4/26/13

STB பற்றாகுறையால்... தினமும் அதிகரிக்கும் DTH இணைப்புகள்...!!


நகரில் அமைக்கப்பட்ட செட் டாப் பாக்ஸ் பெட்டிகளின் பற்றாக்குறையால் தொலைக்காட்சி பெட்டிகள் 38 நகரங்களில் ஏப்ரல் 1 ம் தேதி முதல் இருட்டடிப்படைந்தது. இதனால்கடந்த சில நாட்களில் DTH இணைப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது எனத் தெரிகிறது. வியாபாரிகள் கடந்த சில மாதங்களுடன்  ஒப்பிடுகையில் DTH இணைப்பு 4 முதல் 5 மடங்கு அதிகமாக விற்பனை அதிகரித்து வருகிறது என வர்த்தக வியாபாரிகள் உறுதியாக தெரிவிக்கின்றனர்
முன்னதாக தினசரி அடிப்படையில் சுமார் 300 DTH இணைப்புகள் நகரத்தில் விற்கப்பட்டன,  தற்போது  விற்பனை தினசரி கிட்டத்தட்ட 1,500 முதல் 2,000 இணைப்புகள் வரை அதிகரித்துள்ளது எனவும். மேலும்  ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 3 ஒரு பெரிய ஜம்ப் காட்டியதுஅது தினசரி கிட்டத்தட்ட 3,000 முதல் 3,500 DTH இணைப்புகள் வரை விற்பனை உயர்ந்து வருகிறது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளி விவரங்களின்படிசுமார் 1,30,000 வீடுகள் லக்னோ நகரில் DTH இணைப்புகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
லக்னோவில்டாடா ஸ்கையின் சந்தை பங்கு சுமார் 30% அளவிற்கு முன்னணியாக திகழ்கிறது, இதற்கு  இதற்கு அடுத்தபடியாக நெருக்கமான இடத்தில் ஏர்டெல் (சுமார் 28%)அடுத்த நிலையில் நெருக்கமான போட்டியாளர்களாக வீடியோகான் மற்றும் டிஷ் டிவி உள்ளது. இது பற்றி ஒரு டாடா ஸ்கை வியாபாரி கூறுகையில்  "நகரத்தில் அனைத்து ஆறு DTH நிறுவனங்களும் இந்த சந்தர்ப்பத்தை கவர நினைக்கின்றனர் அதற்காக ஏற்கனவே அவர்கள் தங்களது பணியாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்துள்ளனர்.    எங்களது ஊழியர்களின் எண்ணிக்கை 2இல் இருந்து 11 ஆகாவும் உயர்ந்துள்ளது"என்றார்.
பெரும்பாலான மக்கள் DTH இணைப்பு பெற விருப்பம் காட்டுகின்றனர் எனவும். லக்னோவின் ஒரு ஏர்டெல் டிஜிட்டல் டிவி பணியாளர் கூறிகையில் "கிட்டத்தட்ட 20% மக்கள் DTH க்கு மாறியிருக்க கூடும் எனவும்ஏனெனில் அதன் நல்ல தரமான பரிமாற்றம் மற்றும் சேனல்கள் இன்னும் பல என கூறியவர். நிதி தட்டுபாடு உள்ள மக்களே செட் டாப் பாக்ஸ் பெட்டி நிறுவதற்காக காத்திருக்கின்றனர் என்றார்.
விநியோகஸ்தர் கூறுகையில் LCD மற்றும் LED தொலைக்காட்சி பெட்டி நிறுவுதல் போக்கு அதிகரித்து, DTH  விற்பனையை ஊக்குவித்து வருகிறது என கூறினார். ஒரு வியாபாரி கூறுகையில் இது மிகவும் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது, சுமார் ரூ 30,000 முதல் 50,000 வரை தொலைக்காட்சி பெட்டிக்கு செலவிடும் ஒரு நபர் , நல்ல தரமான அனுபவத்துடன் ஒரு விலையுயர்ந்த இணைப்பு வாங்குவது என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை என்றும், இங்கே மக்களில் சுமார் 10% -15% LCD அல்லது LED பயன்படுத்துகிறார்கள்இது நம்மை செயல்டுத்துவதற்கு மிகவும் பெரிய சந்தையாக உள்ளது. என்றார் -"
நிபுணர்களின் கருத்து DAS (டிஜிட்டல் முகவரியிடத்தகும் கணினி) நகரத்தில் எல்லா இடங்களிலும் நிறுவப்பட்ட பின் கேபிள் ஆபரேட்டர்கள் மாதாந்திர வாடகையை அதிகரிக்க நினைத்துள்ளனர் எனவும், தற்போதைய நிலையில் ஒரு DTH நிறுவுதலுக்கு ஆகும் செலவு என்பது ரூ. 2200 ஆகவும் ஆனால் அதே சமயம் செட் டாப் பாக்ஸ் கேபிள் இணைப்பு பெறுவதற்கு ரூ. 1200 செலவாகிறது என்றார்.
மேலும் அவர்கள் குறிப்பிடுகையில்  HD சேனல்களின் ஒளிபரப்பு LCD மற்றும் LED போன்ற ஒரு மதிப்பு மிகுந்த தொலைக்காட்சிக்கு சரியான பார்க்கும் அனுபவத்தை தருகிறது... இது டிஜிட்டல் கேபிள் இணைப்பில் இன்னும் கால தாமதமாகும் என்றார்.
டிஜிட்டலாக்கம் அனைத்து பகுதிகளிலும் முடிந்த பின்னர் கேபிள் டிவி இணைப்புகளின் மாதாந்திர கட்டணம் அதிகரிக்கும் என்ற செய்தி வதந்தியாக மார்கெட்டில் பரவியுள்ளதே இதற்கு காரணம்...

source:

http://www.tntelevision.in/content/dth2.php

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home