தின விழாவை கொண்டாடி கொண்டிருக்கிறது . இந்த அழகான தறுனத்தில் தமிழன் டிடிஹச்யின் வாசகர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்ன தான் என் நாடு சுதந்திரம் பெற்றாலும் மீன் பிடிக்கும் தமிழனுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தான் வேதணை இதை பற்றி நான் இன்று கூற விரும்பவில்லை விரைவில் எழுத்து சுதந்திரம் உதிக்கவுள்ளது.



எதிர் பாருங்கள் விரைவில் . 

Labels: , , , ,

8/14/13

தள்ளுபடி - பிஸ் கீ செட்டாப் பாக்ஸ் !!!




ஆக 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் பிஷ் கீ செட்டாப் பாக்ஸ் புல் எச் டி ரிசிவர் தள்ளுபடி மேலா அனைத்து விதமான பிஷ் கீ செட்டாப் பாக்ஸ்களும் ரூ 2500 முதல் கம்பெனி பெயர்கள் பின் வருமாறு .

                SOLID , YURI , MELBORN , ONIX , I BELL , BAGARIA , 

போன்ற முன்னனி கம்பெனிகளின் ரிசிவர்கள் கிடைக்கும். இதன் திறன் FULL HD , BISSKEY , CONAX , ALL VIDEO FORMAT SUPPORT , 16 PORT DISEQC CONNECT OPTION. இது போல அனைத்து வசதிகளுடன் கிடைக்கும் இன்று ஆகஸ்ட் 15 ஒரு நாள் மட்டுமே.

Labels: , , , ,

SHARP MPEG4 செட்டாப் பாக்ஸ் விற்பனைக்கு !!!

SHARP கம்பெனியின் எம்பெக் 4 திறன் கொண்ட செட்டாப் பாக்ஸ் விற்பனை செய்யப்படவுள்ளது . விலை ரூ 700 மட்டுமே . மேலும் தகவல் மற்றும் விசாரணை செய்ய உங்களுக்கு இந்த பாக்ஸ் உரிமையாளரின் தொலைபேசி தொடர்பு கொள்ளவும் 9688025060.

Labels:

8/13/13

விரைவில் உதயமாகும் தமிழ் சாரல் ?????


Labels: , ,

8/8/13

1000ஜிபி திறனுடன் புதிய விடியொகான் செட்டாப் பாக்ஷ்!!!


Labels: , , , ,

8/7/13

AIRCEL FREE 3G OFFER IN TAMILNADU


Labels: , , , ,

8/5/13

SKYBOX F5 புதிய ஹச்டி தற்பொழுது அறிமுகம்!!!



skybox f5 புல் ஹச்டி திறனுடன்  யுஎஸ்பி போர்ட் வசதியுடன் , அனைத்து விதமான ஆடியோ வீடியோகளையும் இயக்கும் சக்தி வாய்ந்த திறன், மற்றும் டிடிஎச் ஸ்மார்ட் கார்டுகளை இயக்கும் திறன் ( சி பேண்ட் ) , ஜி மெயில், யு டுப், முகப்புபக்கம், ஆன் லைன் வீடியோக்கள் அனைத்தையும் டேடா கார்டு மூலம் அல்லது இன்டர்நெட் மூலம் பார்க்கலாம், 2ஜி அல்லது 3ஜி சேவைகளில் தெளிவாக நமக்கு படங்களை காட்டு அளவு திறன் வாய்ந்த ஸ்டார் டேர்க் கேலக்ஜி தற்பொழுது தமிழ்நாட்டில் முதல் முறையாக நமது தமிழ், ஆங்கிலத்தளங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதமான ENcryption களையும் ஏற்றுக்கொள்ளும் திறனும் இதற்குண்டு கூறிப்பாக BISSKEY, IRDITO , CONAX, NACA, EXTRA . இந்த பாக்ஸ்களை நீங்க பெற உங்கள் மொபைலில் 
9095319220 அல்லது 9842980110 என்ற இலக்கங்களை டயல் செய்து ஆர்டர் செய்யலாம். இதன் ஒரு சில படக்காட்சிகள் உங்கள் முன் சமர்பிக்கிறோம்.


மேலும் வாசிக்க

Labels: , , , , ,

8/2/13

பெண்கள், கல்வி , கலைசாரல் டிவி யின் சோதணை ஒளிபரப்பு ஆரம்பம்!!!


Imageபுதியதலைமுறை குழுமத்தின் புதிய சேணல்களானச்  பெண்கள் கல்வி மற்றும் கலைசாரல் டிவி தனது சோதணை ஒளிபரப்பை இன்டல்சாட் 68.5 யில் துவங்கியுள்ளது . கலைசாரல் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் , கல்வி டிவி படிப்பு சார்ந்த அம்சங்களுக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு சில படக்காட்சிகள் இதோ உங்களுக்காக.
Satellite:Intelsat20@ 68.5 deg
Fre:4005
Pol:Ver
Symrate:7200
Format:mpeg4 dvbs2 8 psk
மேலும் வாசிக்க

Labels: , , , , , , ,