5/3/13

"நாட்டாண்மை" இது தேவையா...!!


"சன் மியூஸிக்"..சேனலுக்கு இது தேவையா...!!

இந்த சேனலில் வரும் "நாட்டாண்மை" என்று ஒரு நிகழ்ச்சி.

நாட்டாமை மற்றும் அவரது மனைவி ஸ்டைலில் தோன்றும் ஒரு ஜோடி, காதலர்களைச் சேர்த்துவைக்கும் வேலையைச் செய்கிறதாம். அவர்களுக்கு "காதலர்கள்" தங்கள் மற்றும் தங்களை துணையின் செல் நம்பரை அனுப்புவார்கள். அந்த எண்ணிற்குத் தொடர்புகொண்டு நாட்டாமை பேசுவார்.


     கடந்த வாரம் இப்படி ஒரு � காதலரை � நாட்டாமை தொடர்பு கொள்ள... அவர் �இத்தினி வருஷமா லவ் பண்ண பொண்ணு என்னை மறந்துட்டா� என்று சொல்ல, அடுத்ததாக அந்த பெண்ணின் எண்ணுக்கு தொடர்பு கொள்கிறார் நாட்டாமை..

�அந்த பையனை லவ பண்ணிட்டு ஏன் ஏமாத்துன� என்று கேட்க... போனை எடுத்தது அந்த பெண்ணின் அம்மா..!

            அவர் பதறிபோய் புலம்பியதோடு, தந்து மகளையும் அழைத்து வசை பாடுகிறார். அந்த பெண்ணோ பதறி போய், � அய்யய்யோ... அப்படி எல்லாம் இல்லியே� என்று அழும் நிலைக்கு போய்விட்டார்..

மீண்டும் அந்த நாட்டாமை அந்த காதலருக்கு போன் செய்ய... � சுவிட்ச் ஆப் �..!!

ஆக அந்த �காதலன்�தான் அப்பாவி பெண் ஒருத்தியின் குடும்பத்தில் விளையாடியிருக்கிறார்...

       ஒருவேளை இது செட் அப் என்றால் பிரச்சினை இல்லை... உண்மையாக இருந்தால் அந்த பெண் மனமுடைந்து விபரீதமாக ஏதாவது செய்தால் யார் பொறுப்பேற்பது....!!


Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home