12/31/13

தமிழன் டிடிஹச்யின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

 இதயம் ஒரு வெற்று காகிதம்தான்
இதுவரை நிறைவு பெறாத
ஆசைகளும் , கனவுகளும் மட்டுமே
இதில் நிரப்பப்பட்டு இருந்தது இதுநாள் வரை .
அவற்றிற்கும் விடுமுறை கொடுக்கும்
தூரம் அருகில் வந்துவிட்டது . இன்னும்
சில மணி நேரங்கள் மட்டுமே மீதம் உள்ளது . !
கனவுகள் கூட கணக்கத் தொடங்கிவிட்டது
இனியும் போலியாய் உறங்குவதில் என்ன நியாயம்?
இதுநாள் வரை நிழல்களுடன்
நிஜங்களாக வாழ்ந்தது போதும்.
இனியும் நிழலில் நிஜங்களை
இழக்க விருப்பம் இல்லை.!
ஆசைகளை மட்டும் அடுக்கி அடுக்கி
நிறைவேறவில்லையே என்று தினம்
எண்ணி எண்ணி பாதி தாகம் தீர்த்த
அந்த அவல நாட்கள் இனியும் வேண்டாம்.!
கவலைகளை மட்டுமே எண்ணி எண்ணி
இரவுகளில் எல்லாம் விழிகள் தூக்கம் தொலைத்த
அந்த இரவுகளைக் கூட
நான் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை !.
நாளை நாளை என்று தினங்களும்,
வாரங்களும் ,மாதம் கடந்து, இன்று
வருடம் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது.!
துப்பும் எச்சில் கூட
தூரம் சென்று விழவேண்டும்
என்று எண்ணுகிறது மனது.
ஆனால் தோல்விகளை மட்டும்
தோள்களில் சுமக்க எப்படித்தான்
விரும்பியே ஏற்கிறதோ தெரியவில்லை.!
இனி வரும் நாட்களில் முடிவுரைகள் கூட
முற்றுப்புள்ளியின்றிதான ் எழுதப்படும்.
இதுநாள் வரை தோல்விகள் சுமந்த
இந்த தோள்கள் இனி வரும் நாட்களில்
இமயம் தாண்டும் சாதனைகளை சுமக்கும்.!
இதுநாள் வரை உதடு சுழித்து
உதறித் தள்ளிய பணிகள்
எல்லாம் பனித்துளி வசிக்க புதிதாய்
புன்னகையுடன் ஒரு பூந்தோட்டம் அமைக்கும்.
கல்விக்காக மூடியக் கதவுகளை
தட்டி தட்டி முற்றுப்புள்ளி எட்டிய
கனவுகளுக்கு எல்லாம் இனி விடுமுறை.!
இனி வரும் நாட்களில் ஏழைகள்
இமை திறக்கும் திசையெல்லாம்
கல்விக் கூடங்கள் திறந்தே இருக்கும்.!
நாம் சாலை கடக்கும் நேரம் எல்லாம்
பசியால் கையேந்திய ஏழைகளை இனி
பார்ப்பது கூட கடவுளை
பார்ப்பது போல் தோன்றும் நிலை வரும்.!
ஏற்றத் தாழ்வுகள் என்ற வார்த்தைகளே
உலக அகராதியில் இருந்து நீக்கப்படும்.
இனி வரும் நாட்களில் எல்லாம்
எல்லோருக்கும் ஏற்றம்தான் என்ற
புதுமை வார்த்தைகள் ஒவ்வொருவரின்
சுவாசக் காற்றிலும் அச்சிடப்படும் .
இப்படி புதிதாய் பல இலட்சியங்களை
நான் நிரப்பத் தொடங்கிவிட்டேன்
இன்று என் இதயம் ஒரு வெற்று காகிதம்.!
எதிர்காலத்திற்கு என்று எண்ணி எண்ணி
சேர்த்து , நிகழ்காலத்தில் வாழாமல்
வசந்தமின்றியே இறந்துவிட்டது வாழ்க்கை.
இனியும் அறிந்தே இந்த தவறுகள் வேண்டாம்.
நாளை முதல் உங்களின் இதயங்களும்
ஒரு வெற்று காகிதம்தான் .
அதில் நிரப்பத் தொடங்குங்கள்
பல இலட்சிய எண்ணங்களை .
இது நாள் வரை விலை கொடுத்து
வாங்கிய புன்னகை எல்லாம்
இனி உங்களின் இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும்.
நீங்கள் தொலைத்த வெற்றிகள் எல்லாம்
இனி உங்களுக்கு
ஒரு புது முகவரி தேடித் தரும் .
புன்னகையே உங்களுக்காக இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும் பொழுது
புதிதாய் பிறக்கும் இந்த புத்தாண்டு காத்திருக்காதா என்ன .?
நம்பிக்கையுடன் அடியெடுத்து வையுங்கள்
வெற்றி நிச்சயம்.!
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . திண்டுக்கல்லில் மழையோடு புத்தாண்டு துவங்கியது . உங்க ஏரியாவுல எப்படி .

Labels: , , , , ,

சன் டேரைக்ட் யின் புத்தாண்டு கவர்ச்சி சலுகை ! மாட்டுவார்களா மக்கள் !!!

2014 புத்தாண்டு தின சிறப்பு சலுகைகளை கொடுத்து மக்களை கவரும் வகையில் கூறிப்பாக தாய் குலங்களை கவரும் வகையில் புதிய சன் டரைக்ட் கணைக்ஷ்ன் வாங்கினால் குக்வோர் இலவசம் என அறிவித்துள்ளது. மற்றொரு ரீசார்ஜ் ஆஃப்பர் ஒரு வருட சந்தா மற்றும் ஆறு மாத சந்தா என இரு வழிகளில் விட்டுள்ளது இந்த சலுகையை பழைய வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம் . இது என்னோட நண்பன் வீட்டுல நடந்தது டேய் இந்த கணைஷனை எடுத்துட்டு சன் டைரைக்ட் போடலான்டானு சொன்னன் அதலாம் வேணாம்னு சொன்னேன் பக்கத்தில வீட்டுல எவனோ வாங்கி மாட்டிருக்கானம் ஏதோ கிப்ட் கொடுத்தானம் அதன் வேணும்னு ஒரே சண்டைனு சொன்னான் . அப்போ இந்த விஷயம் எவ்வளவு ரீச் ஆகிருக்கு பாருங்க தாய்குலங்களிடம் . அய்யோ தாங்க முடியல சாமினு நிணைப்பீங்க அதான் உண்மை . மேலும் பல பல தகவல்களுக்கு காத்திருங்கள் தமிழன் டிடிஹச் யின் புத்தாண்டு சலுகை பொருள்களுக்காக மேலும் இன்று உங்களுக்காக ஒரு இரவு மின்னல்கள் பதிவு உள்ளது .

Labels: , ,

வீடியோகான் டி2ஹச் அலைவரிசையில் எட்டு சேனல்கள் இலவசம் !!!

வீடியோகான் டி2ஹச் அலைவரிசையில் எட்டு சேனல்கள் தற்காலிகம் இலவசமாக விடப்பட்டுள்ளது அந்த சேனல்கள் விபரம் பின் வருமாறு
1. Life Ok

2. Sony Sab

3. Sahara One

4. Star Utsav

5. DD National

6. Food Food

7. Home Shop 18

8. மற்ற சேனல்கள் பெயர் வரவில்லை

Labels: , , , ,

ஏசியா சட் 5 க்கு படையெடுக்கும் தமிழ் சேனல்கள்!!!

ஆசியா சட் 5 100.5 க்கு படையெடுக்கும் தமிழ் சேனல் ராஜ் டிவி குழுமத்தின் தமிழ் , கன்னடம் , தொலுங்கு ஆகிய அனைத்தும் முதலில் மாற ஆரா டிவி , ராயல் டிவி , மெகா குருப் சேனல்கள் என அனைத்து விதமான தமிழ் சேனல்களும் ஏசியா சட் 5 க்கு மாறிக்கொண்டே உள்ளது. இதன் காரணம் என்ன என்பதை தெரிந்தவர்கள் கூறலாம். இது பற்றி வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் கூறுகையில் இந்த சேட்லைட்யில் விடுவதன் மூலம் அரபு நாடுகளில் எங்களுக்கும் நல்ல தெளிவான சிக்ணல் கிடைக்கிறது என்றும் அனைத்து தமிழ் சேணல்களும் இதற்கு மாறினால் மிகவும் நன்றாக இருக்கும் . என கூறினார் இவருக்கு ரெம்ப தான் ஆசை பாருங்க எது எப்படியோ எந்த சேணலாக இருந்தாலும் மக்கள் இலவசமான முறையில் பார்க்கும் வகையில் இருந்தல் அதுவே எங்களுக்கு போதும். என்ன தான் ஏசியா சட் கு மாறினாலும் அதில் விடப்பட்ட டிஷ் டிவியின் ராஜ்டிஜிட்டல் , மெகா டிவி என்எஸ்எஸ் 6க்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீங்க பதிவை மட்டும் படிச்சுட்டு போன எப்படி கூகிள் வழி பேணர்கள் இந்த தளத்தில் உள்ளது கிளிக் செய்து பாருங்கள் பிடித்தால் வாங்குங்கள்.

Labels: , , , , ,

12/29/13

தேவையற்ற சேனல்களை நீக்க டிஷ் டிவி புதிய திட்டம்

ஆசிய பசிபிக் கண்டத்தில் மிகப்பெரிய DTH சேவை வழங்குநர் டிஷ் டிவி என்பது யாராலும் மறுக்க முடியாது . தனது  உள்ளடக்க செலவுகளை குறைக்கவும், வருவாய் திட்டத்தை அதிகரிக்கவும் மேலும் சந்தாதாரர்களின் நன்மைக்காகவும் உதவும் பொருட்டு ஒரு புதிய முயற்சியை கொண்டு வருகிறது .
சந்தாதாரர்கள் அவர்கள் முற்றிலும் பார்க்காத சேனல்களை வெளியேற்ற செய்யும் திட்டத்தை செய்ய அனுமதிக்கும் பொருட்டு  கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே  சேனல்கள் , வழங்க திட்டமிட்டுள்ளது. 
ஆர்.சி. வெங்கடேஷ் , தலைமை நிர்வாக அதிகாரி , டிஷ் டிவி இந்தியா, அவர்கள் கூறுகையில்...  இது ஒரு அல கற்றா   எனப்படும் ஒற்றை சேனல் ஆபர் அல்ல... ஆனால் இந்த திட்டம் தற்போதுள்ள பேகேஜ்களில் அமல்படுத்தப்படும் " , என்றார் .
 நாங்கள் படிப்படியாக  கோரிக்கை உள்ள சேனல்கள்  என சேனல்கள் பல வகைப்படுத்தவும் உத்தேசித்துள்ளோம் , "என்றும்  உதாரணமாக , டிஷ் டிவி யில் அதன் கோல்டு பேகேஜில் மாதத்திற்கு ரூ. 280 சந்தாவில் 260 சேனல்களை வழங்குகிறது ,  டிஷ் டிவி அதன் ஒவ்வொரு பிரிவுகளில் இருந்தும் 20 சேனல்களை தேர்ந்தெடுத்து இந்த சேனல்கள்  கோரிக்கை அடிப்படையில் கிடைக்கும்  என்று சந்தாதாரர்களுக்கு தெரிவிக்கும். சந்தாதாரர் அந்த சேனல்களை வேண்டாம் என்று கூறினால் அந்த சேனல்களை அவர்கள் பார்க்க முடியாது என்றால் " , அந்த சேனல்களில் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதாக பொருள்... ஒரு கடைசி தேதி கொடுக்கப்பட்ட பின்னரும்... அந்த சேனல்கள் மீது ஆர்வம் இல்லை எனில் அந்த சேனல்கள் அவர்கள் பேக்கில் இருந்து நீக்கப்படும். வாடிக்கையாளர் சுமார் 100 சேனல்கள் வேண்டாம் என்று தெரிவித்தார் என்றால் , 260 சேனல்கள் கொண்ட பேக் 160 சேனல் ஆக குறையும்.
டிஷ் டிவியின் உள்ளடக்க செலவு குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
" கோல்டு பேக்கில் ஒரு சேனல் 3 மில்லியன் சந்தாதாரர்களை அடைகிறது . ஆனால் 50,000 பேர் மட்டுமே கண்டு வருகின்றனர் என்றால்... Reference interconnect offer  (RIO) படி நான் 50,000 சந்தாதாரர்களுக்கு மட்டுமே தொகை செலுத்துவேன் அதை விடுத்து நான் ஏன் 3 மில்லியன் இணைப்பிற்கு RIO செலுத்த வேண்டும் , "என்று கூறினார்.


Labels: , , , , , , , ,

12/25/13

GASTONE 8 PORT & GECEN 4 PORT DISEQC SWITCH NOW AVAILABLE !!!!

GASTONE 8  PORT & GECEN 4 PORT DISEQC SWITCH தற்பொழுது தமிழன் டிடிஹச் அறிமுகப்படுத்தியுள்ளது இது மற்ற கம்பெனி ஸ்ட்ச்சுக்கள் டெக் விஷன் போன்று சீக்கிரம் பலுதாக வாய்ப்பில்லை இது நேரடியாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும் . இந்த சுட்சை ஒரு முறை வாங்கி பயன்படுத்தி பாருங்கள் அதற்கு இதற்கு நிறைய மாற்றம் தெரியும் . இது தேவைக்கு என்னை அனுகலாம் 9095319220 .தமிழன் டிடிஹச் வாசகர்களே ஒரு முக்கிய வேண்டுக்கோள் 26ம் தேதி முதல் டிசம் 30 வரை யாரும் தொடர்பு கொள்ளவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் . ஏதேனும் தகவலுக்கு எஸ்எம்எஸ் செய்யவும். என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்.

Labels: , ,

12/23/13

டிடிஎச் சேவையை மத்திய அரசு தொடக்க வேண்டும் விபூத் பார்த்தசாரதி !!!

மத்திய அரசு மலிவு விலை டிடிஎச் சேவையை தொடங்கி நடத்த வேண்டும் என்று சமூக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் விபூத் பார்த்தசாரதி வலியுறுத்தியுள்ளார் . அவர் கூருகையில் உலகில் நடக்கும் நிகழ்வுகள் உடனுக்குடன் பார்க்கும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால் நாம் விரும்பும் சேனல்களைப் பார்க்கும் வசதி இந்தியாவில் இல்லை. நாம் ஒரு நிறுவனத்தின் டிடிஎச் சேவையை வாங்கினால், அந்த நிறுவனம் வழங்கும் சேனல்களை மட்டுமே பார்க்க முடிகிறது. நாம் விரும்பும் சேனல்களைப் பார்க்க  டிடிஎச்-ஐ கூடுதலாக வாங்க வேண்டும். இதனால் கூடுதலாக செலவழிக்க வேண்டியுள்ளது.
அனைத்து டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனத்துக்கும் பொதுவான செட்டப் பாக்ஸ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மூலம் மலிவு விலையில் டிடிஎச் சேவையைத் தொடங்கி நடத்த வேண்டும். இதில், நாட்டிலுள்ள அனைத்து சேனல்களையும் பார்க்கும் வகையில் நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.
இவை தொடர்பான கண்காட்சி பெங்களூர் டோம்லூரில் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது என்றார் பார்த்தசாரதி . இந்த செய்தி தினமணி யில் நேற்று விடப்பட்டது .

Labels:

டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி!!

ராஜ்டிஜிட்டல் பிளஸ் மற்றும் மெகா டிவி ஏசியா சட் 5 100.5யில் இருந்து தனது தற்போதைய செயற்கைகோலான என்எஸ்எஸ்6 95 டிகிரிக்கு மாற்றியுள்ளது இது மட்டுமால்லாமல் மேலும் பல தமிழ் சேனல்களை விடவுள்ளதாக நமக்கு தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் அனைத்து சேனல்களையும் நாம் ஒரே எல்என்பி யில் கண்டுகளிக்கலாம் .

Labels: , , ,

12/22/13

சீன அரசு 2.5 லட்சம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி செய்திகளை வெளியிடுவது எப்படி!!!

சீன அரசு பத்திரிகை தொடர்பாக புதிய விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும், தணிக்கை விதிகளையும் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் தனது நாட்டில் உள்ள அனைத்து வகை ஊடகங்களையும் புதிய விதிமுறையின் கீழ் செயல்பட வைப்பதற்காக அதில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த பணியை சீன அரசின் செய்தி ஊடக துறை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி சீனாவின் இரும்பு திரை நாடு என்ற முத்திரை விலகி மேலும் சுதந்திரமாக எழுதவும், செய்திகளை வெளியிடவும் வாய்ப்பு ஏற்படும் என அந்நாட்டின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

இந்த பயிற்சிக்காக சீன நாட்டில் செயல்படும் முக்கியமான வானொலி, தொலைகாட்சி, பத்திரிகை, இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களை சேர்ந்த 2.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது அவர்கள் அனைவருக்கும் ராணுவ சீருடை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பயிற்சி 2013ம் ஆண்டின் இறுதி வரை நடைபெறும்.

இந்த பயிற்சியில் சீன கலாசாரம், கம்யூனிஸ்ட் பார்வையில் செய்திகளை எவ்வாறு வெளியிடுவது, சமூகவியல் பார்வை, பத்திரிகை தர்மம், சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப செய்திகளை எவ்வாறு தணிக்கை செய்வது, தவறான தகவல்களை மற்றும் அரசுக்கு எதிரான தகவல்களை எவ்வாறு கையாள்வது போன்ற பிரிவுகளின் கீழ் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெற்ற பத்திரிகையாளர்கள் அதன்பிறகு நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவிர பத்திரிகையில் பணிபுரியும் நிர்வாக ஊழியர்களுக்கு தனியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Labels: , , , ,

12/21/13

எஸ் ஆர் எம் குழுமத்தின் ஆங்கிலம் செய்தி சேனல் துவங்குவதில் சிக்கல் !!!

எஸ் ஆர் எம்  குழுமத்தின் புரோமோட்டர் நிறுவனங்களில் ஒன்றின் மூலமாக நடத்தப்படும் சென்னை சார்ந்த புதிய தலைமுறை மீடியா கார்ப்பரேஷன் , ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு , ஒரு  24 * 7 ஆங்கிலம் செய்தி சேனல் தொடங்க முடிவு செய்த நிலையில், அதன் தொடக்க திட்டங்கள் அனைத்தும் குழம்பிய நிலையிலேயே உள்ளது.  குழுமம் சேனல் தொடங்குவதற்காக திறக்கப்பட அதன் டெல்லி மற்றும் சென்னை அலுவலகங்கள் மூடப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தொழில் மிக நெருங்கிய வட்டாரத்தில்.... குழுமத்தின் ஆங்கிலம் செய்தி சேனல் தொடங்கும் திட்டம் கைவிடப்பட வில்லை என்று தெளிவான ஒளிபரப்பு வெளியீட்டு தேதி தெரியவில்லை எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது, ஆனால் தனியார் ஆங்கில இணையத்தில் வெளிவந்த செய்தியில்... கடந்த நான்கு மாதங்களாக சேனல் தொடக்க பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் மேலும் சேனலின் மூத்த அதிகாரிகளுக்கு சேனல் ஒளிபரப்பு தொடங்கிய உட முழு சம்பளமும் தரப்படும் எனவும் அது வரை ஊதியத்தில் சில வெட்டுக்கள் வெட்டப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய தலைமுறை வட்டாரங்கள் கூறுகையில் சேனல் தொடங்குவதற்கு ஏற்பட்ட தாமதம் குறித்த காரணங்களாக " சென்னையில் அதன்  குழு அலுவலகங்களில் வருமான வரி சோதனைகள் மேலும் இந்த ஆண்டு தமிழ் GEC  சேனல் புதுயுகம் சமீபத்த்தில் அறிமுகமான பிறகு ஏற்பட்ட நிதி பற்றாக்குறை " போன்றவை என தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்களிடம் பணிநிறுத்தம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாகவும்... ஆனால் அதே நேரத்தில் சேனல் எப்போது தொடங்கப்படும் என்பதில் எந்த ஒரு தெளிவும் இல்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.   மேலும் சேனல் தரப்பில் சம்பள குறைப்பு வேண்டாம் என நினைப்பவர்களுக்கு...  அதற்கு பதிலாக ஓர் அறிய கைகுலுக்கல் திட்டத்துடன் வெளியே அனுப்பும் திட்டத்தையும் யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய தலைமுறை மீடியா குழுமத்தில் தற்போது. புதுயுகம் , கல்வி , கலைசாரல் ,பெண்கள் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Labels: , , , , , ,

12/20/13

ரிலையன்ஸ் டிடிஹச் சேவையில் மூன்று புதிய வரவுகள்!

ரிலையன்ஸ் டிடிஹச் சேவையில் மூன்று புதிதாக சேனல்களை சேர்த்துள்ளது.
1)  Star Movies Action CH NO : 359
2)  Star Sports 2 CH NO :   502
3)  Zee Tamil CN NO : 818

ஆகிய அலைவரிசை எண்களில் விடப்பட்டுள்ளது

Labels:

12/18/13

ராயல் டிவி தற்பொழுது ஏசியா சட் 5 யில் துவக்கம்!!!

ராயல் டிவி தற்பொழுது ஏசியா சட் 5 100.5 யில் தனது ஒளிபரப்பை துவங்கியுள்ளது இதனால் வெளிநாடுகளில் அதிக அளவில் மக்கள் காணக்கூடிய வாய்ப்புள்ளது . இது நல்லதொரு முயற்சி ராயல் டிவிக்கு ஒரு சில படக்காட்சிகள்








Labels: