5/30/13

சோனி குழுமத்தின் புது தமிழ் வரவு விரைவில்!!!

வட இந்தியாவியில் ஹிந்தி மற்றும் பிற வட இந்தியமொழிகளில் தனது சேவையை வழங்கி வரும் சோனி நிறுவனம் தென் இந்தியாவில் தமிழ்நாட்டில் தனது சேவை விரைவில் சோனி தமிழ் தொலைக்காட்சியை விடவுள்ளது. இது விரைவில் வெளியாகும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Labels:

5/29/13

IPM தாய்லாந் DTH பற்றிய ஒரு தகவல்!!!

இந்தியாவில் எப்படி டிடி டேரைக்ட் பிளஸ் இருக்கிறதோ அதனை போலவே தாய்லாந்திலும் ஐபிஎம் என்ற பெயரில் டிடிஹச் சேவை இயங்கி வருகிறது. ஒரு முறை பெற்றால் போதும் அனைத்து விதமான இலவச சேணல்களையும் கண்டு மகிழலாம். இதில் என்ன விஷேசம் என்றால் அதிகப்படியான ஹச்டி சேணல்கள் கிடைக்கும் என்பது தான் உண்மையான சேவையாகும் , இதன் ஒரு படக்காட்சிகள் மற்றும் டிஷ் படங்களை முதன் முறையாக வெளியிடுகிறேன். இந்த படத்தை நமக்கு அளித்த துரைச்சாமி மலேசியா அவர்களுக்கு மிக்க நன்றி.














Labels:

1005 days deactivated customer see this!!!!!

Special offer Inactivated Box beyond 1005+ days (2.9 year)fixed list Do 1 month recharge and get 4 months (3 months additional) Note: Activation link and other details remain the same More information contact your ASE/RSM ...

more information call us : 9095319220 






Special offer
Inactivated Box beyond 1005+ days (2.9 year)fixed list
Do 1 month recharge and get 4 months
(3 months additional)
Note: Activation link and other details remain the same
More information contact your ASE/RSM

Labels: ,

5/28/13

சாட்டிலைட் பற்றாக்குறையால் இந்தியாவில் DTH முன்னேற்றம் ஓழியும் சூழல்...!!

இந்தியாவின் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள், பல மொழிகள் , வளரும் பொருளாதாரத்தை கொண்ட மக்களாக உள்ளனர். கடந்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் , DishTV தனிப்பட்ட மற்றும் தனக்கென உள்ள DTH சந்தையாக இருந்தது. இருப்பினும் , டாடா ஸ்கை , பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஏர்டெல் டிஜிட்டல் டிவி BiGTV யை கொண்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இன்னும் மற்றவர்களின் சமீபத்திய புதிய வரவுகளால் இதன் எண்ணிக்கை மற்றும் சந்தையில் இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
டாடா ஸ்கை 2006 ல் சேவைகள் தொடங்கப்பட்டது ஏற்கனவே 10.5 மில்லியன் இணைப்புகள் மேல் குவித்து வருகிறது. நிறுவனம் விரைவில் இந்திய ஊதிய தொலைக்காட்சி சந்தையில் ஒரு முக்கிய சக்தியாக மாறியிருக்கிறது , ஆனால் அதன் இப்போதைய பிரச்சனை ஆபரேட்டரின் முதுகெலும்பாக உள்ளது , YigitRiza, CTO, டாடா ஸ்கை , இந்தியாவில் இத்தகைய பாதிப்புகள் ஒவ்வொரு ஆபரேட்டருக்கும் உள்ளது என நம்புகிறது... அது: செயற்கைக்கோள் பற்றாக்குறைதிறன். "டிடிஎச் ஆபரேட்டர்கள் அனைவரும் இப்போது உள்ள தங்களது திறனைஇரட்டிப்பு திறன் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். அமெரிக்காவின் டைரக்டிவி என்னும் DTH நிறுவனம் வெளிப்படையான மற்றும் ஒரே சீராக உள்ள சந்தையில் , இன்று 3 , 000 சேனல்களை uplinking செய்கிறது . நீங்கள் இந்தியாவின் அதன் மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட முன்னோக்கி செல்லும் இந்த சந்தையின் திறன் எவ்வாறு இருக்கும் என நம்பமுடிகிறதா ? நாம் இப்போது 12 ட்ரான்ஸ்போன்டர்கள் பயன்படுத்துகிறோம். நாம் இதை பல மடங்கு அதிகமாக்கினால் மட்டுமே நம் தேவைகளை பூர்த்தி செய்யஇயலும் என்றும் , " அவர் கூறுகிறார்.
சுமார் 13 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட DishTV, செயற்கைக்கோள் திறன் ஆசியாவின் முக்கிய பங்களிப்பாகும். நிறுவனம் 36 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 54 மெகா ஹெர்ட்ஸ் , கொண்ட ஒரு கலவையான 14 ட்ரான்ஸ்போன்டர்களை கொண்டுள்ளது மேலும் அதன் மொத்த திறன் 616 மெகா ஹெர்ட்ஸ் மொத்த அலைவரிசையை பயன்படுத்தும். ராஜீவ் கட்டார் , DishTV திட்ட தலைவர் , திறன் அணுகுவதே ஒருபெரிய பிரச்சனையாக மாறிவிட்டது என்கிறார்.
இஸ்ரோவில் DTH வீரர்களுக்கு ட்ரான்ஸ்போன்டர்கள் கிடைப்பதை வேகத்தில் செயல்படுத்த முடியாது என"செயற்கைக்கோள் திறன் சமீபத்திய ஆய்வில் ஒரு திறந்த வெளி (Open Sky)கொள்கை வலியுறுத்தியுள்ளது.
சசி அரோரா , தலைமை நிர்வாக அதிகாரி , DTH / மீடியா , பாரதி ஏர்டெல் , ஆபரேட்டர் தற்போது போதுமான திறன் கொண்ட போதும் , இன்னும் அதிகதிறன் அனுமதி பெறுவது நிறுவனத்தின் ஒரு "முக்கிய கவன"மாக மாறிவிட்டது என்பதைஒப்புகொண்டார்.
"கூடுதல் திறன் மூலம் 200 மேற்பட்ட சேனல்களுடன் தற்போதைய 300 சேனல்களையும் சேர்த்து DTH தொழில் சேனல் அறிவுத்திறன் அதிகரிக்க 500 சேனல்கள் என்ற கட்டாய நிலையை செயல்படுத்த வேண்டும் எனவும் அப்படி செய்தால் மட்டுமே டிஜிட்டல் கேபிள் ஆபரேட்டர்களுடன் ஒரு நிலை துறையில் போட்டியை உருவாக்க முடியும் ," என்றும் அவர் கூறுகிறார்
இந்திய செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவை என்பது ஒரு பணக்கார சந்தையா என்று சிறிய சந்தேகம் இருக்கிறது.பயனற்ற கேபிள் போட்டி மற்றும் குறைந்து வரும் தரைவழி ஒளிபரப்பு கொண்டு , DTH வீரர்கள் வலுவான , நிலையான வர்த்தக உருவாக்க ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது. அதிக திறன் அணுகுவது என்பதுமட்டும் ஆபரேட்டர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை மட்டும் அல்ல என்கிறார் சுதிர் கோசர், தொழில்நுட்ப செயல்பாடு தலைவர் , ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி. அவர் மேலும் கூறுகையில் நிறுவனத்தின் வருவாயில் சுமார் 30 சதவீதம் பல்வேறு மாநில வரியாக போகிறது என கூறுகிறார்.
"DTH வேறு எதையும் விடவும் Ku-Band சார்பு உள்ளது. எங்களுக்கு , எங்கள் செயற்கைக்கோள் [கொள்ளளவு]என்பது ஒரு வாழ்வா சாவா நிலையில் உள்ளது. திறன் பற்றாக்குறை உண்மையில் எதிர்காலத்தில் நம்மை பாதிக்கும் ; மற்றும் வருந்ததக்க வகையில் உள்ளது.ஏழு DTH வீரர்கள் , போதிய போட்டி இருக்கிறது , ஆனால் அங்கு செயற்கைக்கோள் முக்கியத்துவம் அங்கீகாரம்இருக்க வேண்டும் , மேலும் நாம் வாடிக்கையாளர்களுக்குசிறந்த சேவையை வழங்கும் நிலையில் உள்ளோம் என்றும் ," அவர் கூறுகிறார்.
குறைந்த பட்சம் 60 HD சேனல்கள்
HD சேவைகள், செயற்கைக்கோள்களின் கொள்ளளவு திறனை பாதிக்கிறது மேலும் இது அனைத்து ஆபரேட்டர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. நான்கு ஆபரேட்டர்கள் DishTV, ஏர்டெல் , BiGTV மற்றும் டாடா ஸ்கை , கருத்தில் ஒரு சிறிய குறைந்த அளவான 60 க்கும் HD சேனல்கள் வழங்குகின்றன சேவையில் மொத்தத்தில் அவர்களுக்கு இடையே சுமார் 30 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.
DishTV 20 முழு HD சேனல்களை கொண்டு , மேலும் கட்டார் கூறுகையில் நிறுவனம் இந்த ஆண்டு மேலும் 10 முதல் 12 HDசேனல்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது என்கிறார். Riza கூறுகையில் நிறுவனம் " , 30 செயல்படுத்தவிரும்புகிறது" ஆனால் திறனின் காரணமாக முடியாது என ஏற்றுக்கொண்டாலும் கூட டாடா ஸ்கை தற்போது 13 HD சேனல்களை கொண்டு செல்கிறது. BiGTV HD சேவைகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட , மற்றும் அதன் HD PVR சேவை 2010 ல் தொடங்கப்பட ஒரு தனி டிரான்ஸ்பாண்டர் உள்ளது. இப்போது 8 முதல் 10 HD சேனல்களை கொண்டுள்ளது, அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மூன்று மடங்காகவும் விரும்புகிறது.

Labels: , ,

5/27/13

ஏர்டெல் டிடிஹச்யின் ஆன் டிமென்ட் சேவை !!!

ஏர்டெல் புதிய எச்டி கணெக்ஷ்ன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது ON DEMOND சேவை. அதாவது etharnet connection எனப்படும் போர்ட் வழியாக இணையதளம் மூலம் படங்கள் , வீடியோஸ், கேம், போன்ற பொழுது போக்கு அம்சங்களுடன் அடங்கிய ஒரு சேவையை இந்தியாவில் முதன் முறையாக ஏர்டெல் டிடிஎச் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய SD வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற HD CONNECTION க்கு மாற வேண்டும். அல்லது வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மெபைலில் இருந்து OD என டைப் செய்து 54325 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்யவேண்டும். மேலும் விபரங்களுக்கு 18001028080 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Labels: ,

தமிழன் டிடிஹச் செய்திகளை உங்கள் மொபைலில் படிப்பது எப்படி?

அன்பான வாசகர்களே மற்றும் நண்பர்களே நீங்கள் ஜிபிஆர்எஸ் வசதி உள்ள மொபைல் இருந்தும் உங்களால் தமிழன் டிடிஹச் செய்தி மற்றும் தமிழ்தளங்களை காணமுடியவில்லைய இனி கவலை வேண்டாம். m.operamini.com என்ற தளத்தில் சென்று டவுன்லோடு செய்யும்.
கைபேசியில் தமிழ் இணையத் தளங்களை பார்ப்பது இயலாத காரியம் என நினைத்தால் அதை கைவிடுங்கள். அதற்கும் ஒரு வழி உள்ளது.
கைபேசியில் வலைத் தளங்களை பார்வையிட பயன்படுத்தப்படு ம் OPERA MINI BROWSER இல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் தமிழ் இணையத் தளங்களை எம்மால் பார்வையிட முடியும்.முதலில ் இணையத்தில் சென்று operamini brower என்பதஒ டவுன் லோட் செய்து கொள்ளுங்கள்...
(உங்கள் தொலைபேசியின் திகதி சரியாக இருக்க வேண்டும்..திகதி யை மாற்றிக்கொள்ளுங ்கள்..இலாவிடின் இந்த மென்பொருள் திறக்காது)
பின்பு கீழ் குறிப்பிட்டவாறு அவ் மாற்றங்களை செய்யுங்கள்.
OPERA MINI BROWSER இன் ADDRESS BAR இல் " opera:config " என TYPE செய்து ENTER பண்ணுங்கள்.
USER SETTING பக்கம் ஒன்று வரும்.அதில் " use bitmap fonts for complex scripts " என்பது " No " எனஇருக்கும். அதனை " Yes " என மாற்றம் செய்து " Save " BUTTON ஐகிளிக் செய்யுங்கள்.
இனி உங்களால் தமிழன் டிடிஹச் செய்தி மற்றும் தமிழ் இணைய பக்கங்களை உங்கள் கைபேசியிலேயே கண்டு மகிழலாம்.

Labels:

5/26/13

STARTRACK GALAXY+ இந்த மாத அறிமுகம்!!!

தற்பொழுது உங்கள் இல்லத்தை அதிர வைக்கும் தெளிவான படத்துடன் கூடிய சத்தம்,>>>>>>>>>>>> அதாவது புல் ஹச்டி திறனுடன் இரண்டு யுஎஸ்பி போர்ட் வசதியுடன் , அனைத்து விதமான ஆடியோ வீடியோகளையும் இயக்கும் சக்தி வாய்ந்த திறன், மற்றும் டிடிஎச் ஸ்மார்ட் கார்டுகளை இயக்கும் திறன் ( சி பேண்ட் ) , ஜி மெயில், யு டுப், முகப்புபக்கம், ஆன் லைன் வீடியோக்கள் அனைத்தையும் டேடா கார்டு மூலம் அல்லது இன்டர்நெட் மூலம் பார்க்கலாம், 2ஜி அல்லது 3ஜி சேவைகளில் தெளிவாக நமக்கு படங்களை காட்டு அளவு திறன் வாய்ந்த ஸ்டார் டேர்க் கேலக்ஜி தற்பொழுது தமிழ்நாட்டில் முதல் முறையாக நமது தமிழ், ஆங்கிலத்தளங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதமான ENcryption களையும் ஏற்றுக்கொள்ளும் திறனும் இதற்குண்டு கூறிப்பாக BISSKEY, IRDITO , CONAX, NACA, EXTRA . இந்த பாக்ஸ்களை நீங்க பெற உங்கள் மொபைலில் 9095319220 அல்லது 9842980110 என்ற இலக்கங்களை டயல் செய்து ஆர்டர் செய்யலாம். இதன் ஒரு சில படக்காட்சிகள் உங்கள் முன் சமர்பிக்கிறோம்.




Labels:

5/25/13

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் ( உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்) அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி,குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில்

உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detailஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contactஇருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : DGD2012M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், திண்டுக்கல்)
பதிவு செய்த ஆண்டு : 2012
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல்4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : DGD2012M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Labels:

அறிமுகமாகவுள்ள புதிய தமிழ் சேனல்கள்!!!

தமிழ் தொலைக்காட்சி பெருகி வரும் இந்நாளில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சேனல் டிஆர்பி ரேட்டிங் மற்றும் வாடகை போன்ற ஒரு சில விஷயங்களால் ஆரம்பிக்கப்பட்ட சிறிது மாதங்களில் காணமல் போய் விடுகின்றனர். ஆனாலும் தமிழ்மொழியில் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்படுவதன் ஆர்வம் குறையவேயில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் சனல்கள் முக்கியதுவம் அடைந்துள்ளது. இந்தியாவில் ஒரு ஆய்வின் முடிவில் இந்தி சேனல்களுக்கு அடுத்தபடியாக அதிகமான தொலைக்காட்சிகளை வைத்துள்ள மாநிலம் தமிழ்நாடு என ஆய்வறிக்கை கூறுகிறது, இந்தியாவில் பிற மொழிகளூக்கு அடுத்து ,தமிழ் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
மேலும் வரவிருக்கும் தமிழ் சேனல்கள் விபரம்.

க்சாஷி டிவி,
பிக் தமிழ் செய்திகள்,
SVBC தமிழ்,
ஆசியாநெட் செய்திகள்,
UTV Action தமிழ்,
சன் பிளஸ்,
MTV தமிழ்,
TV9 தமிழ்,
மலர் செய்திகள்,
TN Now,
CNN தமிழ்,
Sony தமிழ்,
பக்தி டிவி,

Labels: ,

தமிழன் டிடிஹச் - ன் நியூஸ் எக்ஸ்பிரஸ்!!!

1) விரைவில் விஜிபி குருப் ஆரம்பிக்க உள்ள சேனலின் பெயர் CH26 இதன் லோகோவை அறிமுகம் செய்துள்ளது.
2) புதியதலைமுறை துவங்கப்பட்ட நாளிலிருந்து புதுயுகம் தனது ஒளிபரப்பை துவங்கவுள்ளது.

3) ராயல் டிவியின் ஒளிபரப்பிற்கு இடையே குட்லைப் என்னும் பெயர் தினிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு 

4) பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள வேந்தர் டிவி அடுத்த மாத இறுதியில் தனது ஒளிபரப்பை துவங்கவுள்ளது.

5) ஆகஸ்ட் 25 முதல் கேப்டன் மியூசிக் தனது சோதனை ஒளிபரப்பை துவங்கும் என தேமுதிக வினர் இடையே ஒரு கார சாரமான பேச்சு.

6) தமிழகத்தின் சென்னை அல்லாத பிற மாவட்டமான கோவை , மதுரை, சேலம் , திருச்சி, யை தொடர்ந்து திண்டுக்கலில் மிகவும் பிரமாண்டமான 15ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்பட்டு வரும் ஒரு தனியார் டிவி, அடுத்த ஆண்டு திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் திருவிழா தொடங்கும் போது தனது சேட்லைட் ஒளிபரப்பை துவங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கான கட்டிடப் பணி ஆர்.எம்.காலனி அருகே மிகவும் பிரமாண்டமாய் கட்டப்பட்டு வருவதாய் கே.செய்தியாளர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

Labels:

5/21/13

ரீசார்ஜ் செய்யலாம் வாங்க !!!

தமிழன் டிடிஹச் வாசகர்களே நண்பர்களே ஒர் முக்கிய அறிவிப்பு நீங்கள் சுயமாக மொபைல் மற்றும் டிடிஹச் , ஈ பி பில் கட்ட வேண்டுமா, இனி கவலை வேண்டும். உங்கள் கையில் இருக்கும் தொலைபேசியில் இருந்து செய்யலாம் அல்லது
ஜீ பி ஆர் எஸ் வசதி உள்ள மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள் மிகவும் எளிதாக ஆகிவிடும். எங்களின் Highspeed server உங்களின் கையில். எவ்வித பதிவு கட்டணமின்றி டீலர் ஐடியை பெற்று நீங்கள் ரீசார்ஜ் செய்வது மற்றுமின்றி மற்றவர்களுக்கும் ரீசார்ஜ் செய்து நீங்கள் லாபம் அடையாளம் . இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல இந்த சேவை இந்திய டிடிஹச் எங்கு பயன்படுத்தினாலும் இந்த சேவையை பெறலாம் ,எனக்கு தெரிந்த ஒரு சில நாடுகளின் பெயர்களை கூறுகிறேன் . இலங்கை , மலேசியா , குவைத் , சவுதி , வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ளவர்களும் தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் சிறந்த முறையில் சேவை வழங்கப்படும் . நீங்கள் பணம் கொடுத்த பின்பே நாங்கள் சேவையாற்றுவோம். உதாரணமாக: பணம் நாளை தருகிறேன் இன்று போட்டு விடுங்கள் என்று சொன்னால் செய்ய இயலாது. ஏனென்றால் இலங்கை, மற்றும் குவைத்தில் இருவர் காணமல் போகினர்.

CONTACT ME : +919095319220


Labels:

5/17/13

டிஜிட்டல் மயமாகும் இந்திய வானொலிகள்!!!!!

வானொலித் தொழில் நுட்பமானது நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் வானொலிப் பெட்டிகளின் உற்பத்தி இந்தியாவில் அறவே நின்றுவிட்டது. இந்த சமயத்தில்தான் நமது அகில இந்திய வானொலி ஒரு புதிய தொழில்நுட்பத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது. ஆர்டி..எம். (டிஜிட்டல் ரேடியோ மோண்டியல் 3058) எனும் அந்தத் தொழில்நுட்பம்தான் இனி இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ஊர்களிலும் வரப்போகிறது.
இதற்கு  அச்சாரமாக இருந்தவை செயற்கைக்கோள் வானொலிகள். இந்த ஒலிபரப்புகளில் ஒலியின் தரம் மிகத்துல்லியமாக இருந்ததால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான "வோல்ட் ஸ்பேஸ்' போன்ற வானொலிகள் புதுமையாக பார்க்கப்பட்டன. ஆனால் துரதிருஷ்டவசமாக அவை அனைத்தும் வந்த வேகத்திலேயேக் காணாமல் போயின. அதற்குக் காரணம், அந்த வானொலிகளை மாதாந்திர சந்தா கட்டியே கேட்க வேண்டி இருந்தது. இதன் காரணமாக இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.
ஆனால் இப்பொழுது "வோல்ட் ஸ்பேஸ்' மீண்டும் தனது சேவையைத் ஒரு தனியார் டி.டி.ஹெச். நிறுவனத்தோடு இணைந்து தொடங்கியுள்ளது.
அகில இந்திய வானொலியின் வரலாற்றில் 2009ஆம் வருடம் வரலாற்றில் பொறிக்க வேண்டிய ஒரு ஆண்டு. அந்த ஆண்டு தான் முதல் டி.ஆர்.எம். ஒலிபரப்பிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
புதுதில்லி காம்பூரில் அமைந்துள்ள உயர் சக்தி கொண்ட ஒலிபரப்பு நிலையத்தில் இருந்து 16 ஜனவரி 2009இல் தனது முதல் டி.ஆர்.எம். ஒலிபரப்பினைத் தொடங்கியது.
வானொலி கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகியும், இது வரை வானொலி ஒலிபரப்பானது "அனலாக்' முறையிலேயேச் செய்யப்பட்டு வந்தது. இதில் ஒலிபரப்பின் தரம் சுமாராகவே இருக்கும். ஆனால் "டிஜிட்டல்' தரத்தினைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
சாதாரண வானொலி ஒலிபரப்புகளில் நாம் குறிப்பிட்ட ஒலிபரப்பினை மட்டுமே கேட்க முடியும். ஆனால் டி.ஆர்.எம். ஒலிபரப்பில், வானொலி ஒலிபரப்போடு அந்த நிகழ்ச்சிகளின் விவரங்களும் டிஜிட்டல் திரையில் தெரியும். அத்துடன் நமக்குத் தேவையான நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவும் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், "எலக்ட்ரானிக் புரோகிராம் கைடு' இதில் இருப்பதால் அடுத்தடுத்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும்  கண்டுகொள்ளலாம்.
இன்னும் எளிதாகப் புரியும்வண்ணம் கூற வேண்டும் எனில், ஒரு திரைப்படப் பாடல் ஒலிபரப்பாகிவரும் அதே சமயத்தினில், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம், வெளிவந்த ஆண்டு, பாடியவர்கள், பாடலை இயற்றியவர், இசையமைத்தவர் என அனைத்து விவரங்களும் அந்த டிஜிட்டல் திரையில் ஒரு சேர நமக்கு கிடைக்கும். இது டிஜிட்டல் ஒலிபரப்பில் மட்டுமே சாத்தியமான ஒன்று.
இவை அனைத்தினையும் விட முக்கியமானது, அதன் தரம். பண்பலை ஒலிபரப்பின் தரத்தினைவிட பன்மடங்கு துல்லியமானதாக இருக்கும். மேலும் இது சிற்றலை மற்றும் மத்திய அலை ஒலிபரப்புகளையும் அதே தரத்தினில் கொடுக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியான ஒலிபரப்பு கோபுரங்கள் தேவையில்லை. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கோபுரங்களே போதும். டிஜிட்டல் ரேடியோ மோண்டியல் என்பதில் உள்ள மோண்டியல் என்பது பிரென்ச் வார்த்தை. இதற்கு "உலகளாவிய' என்று அர்த்தமாகும். வார்த்தைக்குத் தகுந்தார்போன்றே அதன் ஒலிபரப்புத் தரமும் உலக நாடுகளால் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய தொழில்நுட்பத்திற்கு நாம் செய்ய வேண்டிய செலவு கூடுதலாக 10 முதல் 20 சதவீதம் மட்டுமே. ஆனால் அதே சமயத்தில் நமக்கு இதன் மூலம் 20 முதல் 40 வரை மின்சாரமானது சேமிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலையும் இது பாதிப்பதில்லை.
ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளில் டி.ஆர்.எம். ஒலிபரப்பினைத் தொடங்கிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கே உரித்தான ஒன்று. ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் இன்னும் இதில் அடியெடுத்து வைக்காத சமயத்தில் நாம் இதில் முன்னோடியாகத் திகழ்வது நமக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தருகிறது. டி.ஆர்.எம் ஒலிபரப்பிற்கு நாம் மாறுவதன் மூலம், இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு குறைந்த ஒலிபரப்பிகளைக் கொண்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நேயர்களையும் சென்றடையலாம். இந்தியாவானது பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தில் டி.ஆர்.எம். ஒலிபரப்பிற்கு என ரூ.9.20 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 70 சதவீத மக்களை டி.ஆர்.எம். ஒலிபரப்பானது சென்றடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த டி.ஆர்.எம். தொழில்நுட்பத்தினை இன்னும் ஐந்தாண்டுகளில் அனைத்து நாடுகளும் கையாள உள்ளன. ஆனால் இதில் ஒரு குறை இப்பொழுது உள்ளது. டி.ஆர்.எம்.  ஒலிபரப்பினைக் கேட்க தனியான வானொலிப் பெட்டியினை நாம் வாங்க வேண்டும். நம்மிடம் ஏற்கெனவே உள்ள வானொலிப் பெட்டிகளில் இந்த டிஜிட்டல் ஒலிபரப்பினைக் கேட்க முடியாது.
ஏற்கெனவே இருந்த வோல்ட் ஸ்பேஸிலும் இதுதான் சிக்கலாக இருந்தது. டி.ஆர்.எம்.  வானொலிப் பெட்டியின் குறைந்தபட்ச விலையே ரூ.10,000 எனும்போது நிச்சயம் நம்மில் பலர் அதனை வாங்கவே யோசிப்போம். ஆனால் அரசின் கருத்தின்படி, முழுமையாக இந்தத் தொழில்நுட்பம் செயல்படத் தொடங்கிவிட்டால் வானொலிப் பெட்டியின் தேவை அதிகரிக்கும். அப்பொழுது விலை நிச்சயம் குறையும் என்கிறது அரசு. 
இன்று ஆண்ட்ராய்டு வசதி கொண்ட கைப்பேசிகளில் இலவசமாக டி.ஆர்.எம். மென்பொருட்களைப் பதிவேற்றி தனியான டி.ஆர்.எம். வானொலிப் பெட்டிகளை வாங்காமலேயே ஒலிபரப்புகளைக் கேட்க முடியும்.
ஆக, இனி வானொலி ஒலிபரப்புகளை வானொலிப் பெட்டியில் மட்டும்தான் கேட்க வேண்டும் என்று இல்லாமல், நமது கைப்பேசி, கணினி, ஐபேட் என எல்லா வகையான மின்னணு சாதனங்களின் ஊடாகவும் கேட்க முடியும்.

Labels:

5/16/13

ஆரா டிவி அலைவரிசை மற்றும் சேட்லைட் மாற்றம்!!!

ஆரா டிவி 68.5 யில் இருந்து

INSAT 4 A @

83டிகிரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 68.5யில் சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 83யில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைத்து தமிழ் சேனல்களும் 83க்கு வர வாய்ப்பு அதிகமுள்ளது.
 சாட்லைட் விபரம்:
Satellite: Insat 4A
Freq : 3949
Pol. : H
Sym.Rate :3673
Format:Mpeg4 DVBS
 

Labels:

5/14/13

MK TV MD சிக்கந்தரிடம் ஒரு சுவையான அனுபவம்!!!

வாசகர்களே மதுரையில் மிகவும் பிரபலமாக இயங்கி வந்த மதுரை கிருஷ்ணா டிவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு MK TV என்ற புதிய பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சேனலில் தற்பொழுது பாடல்கள் ஒளிபரப்பு செய்த நிலையில் அடுத்த வாரம் முதல் தனது நிரந்தர ஒளிபரப்பை துவங்கவுள்ளது. தற்பொழுது சி பேண்ட் டிஷ் வைத்திருப்பவர்கள் மட்டும் கண்டுவந்த நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் சென்றடையும் வகையில் முதல் முறையாக அரசு கேபிளில் ஒளிபரப்பு செய்யப்படும் என MD சிக்கந்தர் தெரிவித்தார். டிடிஹச் யில் விடப்படுமா என கேட்டதுக்கு அது தற்பொழுது கிடையாது விரைவில் பேசுவோம் என தெரிவித்தார். அலுவலகம் மதுரையில் இருந்தாலும் ஒளிபரப்பு மற்றும் அப்ளிங் செய்யும் அனைத்தும் சென்னையில் உள்ள ஈகாடு தாங்கலில் தான் உள்ளது. என்பது கூறிப்பிடத்தக்கது.
இதன் சாட்லைட் விபரம் இதோ வருமாறு
Fre:4015
Pol:Ver
Symrate:30000.
Format:Mpeg4 dvbs2 8 psk
MK TV Website: www.maduraikrishnatv.com

Labels:

சிறிலங்காவின் டைலாக் பேக் தற்பொழுது இலவசமாக கிடைக்கிறது.

சிறிலங்காவின் டைலாக் டிடிஹச்யின் அனைத்து சேனல்களும் அதாவது நார்மல் சேனல்கள் முதல் ஹச்டி சேனல்கள் வரை அணைத்தும் இலவசமாக கிடைக்கிறது. இதன் ஒரு சில படக்காட்சிகளை காணுங்கள்

Labels:

5/5/13

தாயீகாம் சேட்லைட்டின் இரவு மின்னல்கள் ஓர் கலக்கல் பதிவு காட்சிகள்!!!

தமிழன் டிடிஹச் செய்தி தொகுப்பின்
இரவு மின்னல்கள் என்னும் தலைப்பு இன்று முதல் அறிமுகமாகிறது. இந்த இரவு மின்னல்கள் பகுதியில் இளைஞர்களின் தாகம் தீர்க்கும் வகையில் IMPORT PICE களின் கலக்கலான காட்சிகளை உங்கள் கண்களுக்கு விருந்தாக்குவதோடு இதுபற்றிய அனைத்து தகவல்களும் வாரம் ஒரு முறை வெளியிடப்படும் மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இறக்குமதி பெண்களின் கவர்ச்சிகளை காணுங்கள் தயவு செய்து இப்பதிவை கண்டு முகம் சுழிக்கும் நண்பர்கள் இரவு மின்னல்கள் என்னும் தலைப்பை காண வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது ஆரம்பிக்க காரணம் அதிகப்படியான வாசகர்களின் வேண்டு கோளுக்கினங்க ஆரம்பிக்கப்பட்டது. நன்றி மீண்டும் அடுத்த வாரம் வேறு ஒரு இரவு மின்னல்கள் பதிவில் காண்போம் அதுவரை தொடர்ந்து மற்ற செய்திகளை காண்போம் நன்றி.

Labels:

ஒரு ஆறு அடி சி பேண்ட் டிஷ்யில் 4 சாட் சிக்னல்கள்!!!

நண்பர்களே சி பேண்ட் ஆறு அடி டிஷ்யில் தற்பொழுது 4 சாட்லைட் சிக்னல்களை பெறலாம். இதற்கு தேவை கொஞ்சம் யோசிக்க வேண்டும் பின்னர் திறமையான டிஷ் பிட்டிங் ஓர்க்கர் அவ்வளவு தான் இதன் ஒரு சில படங்களை பாருங்கள் இதணை போன்று உங்கள் வீடுகளிலும் இந்த சேவையை பெற வேண்டுமா ?


தமிழ்நாடு முழுவதும் எங்கள் பணியை திறமையுடன் அளிக்க நாங்கள் இருக்கிறோம்.இந்த சேவை பெற நீங்கள் தயார் என்றால் உடனே அழையுங்கள்.
9095319220  
9842980110

Labels:

5/3/13

"நாட்டாண்மை" இது தேவையா...!!


"சன் மியூஸிக்"..சேனலுக்கு இது தேவையா...!!

இந்த சேனலில் வரும் "நாட்டாண்மை" என்று ஒரு நிகழ்ச்சி.

நாட்டாமை மற்றும் அவரது மனைவி ஸ்டைலில் தோன்றும் ஒரு ஜோடி, காதலர்களைச் சேர்த்துவைக்கும் வேலையைச் செய்கிறதாம். அவர்களுக்கு "காதலர்கள்" தங்கள் மற்றும் தங்களை துணையின் செல் நம்பரை அனுப்புவார்கள். அந்த எண்ணிற்குத் தொடர்புகொண்டு நாட்டாமை பேசுவார்.


     கடந்த வாரம் இப்படி ஒரு � காதலரை � நாட்டாமை தொடர்பு கொள்ள... அவர் �இத்தினி வருஷமா லவ் பண்ண பொண்ணு என்னை மறந்துட்டா� என்று சொல்ல, அடுத்ததாக அந்த பெண்ணின் எண்ணுக்கு தொடர்பு கொள்கிறார் நாட்டாமை..

�அந்த பையனை லவ பண்ணிட்டு ஏன் ஏமாத்துன� என்று கேட்க... போனை எடுத்தது அந்த பெண்ணின் அம்மா..!

            அவர் பதறிபோய் புலம்பியதோடு, தந்து மகளையும் அழைத்து வசை பாடுகிறார். அந்த பெண்ணோ பதறி போய், � அய்யய்யோ... அப்படி எல்லாம் இல்லியே� என்று அழும் நிலைக்கு போய்விட்டார்..

மீண்டும் அந்த நாட்டாமை அந்த காதலருக்கு போன் செய்ய... � சுவிட்ச் ஆப் �..!!

ஆக அந்த �காதலன்�தான் அப்பாவி பெண் ஒருத்தியின் குடும்பத்தில் விளையாடியிருக்கிறார்...

       ஒருவேளை இது செட் அப் என்றால் பிரச்சினை இல்லை... உண்மையாக இருந்தால் அந்த பெண் மனமுடைந்து விபரீதமாக ஏதாவது செய்தால் யார் பொறுப்பேற்பது....!!


Labels: