4/6/14

Samsung Galaxy S3 NEO Details

சாம்சங் நிறுவனம் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இல்லாமல் அதன் இந்தியா இணையதளத்தில் சமீபத்திய ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி S3 நியோ ஸ்மார்ட்போனை பட்டியலிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி S3 நியோ ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்குகின்றது. கேலக்ஸி S3 நியோ ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம் ஆதரவு கொண்ட இரட்டை சிம் சாதனம் ஆகும். இது ஒரு 4.8 இன்ச் HD (720×1280 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. கேலக்ஸி S3 நியோ சிப்செட் பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை, என்றாலும் 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.குறிப்பாக, கேலக்ஸி எஸ் III நியோ+ வேரியன்ட் 1.4GHz ப்ராசசர் கொண்டுள்ளது. 
-->

-->
கேலக்ஸி S3 நியோ ரேம் 1.5GB உடன் வருகிறது மற்றும் உள்ளடிக்கிய சேமிப்பு பற்றி எந்த வார்த்தையும் இல்லை, ஆனால் 64GB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஆதரிக்கிறது. எல்இடி ப்ளாஷ் மற்றும் CMOS சென்ஸார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. 1.9 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

கேலக்ஸி S3 நியோ இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ் / எ -ஜி.பி. எஸ், மைக்ரோ-USB மற்றும் 3 ஜி ஆகியவை அடங்கும். கேலக்ஸி S3 நியோ மெஷர்ஸ் 136.6×70.7×8.6mm மற்றும் 132 கிராம் எடையுடையது. கேலக்ஸி S3 நியோ ஒரு 2100mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. ப்ளாக், ப்ளூ, பிரவுன், கிரே, மரூன், பிங்க் மற்றும் வைட் ஆகிய ஏழு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி S3 நியோ ஸ்மார்ட்போன் அம்சங்கள்:

  • 4.8 இன்ச் HD (720×1280 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே,
  • 1.2GHz குவாட் கோர் ப்ராசசர்,
  • இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்),
  • ரேம் 1.5GB,
  • 64GB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு,
  • எல்இடி ப்ளாஷ் மற்றும் CMOS சென்ஸார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 1.9 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • Wi-Fi,
  • ப்ளூடூத்,
  • ஜிபிஎஸ் / எ -ஜி.பி. எஸ்,
  • மைக்ரோ-USB,
  • 3 ஜி,
  • ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன்,
  • 2100mAh பேட்டரி,
  • 132 கிராம் எடை.

Labels: , , , ,

8/7/13

AIRCEL FREE 3G OFFER IN TAMILNADU

Labels: , , , ,

6/10/13

தொலைந்து போன மொபைல் போனை கண்டறிய எளிய முறை...!

தொலைந்து போன மொபைல் போனை கண்டறிய எளிய முறை...!

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது.
இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.

எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இது வரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும்.

மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.

இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த திகதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.

உங்களுடைய மொபைல் போன்னை மற்றவர் பயன்படுத்தும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்தும் நபர் ஆகியவற்றை கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும்.

Labels: ,

11/11/12

சிம் கார்டு விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!!!

போலியான ஆவணங்களைக் கொடுத்து செல்போன் சேவை நிறுவனங்களிடமிருந்து சிம் கார்டு வாங்கி, இணைப்புகளைப் பெறுவது அதிகரித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
செல்போன் ‘சிம் கார்டு’ வாங்க புதிய கட்டுப்பாடுகள்:
இதன்படி, மத்திய தொலைதொடர்புத்து றை செல்போன் சேவை இணைப்புகளைப் பெறுவதற்கு புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது .
அந்த வழிமுறைகள் வருமாறு:-
* முன்கூட்டியே பணம் கொடுத்து பயன்படுத்தும் ப்ரி பெய்ட் மற்றும் சேவைக்கு பின்னர் பணம் செலுத்துகிற போஸ்ட் பெய்ட்செல்போன் இணைப்புகளை பெறுவதற்கு வாடிக்கையாளர் தவறான தகவல்களை கொடுத்தால்அதற்கு செல்போன் சேவை நிறுவனங்களே பொறுப்பு.
* செல்போன் சிம் கார்டுகளைவிற்பனை செய்கிற சில்லறை விற்பனையாளர், விண்ணப்பதாரரையு ம், அவரது விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டுள்ள உருவப்படத்தையும ் ஒப்பிட்டுப் பார்த்து, நான் விண்ணப்பதாரரை நேரில்பார்த்தேன், விண்ணப்பத்துடன் ஒட்டப்பட்டுள்ள உருவப்படத்தை ஒத்துப் பார்த்தேன் என்று சான்றளிக்க வேண்டும்.
* போலியான ஆவணங்கள் தந்து யாரேனும் செல்போன் சேவை இணைப்பை பெற்று விட்டனர் என செல்போன் சிம்கார்டு விற்பனையாளர் அறிய வந்தால், இது தொடர்பாக செல்போன் சேவை நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, 15 நாளில் போலீசில் புகார் செய்து வழக்கு தொடர வேண்டும்.
* சிம் கார்டு வாங்குவதற்கு வாடிக்கையாளர் அளித்த அடையாளம் மற்றும் முகவரி நகல் சான்று ஆவணங்களை அசல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்து, சில்லறை விற்பனையாளர் கையெழுத்திட வேண்டும்.
* சிம் கார்டு இணைப்புக்குரிய சேவையை வழங்குவதற்கு முன்பாக செல்போன் சேவை நிறுவனம், பெறப்பட்ட விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ள தகவல்கள் சரியானவை என்று சான்றளிக்கவேண்டும்.
* ஒருவருக்கு தெரியாமல் அவரது அடையாளம், இருப்பிட சான்றுகளை வழங்கி மற்றொருவர் செல்போன் சிம் கார்டு வாங்கினால், அப்படி செல்போன் சிம்கார்டினை விற்பனை செய்த சில்லறை விற்பனையாளர் மீது செல்போன் சேவை நிறுவனம் வழக்கு தொடர வேண்டும்.
* தவறு செய்கிற சில்லறை விற்பனையாளர்கள் , வாடிக்கையாளர்கள ் மீது செல்போன் சேவை நிறுவனங்கள்நடவடிக்கை எடுக்கத்தவறினால ், செல்போன் சேவை நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தக் கட்டுப்பாடுகள்
 அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

Labels: ,