8/7/13

AIRCEL FREE 3G OFFER IN TAMILNADU


Labels: , , , ,

11/11/12

சிம் கார்டு விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!!!

போலியான ஆவணங்களைக் கொடுத்து செல்போன் சேவை நிறுவனங்களிடமிருந்து சிம் கார்டு வாங்கி, இணைப்புகளைப் பெறுவது அதிகரித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
செல்போன் ‘சிம் கார்டு’ வாங்க புதிய கட்டுப்பாடுகள்:
இதன்படி, மத்திய தொலைதொடர்புத்து றை செல்போன் சேவை இணைப்புகளைப் பெறுவதற்கு புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது .
அந்த வழிமுறைகள் வருமாறு:-
* முன்கூட்டியே பணம் கொடுத்து பயன்படுத்தும் ப்ரி பெய்ட் மற்றும் சேவைக்கு பின்னர் பணம் செலுத்துகிற போஸ்ட் பெய்ட்செல்போன் இணைப்புகளை பெறுவதற்கு வாடிக்கையாளர் தவறான தகவல்களை கொடுத்தால்அதற்கு செல்போன் சேவை நிறுவனங்களே பொறுப்பு.
* செல்போன் சிம் கார்டுகளைவிற்பனை செய்கிற சில்லறை விற்பனையாளர், விண்ணப்பதாரரையு ம், அவரது விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டுள்ள உருவப்படத்தையும ் ஒப்பிட்டுப் பார்த்து, நான் விண்ணப்பதாரரை நேரில்பார்த்தேன், விண்ணப்பத்துடன் ஒட்டப்பட்டுள்ள உருவப்படத்தை ஒத்துப் பார்த்தேன் என்று சான்றளிக்க வேண்டும்.
* போலியான ஆவணங்கள் தந்து யாரேனும் செல்போன் சேவை இணைப்பை பெற்று விட்டனர் என செல்போன் சிம்கார்டு விற்பனையாளர் அறிய வந்தால், இது தொடர்பாக செல்போன் சேவை நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, 15 நாளில் போலீசில் புகார் செய்து வழக்கு தொடர வேண்டும்.
* சிம் கார்டு வாங்குவதற்கு வாடிக்கையாளர் அளித்த அடையாளம் மற்றும் முகவரி நகல் சான்று ஆவணங்களை அசல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்து, சில்லறை விற்பனையாளர் கையெழுத்திட வேண்டும்.
* சிம் கார்டு இணைப்புக்குரிய சேவையை வழங்குவதற்கு முன்பாக செல்போன் சேவை நிறுவனம், பெறப்பட்ட விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ள தகவல்கள் சரியானவை என்று சான்றளிக்கவேண்டும்.
* ஒருவருக்கு தெரியாமல் அவரது அடையாளம், இருப்பிட சான்றுகளை வழங்கி மற்றொருவர் செல்போன் சிம் கார்டு வாங்கினால், அப்படி செல்போன் சிம்கார்டினை விற்பனை செய்த சில்லறை விற்பனையாளர் மீது செல்போன் சேவை நிறுவனம் வழக்கு தொடர வேண்டும்.
* தவறு செய்கிற சில்லறை விற்பனையாளர்கள் , வாடிக்கையாளர்கள ் மீது செல்போன் சேவை நிறுவனங்கள்நடவடிக்கை எடுக்கத்தவறினால ், செல்போன் சேவை நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தக் கட்டுப்பாடுகள்
 அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

Labels: ,

10/31/12

பாதிக்கப்பட்டவரின் பதறல்,கால் சென்டர் பெண்ணின் கதறல்?.

 நண்பர்களே என்னடா ஒன்னுமே புரியலனு கேக்குறீங்களா. தமிழ்நாட்டில் எவரும் துணிந்து பேச முடியாத வார்த்தைகளை கொங்குதமிழ் பேசும் நம்மை போன்று ஒருவரின் பிரத்தேக பேட்டி உங்களுக்காக . தமிழ்நாட்டில் தொலைபேசி இணைப்பு வழங்கும் 10 நிறுவனங்கள்  உண்டு இதில் முக்கியமாக ஏர்செல்,ஏர்டெல், வோடபோன் போன்றவைகள் உண்டு. இதில் நாம் அனைவருக்கும் தனக்கென ஒவ்வொரு நெட்வொர்க் இருக்கும். அதில் ஒரு சில நேரங்களில்  காரணமின்றி நமது பேலன்ஸ் போகி விடும் . நாம் கால்சென்டர் உதவியை நாடலாம் என்று அவர்களுக்கு அழைத்தால்.  இவர்களிடமோ வெறுப்பு மேலும் ஏறும்படி பதில் கிடைக்கும்.அப்படி கிடைக்கும் பொழுது மனநிலை எப்படி இருந்தது?  எப்படி இருந்திருக்கும்? .   உங்கள் மறுமொழிகள் வற்வேற்கப்படுகின்றனர் .
. இந்த ஆடியோ பதிவை நீங்கள் இந்த லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் கேட்கலாம். பாவம் அந்த பெண் கம்பெனியின் மேல் இருந்த கோபத்தால் பெண் கதறல்.

Labels: