1/5/15

வானொலிகளின் வசந்தகாலம் ஆரம்பம்!!!


நாள் முழுவதும் செய்திகள் என்று கண்களுக்கு ஓய்வே இருப்பதில்லை. தொலைக்காட்சியில் பார்க்கத் தவறிய நிகழ்ச்சி களை இணையத்தில் பார்த்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் காதுகள்தான் கண்கள்! செவி வழி நுழையும் செய்திகள், பாடல்கள், வானொலி நாடகங்கள் கற்பனைகளை உருவாக்கிய அற்புதக் காலம் அது.
என் சித்தப்பாவிடம் பழைய காலத்து மாடல் வானொலி இருந்தது. டிரங்குப் பெட்டி மாதிரி இருந்த அந்த வானொலியைச் சிறுவயதில் பார்த்துப் பிரமித்திருக் கிறேன். காலை 6 மணிக்கு நிகழ்ச்சி கேட்க வேண்டுமானால், ஐந்தரைக்கே அதை தயார் செய்துவிடுவார் சித்தப்பா. வலது பக்கத்தில் இருக்கும் குட்டி பல்பு எரிந்து ‘சொய்ங்’ என்று சத்தம் எழுப்பிய படிப் பாட ஆரம்பிக்கும்போது அநேகமாக எங்களுக்குத் தூக்கம் கலைந்திருக்கும். வானொலியில் துணி காயப்போடும் கம்பி மாதிரி நீண்ட ஏரியல் அதில் இருக்கும்.
அறியாமையின் அழகு!
‘இந்தப் பொட்டியிலிருந்து எப்படி சித்தப்பா பாட்டுக் கேக்குது?’ என்று கேட்ட போது சித்தப்பா சொன்ன விளக்கத்தை மறக்கவே முடியாது. மிகப் பெரிய ரகசியத்தை எங்களிடம் மட்டும் சொல்வது போன்ற பாவனையுடன் மெதுவாகச் சொல்வார், “பாட்டுப் பாடுறவங்க மொத நாளே இந்தப் பொட்டிக்குள்ள போய் உக்காந்துக்குவாங்க… பாடி முடிச்சவுடனே காத்துல ஏறிக் காணாமப் போய்டுவாங்க.” சிறுவர்கள் எங்களுக்கு என்ன தெரியும், நம்பித்தொலைத்தோம். ஆனால், அந்த அறியாமை பல கற்பனை களைத் தூண்டிவிட்டது தனிக் கதை.
வானொலியைப் பொக்கிஷம் போல் பாதுகாத்தார் சித்தப்பா. வானொலிப் பெட்டியைச் சுற்றி மரத்தாலான காப்புப் பெட்டியைப் பொருத்தி வைத்திருந்தார். மேலிருந்து கீழே இறக்கி மூடும் கண்ணாடிக் கதவு உண்டு அதற்கு. சிறுவர்கள் எங்கள் கைபடாத உயரத்துக்கு வானொலியை வைத்திருப்பார் சித்தப்பா. அவருக்குத் தெரியாமல் யாரேனும் தொட்டால் தொலைத்துவிடுவார். “நூறு ரூபா குடுத்து வீராவரத்தில் வாங்கினதுடா” என்பார்.
டெல்லி அஞ்சலில் ஒலிபரப்பாகும் இந்துஸ்தானி இசையை அதில் கரகரப் பாய் கேட்கும்போது வித்தியாசமாய் இருக்கும். அப்பாவும் வானொலி விசிறிதான். அவரால் வந்தே மாதரம் கேட்காமல் அன்றும் இன்றும் என்றும் அவரால் நாளைத் தொடங்க முடியாது. சூரியன் உதித்தும் உதிக்காமலும் இருக்கும் அந்தக் கருக்கலோடு இயைந்த அந்தக் காலைவேளை வானொலியின் மங்கல இசை கேட்கும்போது, உலகமே கொஞ்சம் கொஞ்சமாய் பிரகாசமாவதாய்த் தோன்றும்.
நெல்லை வானொலியின் சான்றோர் சிந்தனை அப்பாவுக்குப் பிடித்தமானது. நாகூர் ஹனிபாவின் பாடல்கள், பி.சுசீலா வின் ‘தாமரைப்பூவில் அமர்ந்தவளே..’ பாடல், ‘ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?’ பாடல் என்று காலையில் ஒலிக்கும் பாடல்கள் மனசை லேசாக்கிவிடும். தென்கச்சி சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலும் மறக்க முடியாதது.
இலங்கை எனும் பூங்காற்று
இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம், விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு, பிபிசியின் தமிழோசை, ஆல் இந்தியா ரேடியோ என்று பல வானொலி நிலையங்கள் எங்கள் காதுகளுக்குச் சாமரம் வீசின. இலங்கை வானொலியின் மயில்வாகனம், கே.எஸ்.ராஜா, ராஜேஷ்வரி சண்முகம், பி.எச்.அப்துல் ஹமீது, விமல் சொக்கநாதன், சில்வெஸ்டர் பாலசுப்ரமணியம், கமலினி செல்வ ராஜன், எழில்வேந்தன் ஆகியோரின் குரல்களுக்குக் கடல் கடந்தும் ரசிகர்கள் இருந்தார்கள்.
‘பிறந்தநாள்… இன்று பிறந்தநாள்’ என்ற பாடலுடன் தொடங்கும் வாழ்த்து நிகழ்ச்சியை என்றுமே மறக்க முடியாது. வாழ்த்துபவர்களின் பட்டியலில் ‘அப்பப்பா, அம்மம்மா’ என்று சொல்லும்போது உறவுமுறைப் பெயர்கள்குறித்து ஆச்சரியம் ஏற்படும். நமக்கே பிறந்தநாள் வந்ததைப் போல் அறிவிப்பாளர்களின் குரல்கள் ஆனந்தப் படுத்தும். 30 ஆண்டுகளுக்கு முன் வந்த பாடலின் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் பற்றிய தகவல்களை எந்தக் குறிப்பும் இல்லாமல் நினைவில் இருந்தே எடுத்துச் சொல்வார்கள். அந்த அளவுக்கு ரசனை மிகுந்த அறிவிப்பாளர்கள் அவர்கள்.
செய்திகள் வாசிப்பது…
அகில இந்திய வானொலியும் சளைத்ததல்ல. ‘செய்திகள் வாசிப்பது சரோஜ்நாராயண் சுவாமி’ என்ற அந்தக் கரகரப்பான காந்தக் குரலை மிகவும் நேசித்தோம். இடையிடையே நிறுத்தி மூச்சு வாங்க எடுத்துக்கொள்ளும் அவர் பாணி வித்தியாசமானது. சில நாட்களில் அவர் செய்தி வாசிக்கும்போது தாள்களை நகர்த்தும் சத்தம்கூடத் தெளிவாய்க் கேட்கும். கோபால் பல்பொடி, பொன்னான புதிய ரக்சோனா, பாண்ட்ஸ் என்று பல்வேறு பொருட்களின் விளம்பரங்களைக் கேட்பதே ஆனந்தமாக இருக்கும். நாம் பயன்படுத்தும் பொருளைப் பற்றி வானொலியில் சொல்கிறார்களே என்று ஒரு சின்ன குதூகலம் இருக்கும்.
இன்றும் வானொலிக்கான தனி ரசிகர்கள் உண்டு. ஆனால், காதுகளுக்காக மட்டும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பான காலம் முடிந்துவிட்டது. பண்பலையில் பாட்டும் பேச்சும் என்று பல விஷயங்கள் ஒலிபரப்பாகின்றன. என்னவோ அவற்றில் மனம் லயிப்பதில்லை. இளமைக் காலத்தில் வானொலியில் கேட்ட பாடல் களைக் கேட்கும்போது, அந்தக் கால நினைவுகளின் இனிமையை இன்றும் உணர முடிகிறது.
- முனைவர் சௌந்தர மகாதேவன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர்,தொடர்புக்கு: mahabarathi1974@gmail.com​

நன்றி தமிழ் ஹிந்து 

Labels:

1/1/15

இலங்கையில் செரண்டிப் பத்திரிக்கை, வானொலி தொலைக்காட்சி ஆரம்பம்!!!

இலங்கையில் செரண்டிப் பத்திரிக்கை, வானொலி தொலைக்காட்சி ஆரம்பம் 

 

 

இலங்கையின் இஸ்லாமிய ஊடக நிறுவனமான “தேசிய நியுஸ் ஏஜென்சி ” இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் கௌரவ அதிதிகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், ரவுப் ஹக்கீம், உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், விஷேட அதிதியாக சர்வதேச மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பின் இந்திய உப கண்டத்திற்கான பொறுப்பாளர்  அஷ் ஷெய்க். காலித்பின் சாலிஹ் அல்-தாவூத் கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முஸம்மில், சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், இலங்கையில் உள்ள தூதுவராலயங்களின் தூதுவர்கள், பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
“செரண்டிப்” எனும் பெயரில் தமது ஊடகத்தை ஆரம்பித்துள்ள “தேசிய நியுஸ் ஏஜென்சி ” இன்று முதல் செரண்டிப் தினசரி பத்திகை ஒன்றை வெளியிடவிருக்கும் அதேவேளை “செரண்டிப் கேர்பில் தொலைக்காட்சி மற்றும் செரண்டிப் இணைய வானொலி ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீனும் தலைமை உரையை ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் நிகழ்த்தினர்.
இதன்போது இணைய தொலைக்காட்சி சேவையை அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும், இணைய வானொலி சேiவையை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியவும், பத்திரிகை வெளியீட்டினை உலக முஸ்லிம் முன்னணியின் தலைவர் அஷ் ஷெய்க். காலித்பின் சாலிஹ் அல்-தாவூத் ஆகியோரும் உத்தியோக பூர்வமாக வெளியிட்டு வைத்தனர்.

Labels:

12/30/14

Whatsapp யில் புதிய வசதி வானொலி தொடர்பான செய்திகளை பெறலாம்!!!




WhatsAppல் Dxers Guide  எனும் நமது ஆங்கில வானொலி தொடர்பான இதழ் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி தினமும் வானொலித் தொடர்பானத் தகவல்களை உங்களின் கைப்பேசியிலேயே உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும். உங்களுக்கும் இந்தத் தகவல்கள் வேண்டுமாயின் உடனே உங்களைப் பற்றிய விபரங்களை ardicdxclub@yahoo.co.in எனும் மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.

Labels: , , , ,

12/29/14

பிபிசி தமிழ்ச் சேவையில் தற்பொழுது போலவே தொடர வேண்டும்!

லண்டனைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி தமிழ்ச் சேவையை, டில்லிக்கு மாற்றி ஹிந்தியுடன் இணைப்பது தமிழர்களுக்குச் செய்யும் கேடு – இப்பொழுது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
1920-களில் இங்கிலாந்து, தன்னுடைய காலனி நாடுகளுக்கான ஒரு பொது வானொலிச் சேவை உருவாக்கியது.  இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ரெத் என்பவரின் சிந்தனையில் துவங்கிய இந்த வானொலிக்கு ஆரம்பத்தில் ஜான் ரெத் தலைவராக இருந்துவந்தார் 1927 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இது மூடப்படவேண்டிய நிலையில் இருந்தபோது பிபிசி உலகப் பொது அமைப்பின் (தற்போதைய அய்.நா. போன்ற அமைப்புடன்)  பொது நிதியில் இயங்க ஆரம்பித்தது. (அதுவரை பிரிட்டன் நாடாளுமன்ற கட்டுப்பாட்டில் இருந்து வந்தது) பிபிசி என்ற பெயர் பிரபலமாகிவிட்டதால் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து அழைக்கப்பட்டது.  
பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். 
பிபிசி தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தள சேவைகளை வழங்குகிறது. இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும். 
28 மொழிகளில் ஒலிபரப்பு!
இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது. உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒலிரப்புகிறது.
தமிழோசை நிகழ்ச்சிகளை பிப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் நேரடி ஒலிபரப்பு செய்து வந்தது எனினும் ஈழப்போர்ச் செய்திகளைப் பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பிப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினுடான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது.
இந்நிலையில் தமிழ்ச் சேவை ஒலிபரப்பினை பிபிசி ஹிந்தி சேவையுடன் இணைந்த நிலையில் டில்லியில் இயங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிபிசி அறிவித்துள்ளது. பிபிசி பேச்சாளர் ஒருவர் இது தொடர்பில் தகவல் தருகையில், பெருகிவரும் நேயர்களுக்கு ஏற்ப பிபிசி தமிழ்ச் சேவை புதுடில்லிக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பிபிசி தமிழ்ச் சேவை இந்தியாவில் உள்ள தமிழ் நேயர்களை கவர்ந்துள்ளது. இந்தநிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கை நேயர்களைக் கருத்திற்கொண்டு இந்த மாற்றம் இடம்பெறுவதாகவும் பிபிசியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழோசை என்பது பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையாகும். இவ்வானொலி சேவையானது 1941 மே 3 ஆம் நாள் முதல் இயங்கி வருகின்றது. இவ்வானொலி ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் தமிழ் மொழியில் உலகச் செய்திகளையும் வேறு பல நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றது. இங்கு இந்திய, இலங்கைச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதோடு செய்தியரங்கம் பகுதியில் அவை விரிவாக ஆராயப்படுகிறது. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இச்சேவை வானலைகளில் ஒலிபரப்பப்படுவதோடு ஏனைய பிரதேசங்களில் இணைய தளத்தில் பரப்பப்படுகின்றன.
பிபிசி தமிழ் நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம்  தனது தேசியச் சேவையில் மறு ஒலிபரப்பு செய்கிறது. 
 இடமாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு
பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 70 லட்சம் நேயர்கள் உள்ளனர்.  முக்கியமாக பிபிசி தமிழோசை நிகழ்ச்சி உலகம் முழுவதிலுமுள்ள புலம்பெயர் தமிழர்களுக்குப் பொதுவான ஓர் தகவல் தளமாக இருந்து வருகிறது.
டில்லிக்கு மாற்றப்படும் நிலையில் இந்தி மொழியின் ஆதிக்கம் தமிழோசையிலும் மேலோங்கும். 
டில்லிக்கு மாற்றப்படும்போது பெருவாரியான இலங்கைத் தமிழர்களின் செய்தியைக் கொண்டு செல்வதில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்திய இலங்கை நட்புறவின் காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளையே அதிகம் ஒலிபரப்பப்படும், அதே வேளையில் இந்தியத் தமிழர்களுக்கான பயனுள்ள எந்த ஒரு நிகழ்ச்சிகளும் அதில் இடம்பெறாத சூழல் ஏற்படும். 
பிபிசி போன்ற பொது ஒலிபரப்பு கூட்டு நிறுவனங்கள் தலைமையை விட்டு தூரச்செல்லும்போது அங்கு அரசியல் நுழையும் வாய்ப்புள்ளது. மேலும் பிபிசி தமிழோசை டில்லிக்கு மாற்றப்படும்போது ஒரே நிர்வாகத்தின்கீழ் இது வருவதால் பிபிசி தமிழோசைக்கு என்று முக்கியத்துவம் தரப்படுவது நிறுத்தப்படும் அபாயம் உண்டு.
முக்கியமாக சில தமிழ் விரோத சக்திகள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும்போது எதிர்காலத்தில் பிபிசி தமிழோசை முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும்.   எடுத்துக்காட்டாக இலங்கை வானொலியின் சுதந்திரமான அமைப்பில் அரசியல் நுழைந்த பிறகு தமிழ் ஒலிபரப்பு முற்றிலுமாக மக்களின் ஆதரவை இழந்து இன்று பெயருக்கு இயங்கி வருவதுபோல் பிபிசி தமிழோசையின் எதிர்காலமும் அமைந்துவிடும்.  இதனால் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களுக்குப் பொதுவான ஒரு தகவல் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
தமிழக அரசின் கவனத்துக்கு….
இத்தகைய காரணங்களால் இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம்  – அதே முறையில் செயல்படுவது தொடரப்பட வேண்டும்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களும், அமைப்புகளும், உலகத் தமிழர்களும், அமைப்புகளும் சிறப்பாக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மிக முக்கியமான பிரச்சினையில் கருத்தைச் செலுத்துமாறு வலியுறுத்துகிறோம்.
ஏதோ ஒரு வகையில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கின்றன. எல்லாவற்றையும் அரசியல் கண்கொண்டு பார்க்காமல் தமிழர்களுக்கான பொதுப் பிரச்சினையில் ஒத்த குரல் கிளம்புவது அவசியமாகும்.
இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Labels:

12/10/14

அமெரிக்காவின் டேரைக்ட் டிவியெ எடுத்து சென்ற இந்திய செயற்கைகோள்

ஜிசாட்-16 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா


தொலைத்தொடர்பு வசதியை மேம்படுத்த வகை செய்யும் இந்தியாவின் ஜிசாட்-16 செயற்கைக்கோள் 7/12/2014 அதிகாலை 2.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரூ ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏரியான் 5 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட 32-வது நிமிடத்தில் இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமான நிலைநிறுத்தப்பட்டது.
3,181 கிலோ எடை கொண்ட ஜிசாட்-16 செயற்கைக்கோள், தகவல் தொடர்புக்கான 48 டிரான்ஸ்பான்டர்களை கொண்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தயாரித்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் இதுவே மிகப்பெரியது.
ஜிசாட்-16 விண்ணில் ஏவப்பட்ட பிறகு, கர்நாடக மாநிலம், ஹாசனில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறை, இந்த செயற்கைக்கோளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. முதற்கட்ட சோதனையில் இந்த செயற்கைக்கோளின் செயல்பாடுகள் சீராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்தது.
மேலும் செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து முதல்முறையாக உயர்த்தும் பணி திங்கள்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு நடைபெறும் என்றும் இஸ்ரோ கூறியது.
ஜிசாட்-16 செயற்கைக்கோளை கடந்த வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக இதன் பயணம் 1 நாள் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் இப்பயணம் வானிலை காரணங்களுக்காக மேலும் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு, இறுதியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.10 மணிக்கு ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள 46 டிரான்ஸ்பாண்டர்களின் உதவியால் தொலைக்காட்சி, வானொலி சேவைகள், பெரிய அளவிலான இணையப் பயன்பாடு, தொலைபேசி இயக்கங்கள் மேம்படும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.
சுமார் ரூ.880 கோடி செலவிலான ஜிசாட்-16 செயற்கைக்கோளுடன் டைரக் டி.வி. என்ற அமெரிக்க நிறுவனத்தின் செயற்கைக்கோளையும் ஏரியான் 5 ராக்கெட் விண்ணில் செலுத்தியது. இந்நிலையில் விண்ணுக்குப் புறப்பட்ட 28-வது நிமிடத்தில் அமெரிக்க நிறுவனத்தின் செயற்கைக்கோளும், 4 நிமிடங்களுக்குப் பிறகு இந்திய செயற்கைக்கோளும் ஏவப்பட்டன.
ஜிசாட்-16-ஐயும் சேர்த்து இதுவரை 18 செயற்கைக்கோள்கைளை இஸ்ரோவுக்காக ஏரியான் விண்ணில் செலுத்தியுள்ளது.

Labels: , , , , , , ,

4/13/14

எண்ணியல் காலத்தில், தொழில் நுட்பத்தின் சீர்திருத்தம்

எண்ணியல் காலத்தில், தொழில் நுட்பத்தின் சீர்திருத்தம்

எண்ணியல் காலத்தில், தொழில் நுட்பத்தின் சீர்திருத்தமானது, உலகளவில் ஊடக நிலைமையில் என்னென்ன எந்த மாற்றங்களை ஏற்படுத்தும்? ஊடகத்துறையின் புத்தாக்க வளர்ச்சி, எந்தெந்த வாய்ப்புகளையும் அறைகூவல்களையும் எதிர்நோக்குகின்றது? ஊடகம் எந்த வழிமுறைகளில் புதிய ஆற்றலை உருவாக்கி, மனித நாகரிகத்தின் வளர்ச்சிப் போக்கில் மேலதிக கடமைகளை ஏற்றுக்கொள்ளும்?போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2014ஆம் ஆண்டு கூட்டத்தின் போது நடைபெறும் ஒரு கருத்தரங்காக, சீன வானொலி நிலையமும் போ ஆவ் ஆசிய மன்றமும் கூட்டாக ஏற்பாடு செய்யும் ஊடக தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டம் உலகின் 20 நாடுகளின் ஊடகத் தலைவர்கள் சீனாவின் போ ஆவிற்கு வந்து, எண்ணியல் காலத்தில் ஊடகத்தின் வாய்ப்புகளையும் எதிர்நோக்கும் அறைகூவலை, செய்தி ஊடக புத்தக்கத்தையும் கடமையையும் பற்றி விவாதிப்பார்கள்.

திரு. மாலனின் சிறப்பு பேட்டி
 
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2014ஆம் ஆண்டுக் கூட்டத்தின் முக்கிய கருத்தரங்கான செய்தி ஊடகத் தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டத்தை சீன வானொலி நிலையமும் போ ஆவ் ஆசிய மன்றமும் கூட்டாக நடத்துகின்றன. இக்கூட்டம் ஏப்ரல் 8ஆம் நாள் ஹெநான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் துவங்கியது. பல நாடுகளைச் சேர்ந்த 20க்கு மேலான செய்தி ஊடகங்களின் தலைவர்கள், ஒன்று கூடி, எண்ணியல் காலத்தில், செய்தி ஊடகங்களின் அறைகூவல்களையும் வாய்ப்புகளையும் பற்றி விவாதிப்பர்.
 
Soruce : sarvadesavannoli

Labels: , , ,

4/2/14

ஆன்டிராய்டு இயங்குதள கைபேசியில் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மென்ஒருங்கு

ஆன்டிராய்டு இயங்குதள கைபேசியில் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மென்ஒருங்கு

 

 

நேயர் நண்பர்களே, வணக்கம். சீன

வானொலி தமிழ் ஒலிபரப்பு, இணையம்
போன்ற சேவைகளை நேயர்கள் எளிதாக
அனுபவிக்க வசதி அளிக்கப்படும்
வகையில், கைபேசிகளில் இயங்கும் "Tamil-
CRI"எனும் மென்ஒருங்கை உருவாக்க
தமிழ்ப் பிரிவு பெரிதும்
முயற்சி எடுத்துள்ளது.
இப்போது,ஆன்டிராய்டு[Android]
கைபேசியில் இயங்கும்
மென்ஒருங்கு வெளியாகியுள்ளது.
அதன் சோதனைப்
பதிப்பு தற்போது வழங்கப்படுகிறது.
அதில், தமிழப் பிரிவின்
ஒலிபரப்பு நிகழ்ச்சிகள், இணைய
செய்திகள் மற்றும் கட்டுரைகள்,
சிறப்புப் பகுதிகள், குறிப்பாக
தற்போது நடைபெறுகிற சீனாவில்
இரு பரும் கூட்டத் தொடர்கள்
இடம்பெறுகின்றன.
கண்டு கேட்டு மகிழுங்கள். இந்த
மென்ஒருங்கு பற்றி உங்கள்
கருத்துக்களையும்
ஆலோசனைகளையும் ஆர்வத்துடன்
எதிர்பார்க்கின்றோம். மிக்க நன்றி!
பயன்பாட்டுக் குறிப்புகள்:
ஒன்று, கைபேசி மூலம் இப்பக்கத்தில்
உலா வந்து, மென்ஒருங்கு பதிவிறக்கம்
செய்ய விரும்பினால்,
இங்கே சொடுக்கவும்,  அல்லது,
கைபேசியில் 'app.cri.com.cn'என்ற
இணையதளத்தில் இந்த
மென்ஒருங்கை பதிவிறக்கம்
செய்யுங்கள்
இரண்டு, தமிழ் எழுத்துக்களை உங்கள்
கைபேசியில் இயல்பாக காணும்
வகையில், ஆன்ராய்டு இயங்குதளத்தின்
பதிப்பு 4.0க்கு மேல் இருக்க வேண்டும்
என்பதை அறிவுறுத்துகின்றோம்.

Labels: , , , , ,

1/29/14

தமிழன் டிடிஹச்யின் எல்லை கடந்த சேவை!!!

இன்று முதல் தமிழன் DTHயின் மூலம் அனைத்து விதமான சேட்லைட் சம்மந்தப்பட்ட சி பேண்ட்  செட்டாப் பாக்ஸ்கள் ,கேயு பேண்ட் செட்டாப் பாக்ஸ்கள் , சி பேண்ட் எல் என் பி , கேயு பேண்ட் எல்என்பி , டைசக் ஸ்ட்ச் ,  ரீஜார்ச் செய்ய ஈசி , டலர் ரீஜார்ச் , சி பேண்ட் டிஷ் பேன்றவைகளை இங்கு இருந்து பெறலாம் கீழே குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் இச் சேவை.. முதல் கட்டமாக வழங்கப்படுகிறது. மலேசியா , இலங்கை , தாய்லாந்து , மியான்மர், நேபாளம் , இந்தோநேசியா,  இந்த அனைத்து நாடுகளுக்கு குறைந்த பட்சம் மூன்று நாட்கள் அதிக பட்சம் ஆறு வேலை நாட்களுக்கு நீங்கள் பெறலாம். பணம் பேபால் வழியாகவும் , வெஸ்ட்ரன்யூனியன் மூலமாக செலுத்தலாம் மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளலாம்.  இனி தமிழன் டிடிஹச் சேவை உலகமெங்கும் விரிவடையும். கோடான கோடி தகவல்கள்  கொட்டி கிடக்கும் இவ்வுலகில் நமது அழகு தமிழில் உங்களுக்கு  மொழிப்பெயர்த்து விடும் தமிழன் நான் உங்கள் நண்பன்.

Labels: , , , , , , ,

1/28/14

இன்று முதல் தமிழ் எப் எம் தமிழன் டிடிஹச் யில் கேட்கலாம் .

தமிழன் டிடிஹச் யில் இன்று முதல் இனிமையான தமிழ் பாடல்களை எனது தளத்தின் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் மற்றும் பார்வையாளர்கள் கேட்டு மகிழலாம் . யாழ்பாணம் தமிழ் எப் எம் யின் நேரடி வானொலியை ஒலிபரப்பை கேளுங்கள் . ரசியுங்கள் .
தொடர்ந்து பாடல்களை கேட்டக இணைந்து இருங்கள் தமிழன் டிடிஹச் யுடன் .

Labels: , , , , , ,

12/22/13

சீன அரசு 2.5 லட்சம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி செய்திகளை வெளியிடுவது எப்படி!!!

சீன அரசு பத்திரிகை தொடர்பாக புதிய விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும், தணிக்கை விதிகளையும் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் தனது நாட்டில் உள்ள அனைத்து வகை ஊடகங்களையும் புதிய விதிமுறையின் கீழ் செயல்பட வைப்பதற்காக அதில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த பணியை சீன அரசின் செய்தி ஊடக துறை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி சீனாவின் இரும்பு திரை நாடு என்ற முத்திரை விலகி மேலும் சுதந்திரமாக எழுதவும், செய்திகளை வெளியிடவும் வாய்ப்பு ஏற்படும் என அந்நாட்டின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

இந்த பயிற்சிக்காக சீன நாட்டில் செயல்படும் முக்கியமான வானொலி, தொலைகாட்சி, பத்திரிகை, இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களை சேர்ந்த 2.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது அவர்கள் அனைவருக்கும் ராணுவ சீருடை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பயிற்சி 2013ம் ஆண்டின் இறுதி வரை நடைபெறும்.

இந்த பயிற்சியில் சீன கலாசாரம், கம்யூனிஸ்ட் பார்வையில் செய்திகளை எவ்வாறு வெளியிடுவது, சமூகவியல் பார்வை, பத்திரிகை தர்மம், சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப செய்திகளை எவ்வாறு தணிக்கை செய்வது, தவறான தகவல்களை மற்றும் அரசுக்கு எதிரான தகவல்களை எவ்வாறு கையாள்வது போன்ற பிரிவுகளின் கீழ் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெற்ற பத்திரிகையாளர்கள் அதன்பிறகு நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவிர பத்திரிகையில் பணிபுரியும் நிர்வாக ஊழியர்களுக்கு தனியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Labels: , , , ,

8/31/13

ரேடியோ சிட்டி ஆரம்பித்துள்ள 'தமிழ் ஆன்லைன் ரேடியோ'!!!

பிரபல எஃப்.எம் ரேடியோ நிறுவனமான ரேடியோ சிட்டி, தமிழ் ஆன்லைன் ரேடியோ ஆரம்பித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், இசைமைப்பாளர் டி.இமான், தயாரிப்பாளர் எஸ்.மதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு புதிய புதிய தமிழ் ஆன்லைன் ரேடியோவை துவக்கி வைத்தனர்.

முதல் வலை வானொலி நிலையமான பிளானெட்ரேடியோசிட்டி.காம் (planetradiocity.com) தனது முதல் இராந்திய வலை வானொலியான தமிழ் ரேடியோ சிட்டியை முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தமிழ் ரேடியோ சிட்டியில் 24 மணி நேரமும் இடைவிடாமல் தமிழ்ப் பாடல்கள் ஒலிபரப்பப்படும். இத்துடன் நேயர்கள் விரும்பிக் கேட்கும் 'லவ் குரு', 'ரகசிய போலீஸ் போடவா கோபி 911' ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது.

இதன் துவக்க நிகழ்ச்சி நேற்று (ஜூலை 24) சென்னையில் உள்ள ரேடியோ சிட்டி எஃப்.எம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் டி.இமான், தயாரிப்பாளர் மதன், ரேடியோ சிட்டி வானொலியின் சி.இ.ஓ அபூர்வா புரோஹித், ரேடியோ சிட்டி வானொலியின் டிஜிஜிட்டல் மீடியா மற்றும் நியூ பிசினஸ் மூத்த துணைத் தலைவர் மற்றும் பிசினஸ் தலைவரான ரச்னா கன்வார் மற்றும் ரேடியோ சிட்டி அலுவலகர்கள் என அனைவரும் கலந்துகொண்டார்கள்.


இனி, உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், இனியமையான தமிழ்ப் பாடல்களை இந்த தமிழ் ரேடியோ சிட்டி ஆன்லைன் வானொலியின் மூலம் கேட்கலாம். இதை கேட்கவிரும்புகிறவர்கள், பிளானெட்ரேடியோசிட்டி.காம் (www.planetradiocity.com) என்ற இணையதளத்திற்கு சென்று, அங்குள்ள ரேடியோசிட்டுடமில் (radiocitytamil) லிங்கை கிளிக் செய்தால், தமிழ்ப் பாடல்களையும், மிகச் சிறந்த தமிழ் இசைக் தொகுப்புகளுடன் நகைச்சுவையும், குதூகலமும் நிறைந்த லவ் குரு மற்றும் ரகசிய போலீஸ் படவா கோபி 911 போன்ற நிகழ்ச்சிகளையும் கேட்கலாம்.

இந்த புதிய ஆன்லைன் வானொலி குறித்து ரேடியோ சிட்டி நிறுவனத்தின் சி.இ.ஓ அபூர்வா புரோஹித் கூறுகையில், "பிராந்திய நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை ரேடியோ சிட்டி உணர்ந்தே உள்ளது. ஒரு எல்லைக்குள் தொடங்கப்படும் சேவைகள் சம்மந்தபட்ட பிராந்தியங்களில் சிறப்பாக இருக்கும் என்பது உண்மையே என்றாலும், வலை வானொலி நகரம் மற்றும் நாடு தாண்டி உலகளாவிய சேவைகளை வழங்கும். உலகின் மிகச் சிறந்த இசைகளுள் தமிழிசையும் குறிப்பிடத்தக்கது என்பதால் ஒரு வட்டத்திற்குள் முடங்கிவிடக் கூடாது. எனவேதான் தமிழ் இசையை உலகிலுள்ள அனைத்து இசை ஆர்வலர்களுக்கும் எடுத்துச் செல்கிறோம்." என்று தெரிவித்தார்.

ரேடியோ சிட்டி 91.1 எஃப்.எம் டிஜிடல் மீடியா மற்றும் நியூ பிசினஸ் மூத்த துணைத் தலைவர் மற்றும் பிசினஸ் தலைவர் ரச்னா கன்வார் கூறுகையில், "இந்தி ரேடியோ சிட்டு உள்பட 5 வலை வானொலி நிலையங்களைத் தொடங்கி பின்னர் பிராந்திய இசையைக் குறிப்பாக தென் இந்தியப் பிராந்திய இசையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல விரும்பினோம். இந்த ஆசை இப்போது நிறைவேறி உள்ளது. இந்தியப் பிராந்திய இசை குறிப்பாக தமிழ் இசைக்கு ஆன்லைனில் இருக்கும் இடைவெளியை இணைக்கும் பாலமாக இனி தமிழ் ரேடியோ சிட்டி செயல்படும். பழைய மற்றும் புதிய இசை ஆர்வலர்களுக்கு இதுவொரு சுரங்கமெனில் மிகையில்லை." என்று தெரிவித்தார். (டி.என்.எஸ்)

Labels: , , ,

8/27/13

சீன தமிழ் வானொலியின் ஓர் அறியா தகவல்!!!

சீன வானொலி நிலையம் 1941ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3ம் நாள் ஒலிபரப்பைத் துவங்கியது. துவக்கத்தில் ஜப்பானிய மட்டும் 15 நிமிடத்திற்கு ஒலிபரப்பானது. 60 ஆண்டுகளுக்குப் பின் 38 அந்நிய மொழிகள் சீன மொழி மற்றும் 4 உள்ளூர் மொழிகள் என நாளுக்கு 233 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.
செய்திகள், செய்தித் தொகுப்பு, அரசியல், பொருளாதாரம், பண்பாடு, அறிவியல் தொழில்நுட்பம் முதலியவற்றுடன் தொடர்புடைய சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை வானொலி நிலையத்தின் பல்வேறு மொழிப் பிரிவுகளின்நிகழ்ச்சிக் கட்டனமாகும். நிகழ்ச்சிகள் உலகமெங்கும் ஒலிக்கின்றன. அளவிலும் சரி, செல்வாக்கிலும் சரி, விஓஏ, பி.பி.சி ஆகியவற்றையடுத்து சீன வானொலி நிலையம் உலகில் மூன்றாவது சர்வதேச வானொலி நிலையமாக வளர்ந்துள்ளது. 1984ம் ஆண்டு முதல் உள்நாட்டில் 2 வரிசைகளில் அந்நிய மொழிகள் ஒலிபரப்பலாயின. 91.5 எப்எம், 1251கிஹெர்ட்ஸ் ஏஎம் வரிசையில் ஆங்கில மொழி பெய்சிங் மாநகர் பிரதேசத்திற்கு ஒலிபரப்பாகின்றது. ஆங்கிலம், ஸ்பேனிஷ், அரபு, ஜெர்மன், கொரிய, ஜப்பானிய மற்றும் ரஷிய மொழிகளில் இசைநிகழ்ச்சி ஒலிபரப்பாகின்றது.
40 சீன வானொலி செய்தியாளர் நிலையங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் நிறுவப்பட்டுள்ளன. தவிர, சீனாவின் பல்வேறு மாநிலங்கள் மாநகரங்கள் தன்னாட்சிப் பிரதேசங்கள் ஆகியவற்றிலும் ஹாங்காஹ் மற்றும் மகௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களிலும் செய்தியாளர் நிலையம் அமைந்துள்ளது. இதன் மூலம் மாபெரும் தகவல் வலைப்பின்னல் உருவாகியுள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஸவிட்சர்லாந்து, ரஷியா, ஸ்பெனிஷ், கனடா, மாலி,பிரேசில், கியூபா, அமெரிக்கா முதலிய 10க்கும் அதிகமான நாடுகள் பிரதேசங்களின் வானொலி நிலையங்களுடன் நிகழ்ச்சி ஒத்துழைப்புறவை 1987ம் ஆண்டு முதல் சீன வானொலி நிலையம் மேற்கொள்ள துவங்கியது.
ஆண்டுதோறும் சுமார் 200 நாடுகள் பிரதேசங்களில் வாழ்கின்ற நேயர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. வெளிநாட்டு நேயர்கள் விரைவாகவும் வசதியாகவும் பயன் தரும் முறையிலும் சீனாவை அறிந்து கொள்ளும் வழிமுறையாக சீன வானொலி நிலையம் மாறியுள்ளது. 2002ம் ஆண்டில் 11 லட்சத்து70 ஆயிரம் நேயர் கடிதங்கள் சீன வானொலிக்கு வந்து சேர்ந்தன.
1998ம் ஆண்டு டிசெம்பர் திங்களில் சீனா வானொலி நிலையம் தனது இணைய தளத்தைத்துவக்கியுள்ளது. தற்போது சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி, ஜெர்மன், ஜப்பானிய, ரஷிய மொழி, ஸ்பெனிஷ் மொழி, போர்த்துக்கீசிய மொழி உள்ளிட்ட 16 அந்நிய மொழிகளிலும் 17 மொழி இணையக்கிளைகள் இடம் பெறும் பன்னோக்க இணையத் தொகுதி நிறுவப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டில் சீன வானொலி நிலையத்தின் இணைய தளம் அரசின் முக்கிய செய்தி இணையதளமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது முதல் வெளிநாட்டு வானொலிகளின் மூலம் அதன் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் ஆற்றலை அதிகரித்துள்ளது. 2003ம் ஆண்டு ஜுலை திங்கள் முதல் ஆங்கிலம், ரிஷிய மொழி,ஜெர்மன், பிரெஞ்சு மொழி, ஸ்பெனிஷ் மொழி உள்ளிட்ட 16 அந்நிய மொழிகள் நாளுக்கு நாள் சுமார் 80 மணி நேரத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா, ஸபெயின் முதலிய நாடுகளின் ஏஎம், எப் எம் அலைவரிசை மூலம் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒலிபரப்புகின்றது.

Labels: , ,

8/25/13

கனடிய தமிழ் வானொலி தனியார் மயமாகிறதா?

 தமிழ் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் குருதி சிந்தி, வியர்வை சிந்தி மக்கள் குழுமமாக தங்கள் பலமாக கனடிய தமிழ் மக்கள் தமிழ் ஊடகங்களை உருவாக்கினர்.

அந்தவகையில் உருவாக்கப்பட்டவையே கனடிய தமிழ் வானொலி (CTR), தமிழ் விசன் இங்க் தொலைக்காட்சி (TVI), கனடிய பல்கலாச்சார வானொலி (CMR). இவற்றை நிர்வகிப்பதற்கு நம்பிக்கையானவர்கள் எனக்கருதியவர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தனர்.

அந்தவகையில் பொறுப்பில் இருந்தவர்;, இருப்பவர் தான் பிரபா செல்லத்துரை மற்றும் ஸ்ரெயின்ஸ்லெஸ் அன்ரனி ஆகியோர். அவர்கள் வகித்த பொறுப்புக்களுக்காக கணிசமான (ஒரு லட்சத்திற்கு மேற்ப்பட்ட) ஊதியத்தையும் இவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் இவ்வூடகங்களை முழுமையாக நிர்வகிக்க நம்பிக்கையானவர்களைக் கொண்ட நிர்வாகிகள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

தமிழர் சொத்தான இவ் ஊடகங்களை தமிழ் மக்கள் நலனுக்காகவே நல்ல முறையில் பேணுவார்கள், இதனை தமிழ் மக்கள் சொத்தாகவே தொடர்ந்தும் பேணுவார்கள், வரும் வருவாயை தமிழ் மக்கள் நலன்களுக்கு பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை அனைத்துத் தமிழ் மக்களிடமும் இருந்தது.

அதேவேளை இவ் மக்கள் சொத்தை மக்கள் பிரிதிநிதிகளைக் கொண்ட அறங்காவல் குழு ஒன்றின் கீழ் கொண்டுவருவதன் மூலம் இதனை யாரும் கையகப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்த முயற்சிகள் தொடர்ந்தும் மேற் கொள்ளப்பட்டன.

இந்நிலையிலேயே உரிமை கோரி பிரபா செல்லத்துரை வழக்கொன்றைத் தொடுத்தார். இந்த வழக்கே தற்போது தமிழர் சொத்தான ஊடகங்களின் உரிமையாளர் யார் என்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. கனடிய பல்கலாச்சார வானொலியின் (CMR) முழுமையான உரிமையாளர் நான் தான் என சொல்கிறார் ஸ்ரெயின்ஸ்லெஸ் அன்ரனி. இல்லை தமிழ் விசன் இங்க் தொலைக்காட்சி (TVI) இல் இருந்து தான் கனடிய பல்கலாச்சார வானொலி வந்தது எனவே நான் தான் உரிமையாளர் என்கிறார் பிரபா செல்லத்துரை.

இது மக்கள் சொத்து என்ற ஒரே காரணத்துக்காக தங்கள் நேரம், பணம், அனைத்தையும் ஒதுக்கி இவ்வூடகங்களினூடாக எந்தவொரு வருவாயையும் எதிர்பார்க்காமல் மக்கள் பணி செய்ய பல நூற்றுக்கணக்கானோர் இன்று ஏமாற்றப்பட்டுள்ளனர். மக்கள் சொத்து என நம்பித் தோள் கொடுத்த பல வர்த்தகர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை நிர்வாக குழுவில் இருக்கும் பலர் தொடர்ந்தும் மக்கள் பக்கமே உறுதியாக உள்ளனர். மக்கள் வழங்கிய பொறுப்பிற்கு பாத்திரமாகவும் உள்ளனர். பொறுப்பில் இருந்த இருக்கும் சிலர் தமது உறவினர்களை (முழுமையாக விபரம் விரைவில் வெளியிடப்படும்) இவ் நிர்வாக குழுவில் நியமித்துவிட்டு அவர்களை தம் பக்கம் வைத்துக் கொண்டே இன்று இவ் தமிழ் மக்கள் ஊடகங்களை தம் சொத்துரிமையாக்க முயல்கின்றனர். படித்தவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று நம்பியவர்களே இவ்வாறு சோரம் போவதே தமிழ் மக்கள் பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.

மக்கள் சொத்தில் ஏன் இந்த வெறி என்று சிலர் கேட்பது புரிகிறது. குறிப்பாக ஒரு பண்பலை வானொலி (FM) தற்போது பல மில்லியன் டொலர்கள் பெறுமதியானது என்பதே இதன் பின் உள்ள சூத்திரமாகும். மக்கள் நலனுக்கு பயன்பட வேண்டிய பணத்தை தங்கள் தனிப்பட்ட எதிர்காலத்தை வளப்படுத்தவும், தங்கள் குடும்பம் மட்டும் நல்லாக இருந்தால் போதும் என்று சிலர் நினைப்பதுவும் தான் முள்ளிவாய்கால் பேரவலம் போல் இங்கும் விரிகிறது.

அதிலும் வேதனையான விடயம் நம்பிக்கைக்கு துரோகமாக பண விடயத்திலும் பல மோசடிகள் நடந்துள்ளதாக தொடர்ந்தும் ஆதாரங்களுடன் வெளிவரும் செய்திகளே. அதுவும் பல லட்சம் டொலர்கள் பெறுமதியான மோசடிகள் என்கிறது தகவல்கள். இதில் வேதனையான விடயம் என்னவென்றால் சுருட்டியது போதாது என்று முழுமையாக கையகப்படுத்தவும் சிலர் முனைவது தான்.

ஒன்றுக்கு ஒன்று தம்மை வலுப்படுத்தி நிற்கும் என்று கருதப்பட்ட மூன்று ஊடகங்களும் இன்று தனியாக்கப்பட்டுள்ளன. இதில் கனடியத் தமிழ் வானொலி மட்டும் முழுமையான மக்கள் சொத்தாக்கும் நிலையில் உள்ளது. ஏனைய இரண்டும் தமிழ் விசன் இங்க் தொலைக்காட்சி (TVI), கனடிய பல்கலாச்சார வானொலி (CMR) என்பவற்றை தம் தனிப்பட்ட சொத்தாக்க முயற்சிகள் தொடர்கின்றன.

இதில் மாற்றத்தை ஏற்படுத்த பல்தரப்பாலும் எடுக்கப்பட்ட பல முயற்சிகளும் எந்தவித நல்ல பெறுபேறையும் எட்டவில்லை. அலைக்கழிப்பும், ஏமாற்றலுமாகவே இம்முயறிசகள் முள்ளிவாய்காலுக்கு பின்னரான நான்கு வருடமும் கழிந்துள்ளது. இந்நிலையிலேயே பொறுத்தது போதும் என்ற வகையில் கனடிய தமிழ் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். கனடிய வானொலி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கடிதங்கள் அனுப்ப முனைந்துள்ளனர்.

கனடிய பல்கலாச்சார வானொலி (CMR) மீண்டும் தன் உரிமத்தை புதுப்பிக்க முனைந்துள்ள நிலையில் அதில் தான் தான் முழுமையான உரிமையாளர் என்று ஸ்ரெயின்ஸ்லெஸ் அன்ரனி கோருவதை முழுமையாக விசாரித்து உண்மையை கண்டறியுமாறு கோருகின்றனர்.

மக்கள் சொத்தான ஊடகத்தை மக்கள் சொத்தை உறுதிப்படுத்துமாறு வேண்டுகின்றனர். மக்களின் இப்பேரெழுச்சி மக்கள் சொத்தை காக்கும் எனத்திடமாக நம்புவோம். மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்து வாழும் ஈனப்பிறப்பை கைவிடுவோம். மேலும் விபரமான விபரங்கள் விரைவில்http://goldtamil.com/?p=2751

Labels:

6/2/13

வர்ணம் எப் எம் கேட்க விருப்பமா ?

வர்ணம்    குழுமத்தில்    ஏற்கனவே     டிவி     சேணல் ஆரம்பிக்கப்பட்ட            நிலையில்         தனது ரேடியோ சேவையை        துவங்கியுள்ளது.               இதனை                  இலங்கை                முலுவதும் 90.4 யிலும் 90.6 யிலும் கேட்டு      மகிழலாம் மற்ற நாடுகள் www.varnamfm.com என்ற தளத்திலும் கேட்டு மகிழலாம்.


Labels:

5/17/13

டிஜிட்டல் மயமாகும் இந்திய வானொலிகள்!!!!!

வானொலித் தொழில் நுட்பமானது நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் வானொலிப் பெட்டிகளின் உற்பத்தி இந்தியாவில் அறவே நின்றுவிட்டது. இந்த சமயத்தில்தான் நமது அகில இந்திய வானொலி ஒரு புதிய தொழில்நுட்பத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது. ஆர்டி..எம். (டிஜிட்டல் ரேடியோ மோண்டியல் 3058) எனும் அந்தத் தொழில்நுட்பம்தான் இனி இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ஊர்களிலும் வரப்போகிறது.
இதற்கு  அச்சாரமாக இருந்தவை செயற்கைக்கோள் வானொலிகள். இந்த ஒலிபரப்புகளில் ஒலியின் தரம் மிகத்துல்லியமாக இருந்ததால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான "வோல்ட் ஸ்பேஸ்' போன்ற வானொலிகள் புதுமையாக பார்க்கப்பட்டன. ஆனால் துரதிருஷ்டவசமாக அவை அனைத்தும் வந்த வேகத்திலேயேக் காணாமல் போயின. அதற்குக் காரணம், அந்த வானொலிகளை மாதாந்திர சந்தா கட்டியே கேட்க வேண்டி இருந்தது. இதன் காரணமாக இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.
ஆனால் இப்பொழுது "வோல்ட் ஸ்பேஸ்' மீண்டும் தனது சேவையைத் ஒரு தனியார் டி.டி.ஹெச். நிறுவனத்தோடு இணைந்து தொடங்கியுள்ளது.
அகில இந்திய வானொலியின் வரலாற்றில் 2009ஆம் வருடம் வரலாற்றில் பொறிக்க வேண்டிய ஒரு ஆண்டு. அந்த ஆண்டு தான் முதல் டி.ஆர்.எம். ஒலிபரப்பிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
புதுதில்லி காம்பூரில் அமைந்துள்ள உயர் சக்தி கொண்ட ஒலிபரப்பு நிலையத்தில் இருந்து 16 ஜனவரி 2009இல் தனது முதல் டி.ஆர்.எம். ஒலிபரப்பினைத் தொடங்கியது.
வானொலி கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகியும், இது வரை வானொலி ஒலிபரப்பானது "அனலாக்' முறையிலேயேச் செய்யப்பட்டு வந்தது. இதில் ஒலிபரப்பின் தரம் சுமாராகவே இருக்கும். ஆனால் "டிஜிட்டல்' தரத்தினைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
சாதாரண வானொலி ஒலிபரப்புகளில் நாம் குறிப்பிட்ட ஒலிபரப்பினை மட்டுமே கேட்க முடியும். ஆனால் டி.ஆர்.எம். ஒலிபரப்பில், வானொலி ஒலிபரப்போடு அந்த நிகழ்ச்சிகளின் விவரங்களும் டிஜிட்டல் திரையில் தெரியும். அத்துடன் நமக்குத் தேவையான நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவும் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், "எலக்ட்ரானிக் புரோகிராம் கைடு' இதில் இருப்பதால் அடுத்தடுத்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும்  கண்டுகொள்ளலாம்.
இன்னும் எளிதாகப் புரியும்வண்ணம் கூற வேண்டும் எனில், ஒரு திரைப்படப் பாடல் ஒலிபரப்பாகிவரும் அதே சமயத்தினில், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம், வெளிவந்த ஆண்டு, பாடியவர்கள், பாடலை இயற்றியவர், இசையமைத்தவர் என அனைத்து விவரங்களும் அந்த டிஜிட்டல் திரையில் ஒரு சேர நமக்கு கிடைக்கும். இது டிஜிட்டல் ஒலிபரப்பில் மட்டுமே சாத்தியமான ஒன்று.
இவை அனைத்தினையும் விட முக்கியமானது, அதன் தரம். பண்பலை ஒலிபரப்பின் தரத்தினைவிட பன்மடங்கு துல்லியமானதாக இருக்கும். மேலும் இது சிற்றலை மற்றும் மத்திய அலை ஒலிபரப்புகளையும் அதே தரத்தினில் கொடுக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியான ஒலிபரப்பு கோபுரங்கள் தேவையில்லை. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கோபுரங்களே போதும். டிஜிட்டல் ரேடியோ மோண்டியல் என்பதில் உள்ள மோண்டியல் என்பது பிரென்ச் வார்த்தை. இதற்கு "உலகளாவிய' என்று அர்த்தமாகும். வார்த்தைக்குத் தகுந்தார்போன்றே அதன் ஒலிபரப்புத் தரமும் உலக நாடுகளால் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய தொழில்நுட்பத்திற்கு நாம் செய்ய வேண்டிய செலவு கூடுதலாக 10 முதல் 20 சதவீதம் மட்டுமே. ஆனால் அதே சமயத்தில் நமக்கு இதன் மூலம் 20 முதல் 40 வரை மின்சாரமானது சேமிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலையும் இது பாதிப்பதில்லை.
ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளில் டி.ஆர்.எம். ஒலிபரப்பினைத் தொடங்கிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கே உரித்தான ஒன்று. ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் இன்னும் இதில் அடியெடுத்து வைக்காத சமயத்தில் நாம் இதில் முன்னோடியாகத் திகழ்வது நமக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தருகிறது. டி.ஆர்.எம் ஒலிபரப்பிற்கு நாம் மாறுவதன் மூலம், இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு குறைந்த ஒலிபரப்பிகளைக் கொண்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நேயர்களையும் சென்றடையலாம். இந்தியாவானது பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தில் டி.ஆர்.எம். ஒலிபரப்பிற்கு என ரூ.9.20 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 70 சதவீத மக்களை டி.ஆர்.எம். ஒலிபரப்பானது சென்றடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த டி.ஆர்.எம். தொழில்நுட்பத்தினை இன்னும் ஐந்தாண்டுகளில் அனைத்து நாடுகளும் கையாள உள்ளன. ஆனால் இதில் ஒரு குறை இப்பொழுது உள்ளது. டி.ஆர்.எம்.  ஒலிபரப்பினைக் கேட்க தனியான வானொலிப் பெட்டியினை நாம் வாங்க வேண்டும். நம்மிடம் ஏற்கெனவே உள்ள வானொலிப் பெட்டிகளில் இந்த டிஜிட்டல் ஒலிபரப்பினைக் கேட்க முடியாது.
ஏற்கெனவே இருந்த வோல்ட் ஸ்பேஸிலும் இதுதான் சிக்கலாக இருந்தது. டி.ஆர்.எம்.  வானொலிப் பெட்டியின் குறைந்தபட்ச விலையே ரூ.10,000 எனும்போது நிச்சயம் நம்மில் பலர் அதனை வாங்கவே யோசிப்போம். ஆனால் அரசின் கருத்தின்படி, முழுமையாக இந்தத் தொழில்நுட்பம் செயல்படத் தொடங்கிவிட்டால் வானொலிப் பெட்டியின் தேவை அதிகரிக்கும். அப்பொழுது விலை நிச்சயம் குறையும் என்கிறது அரசு. 
இன்று ஆண்ட்ராய்டு வசதி கொண்ட கைப்பேசிகளில் இலவசமாக டி.ஆர்.எம். மென்பொருட்களைப் பதிவேற்றி தனியான டி.ஆர்.எம். வானொலிப் பெட்டிகளை வாங்காமலேயே ஒலிபரப்புகளைக் கேட்க முடியும்.
ஆக, இனி வானொலி ஒலிபரப்புகளை வானொலிப் பெட்டியில் மட்டும்தான் கேட்க வேண்டும் என்று இல்லாமல், நமது கைப்பேசி, கணினி, ஐபேட் என எல்லா வகையான மின்னணு சாதனங்களின் ஊடாகவும் கேட்க முடியும்.

Labels:

1/27/13

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கலக்கி எடுக்கும் இலங்கை தமிழ் வானொலிகள்!!!

இலங்கை வானொலி ரசகர்களே உங்களுக்கு இனிமையான செய்தி 2008ம் ஆண்டு வருடத்திற்க்கு பிறகு இந்த 2013ம் ஆண்டில் இலங்கை தமிழ் வானொலிகளான தென்றல் , சக்தி , சூரியன் என சிங்களம் உட்பட 8 FM ரேடியோ சேனல்கள் தமிழகத்தின் தென் மாவட்டகள் என அழைக்கப்படும் திண்டுக்கல்லில் இந்த சேணல்கள் வெழுத்துக்கட்டு கின்றனர். கண்டிப்பாக திண்டுக்கல்லில் எடுக்கும் போது மதுரை சொல்லவே தேவையில்லை அனைத்து தென்மாவட்டங்களிலும் கண்டிப்பாக எடுக்கும். இது அனைத்து மாவட்டங்களிலும்
மேலும் வாசிக்க

Labels:

11/9/12

சிட்டி எஃப்.எம் இனி மூன்று மொழிகளிலும் ஒலிபரப்பு!!!

சிட்டி எஃப்.எம்: இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து முற்றிலும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகிவரும் சிட்டி எஃப்.எம் இனி மூன்று மொழிகளிலும் ஒலிபரப்பாக உள்ளதாக அதன் இயக்குனர் ஹட்சன் சமரசிங்கே தெரிவித்துள்ளார். அவ்வப்போது சிங்களத்திலும் ஒலிபரப்பான இந்த வர்த்தக வானொலி,  இனி தமிழிலும் ஒலிபரப்பாவது கண்டு நமக்கெல்லாம் மகிழ்ச்சியே.
இந்த மகிழ்ச்சிக்கு காரணமானவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆவார். அவர் சமீபத்தில் இலங்கை சென்றபோது “நாடு அமைதியாக இருக்க அனைத்து துறைகளிலும் கட்டாயம் மும்மொழிக் கொள்கை அவசியம்” என்று கூறியதன் பயனாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது இலங்கை வானொலி. அப்படியே நமக்கும் கொழும்பு சர்வதேச வானொலியைக் கிடைக்கச் ஏற்பாடுச் செய்திருக்கலாம் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

Labels:

10/28/12

மின்னல்FM தமிழ் ரேடியோ சேனலின் வரலாறு!!!...

1938ஆம் ஆண்டு துவங்கியது. அப்பொழுது பாக்கியான் இந்தியா ரேடியோ மலோயா என்று அழைக்கப்பட்டது.1970 இல் அது 'Rangkaian Merah' என்று அழைக்கப்பட்டது.. 1977 ஆம் ஆண்டில், இது 'ரேடியோ 6' என பெயரிடப்பட்டது, இப்போது அதை MINNALfm அழைக்கப்படுகிறது. இது ஜூலை 1997 1 ஆம் தேதி 24 மணி ஒளிபரப்பை தொடங்கியது போது MINNALfm உலகின் முதல் 24 மணி தமிழ் ஒலிபரப்பு சேவையாக மாறியது. திரு Tanjai தாமஸ், திரு ஏ பீட்டர், திருமதி சுவாமிநாதன், திரு ஏ ஐயர், திரு ராம ஐயர், திரு ஹனீப் மற்றும் திரு சுந்தர் ராஜ் மலேஷியா உள்ள தமிழ் ஒலிபரப்பு செய்ய முன்னோடிகள் இருந்தனர்.
இந்த நிலையத்தில் ஒரு அரசாங்க

அமைப்பு பொது நன்மை தகவல் அளிப்பதில்லை அதன்படி MINNALfm ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. MINNALfm, கல்வி, பொழுதுபோக்கு என பல அம்சங்கள் இந்திய சமூகத்தில் நிறைய பங்களிப்பு தற்போதைய பிரச்சினைகள், சுகாதார, சட்டம் மற்றும் பல பற்றி சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க.

இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் மத்தியில்  நன்கு அறியப்பட்ட நிலையம். உலகம் முழுவதிலும் இருந்து கேட்பவர்கள் உண்டு. இந்த நாட்டில் MINNALfm தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் ஒரு முறையான தமிழ் பயன்படுத்தவும். MINNALfm ஒரு பார்வை.
 உலகம் முழுவதும் தமிழ் வானொலி நிலையத்திற்கு ஒரு முக்கிய பங்கு இருக்க வேண்டும்.

உள்ளூர் அல்லது உலகம் முழுவதும் இருந்து அல்லது பார்வையாளர்கள் தேவை பூர்த்தி செய்ய பொழுதுபோக்கு சார்ந்த திட்டங்கள் மற்றும் தகவல் பரிமாற இந்த வானொலி நிலையத்தின் நோக்கம்.
அரசாங்க செய்திகளை அளிப்பதில்லை .

MINNALfm உத்திகள் ஒரு தரமான தமிழ் மொழி பயன்படுத்த இன்னும் இந்தியர்கள் ஒவ்வொரு பகுதியில் கேட்போர் குழு உருவாக்க infortainment சார்ந்த திட்டங்கள் மூலம் நெருக்கமான இசையை எடுத்து அதை வெளிப்படுத்த சரியான, சிறிய மற்றும் புதிய அணுகுமுறையை பயன்படுத்தி பொது செய்திகளை வழங்குவதில் இருக்கும் உலகம் முழுவதும் MINNALfm  கேட்போர் உருவாக்க சிறந்த வழி மற்றும் சாலை வழியாக நெருக்கமான கேட்போர் பெற MINNALfm ஏற்பாடு காட்டுகிறது.

சிறந்த மற்றும் சிறந்த ஓய்வு பங்குதாரர் என்ற போது, MINNALfm பொது தார்மீக மதிப்புகள், இந்திய இளைஞர்கள் மற்றும் இப்போதெல்லாம் இந்திய குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகளை காட்டுகிறது.
 என்று பல நாடகங்கள் உருவாக்குகிறது.

அதே நேரத்தில் MINNALfm at கூட கேட்போர் பொழுதுபோக்கு மற்றும் அறிவார்ந்த சமூகத்தை நோக்கி நம் சமூகத்தில் வடிவமைக்க இது சில valueable எண்ணங்கள் தற்போது பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. முதல் பார்வையாளர்கள் நிகழ்ச்சிகள் இந்த நாள் வரை, ஏனெனில் அது புகழ் தக்கவைத்து வருகிறது "kalapadam" fron KL டவுன் ஹால் மற்றும் திட்டத்தின் வடிவமைப்பு ஒளிபரப்பப்பட்ட போது 1957 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

MINNALfm தற்போதைய பிரச்சினைகள் மற்றும் அவர்கள் aroynd நடைபெறும் நிகழ்வுகள் இந்திய சமூகம் விழிப்புடன் வைக்க கலாச்சார தகவல் பற்றி இந்திய சமூகத்தின் தெரிவிக்க முடியவில்லை. MINNALfm பல, துடிப்பான இளம் தகுதி மற்றும் திறமை டிஜே இளைஞர்கள் ஈர்க்க பல்துறை வழிகளில் திட்டங்கள் வழங்குகிறீர்கள் யார் கொண்டுள்ளன.



நோக்கங்கள்:-



MINNALfm நோக்கம்: -

பொழுதுபோக்கு மற்றும் துல்லியமான மற்றும் நம்பகமான இது சமீபத்திய தகவல் பொது தகவல்.Infortainment அடிப்படையில் திட்டங்களை listerners இதயங்களை வெல்ல.மலேஷியா ஒவ்வொரு இந்திய பெரும்பான்மை பகுதியில் listerners அடைய. உலக அளவிலான listernership உருவாக்க. தரமான தமிழ் பயன்பாடு விரிவுபடுத்தும் மற்றும் திட்டங்கள் தரத்தை பராமரிக்க. இடம் ரோட்ஷோ நடவடிக்கைகள் வானொலி மூலம் listerners இணைப்புகளை பலப்படுத்தும்.பார்வை உலகின் முக்கிய தமிழ் வானொலி நிலையம் ஆக.மிஷன் திட்டங்கள் மற்றும் உள்ளூர் சுவை அத்துடன் சர்வதேச listerner ஏற்ப தகவல் மூலம் மலேசிய பொது தகவல் மற்றும் அரசாங்கத்தின் செய்திகளை வழங்கும்.

நம் இந்தியாவில் மின்னல் FM யை கேட்க 91.5MEASAT யில் பெறலாம்.
3878  v  18385



செய்தி ஆசிரியர் மு.துரைச்சாமியுடன் . பதிவாளர் பாஸ்கரன்.

Labels: ,

10/25/12

இந்தியாவின் முதல் 1000 கிலோ வாட் டி.ஆர்.எம்

இந்தியாவின் முதல் 1000 கிலோ வாட் டிஜிட்டல் ரேடியோ மொண்டியல் (டி.ஆர்.எம்) சூப்பர் பவர் ஒலிபரப்பி குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள லியாரே கிராமத்தில் உள்ள அகில இந்திய வானொலியில் தொடங்கப்பட்டது.இந்த விழாவில் பேசிய பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஜவஹர் சிர்கார், அகில இந்திய வானொலி விரைவில் மற்ற நிலையங்களிலும் டி.ஆர்.எம் எனும் டிஜிட்டல் தொழில்நுட்ப டிரான்ஸ்மிட்டர்களை நிறுவவுள்ளது என்று கூறினார். இந்த டிஆர்எம் தொழில்நுட்ப சூப்பர் பவர் ஒலிபரப்பி கொண்டு ஒரே நேரத்தில்  டிஆர்எம், ஏ.எம் மற்றும் சைமல்காஸ்ட் முறைகளில்
மேலும் வாசிக்க

Labels: