3/30/14

நோக்கியா எக்ஸ் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நோக்கியா தன் எக்ஸ் வரிசையில் பல ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. இந்த போன்களை, இந்திய வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் தர முடியும் என நோக்கியா கருதுகிறது. எனவே தான், தன் முதல் எக்ஸ் வரிசை போன், நோக்கியா எக்ஸ் வெளியானதைத் தொடர்ந்து, தன் அடுத்த X+ மற்றும் XL மாடல் போன்களையும் இந்தியாவிற்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுகிறது. வரும் ஜூன் மாதத்திற்குள், இவை இந்திய மொபைல் சந்தையில் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளன.

இன்னும் இவற்றிற்கான விலை விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. தற்போதைய ஈரோ விலை அடிப்படையில் கணக்கிட்டால், இவை முறையே ரூ.8,420 மற்றும் ரூ.9,270 என அமையலாம். ஆனால், நோக்கியா எக்ஸ் மொபைல் போனின் விலை ரூ.8,599 ஆக இருப்பதால், மேலே குறிப்பிட்ட விலைக்கு இங்கு அறிமுகமாவது சந்தேகமாக உள்ளது. நிச்சயம் சற்று கூடுதலாகவே விலை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த இரண்டு போன்களின் அம்சங்களை இங்கு காணலாம்.
-->


நோக்கியா எக்ஸ் ப்ளஸ்:
  • 4 அங்குல WVGA IPS LCD டச் ஸ்கிரீன்,
  • நோக்கியா எக்ஸ் சாப்ட்வேர்,
  • 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர்,
  • 3 எம்.பி. கேமரா,
  • 768 எம்.பி. ராம் மெமரி,
  • 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 1,500 mAh திறன் கொண்ட பேட்டரி.
  • நோக்கியா எக்ஸ்.எல்: 
  • 5 அங்குல WVGA IPS LCD டச் ஸ்கிரீன்,
  • நோக்கியா எக்ஸ் சாப்ட்வேர், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர்,
  • 5 எம்.பி. கேமரா,
  • 2 எம்.பி. வெப் கேமரா,
  • 768 எம்.பி. ராம் மெமரி,
  • 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 2,000 mAh திறன் கொண்ட பேட்டரி.

Labels: , , , ,

சென்னையில் விஜய் டிவி இடத்தை பிடித்தது வேந்தர் டிவி...!!

சென்னையில் விஜய் டிவியின் இடத்தை பிடித்தது... புதிய தொலைக்காட்சியான வேந்தர் டிவி... சென்னையில் அனலாக் முறை ஒளிபரப்பு சேவை அளித்து வரும் பிரபல நிறுவனமான SCVயில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதுவரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த அலைவரிசையில் புதிய தொலைக்காட்சியான வேந்தர் டிவியின் ஒளிபரப்பை இணைத்துள்ளது...!!
-->

வேந்தர் டிவிக்கு அடுத்த நிலையில் விஜய் டிவியின் ஒளிபரப்பை இணைத்துள்ளது மீடியா உலகினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரேஜ் கட்டணம் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்க முடியாது எனவும்... எனினும் விஜய் டிவியை மாற்றம் செய்யும் அளவிற்கு எனில் கேரேஜ் தொகை எப்படியும் மிக பெரிய தொகையாக இருக்கும் எனவும் ஒளிபரப்பாளர்கள் மற்றும் கேபிள் ஆப்ரேட்டர்கள் மத்தியில் பேச்சுகள் உலாவரத்தொடங்கியுள்ளது.

இந்த போட்டி அலைவரிசை இடத்தில் மட்டுமா அல்லது அனைத்திலுமா என போகப்போகத்தான் வேந்தரின் விஜயம் தெரியவரும்.

Labels: , , , , ,

3/29/14

ஸ்மார்ட்போன்களில் டிஜிட்டல் டிவி சேவையை தொடங்கிறது - ஏர்டெல்DTH...!!


பார்தி ஏர்டெல் , இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனம், சுமார் 150 சேனல்களை நேரடி உள்ளடக்கமாக நுகர்வோருக்கு வழங்க  இந்த வாரம் முதல் மொபைல் போன்கள் மூலம் டிஜிட்டல் தொலைக்காட்சி சேவைகளை தொடங்க உள்ளது ,  குறிப்பிடத்தக்க வகையில் அதன் data தரவு நெட்வொர்க்கை பயன்படுத்தவும் மற்றும் அதன் விளைவாக வருவாய் ஏற்படுத்தவும் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாக்கெட் டிவி என்ற பெயரில் - - பாரதி Airtel நிறுவனம் ஒரு இலவச app பயன்பாட்டை Google Play வில்  
-->


அடுத்த வாரமும் மேலும் ஒரு மாதம் கழித்து  iOS தளத்திற்கு App Store  வெளியிடும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் Rs 60 ஒரு மாதம் செலுத்தி சேவை பதிவு செய்ய வேண்டும் , மேலும் ஏற்கனவே சேவையில் இருக்கும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி சந்தாதாரர்களுக்கு இது தொடங்கபடுள்ளது.
வாடிக்கையாளர்கள் வரம்பற்றவகையில் பயணத்தின் போது இதன் மூலம் டிவி பார்க்க முடியும்... ஆனால் மொபைல் போன் வழியாக நுகரப்படும் data தரவுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். சேவை மார்ச் 24 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்குள் கிடைக்கும் என பார்தி ஏர்டெல் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். நிறுவனத்தின் சேவையில் பெரும்பாலான பார்க்கப்படும் நிகழ்ச்சி உள்ளடக்கங்கள் விளையாட்டு மற்றும் செய்தி தொடர்பானதாகவே உள்ளது, இதன் மூலமாகவே FY 13 வருடத்தில் அதன் மொபைல் நெட்வொர்க்குகளில் தொலைக்காட்சி பார்வையாளர் விகிதம் 400 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கூறினார் .
இந்த நடவடிக்கையின் மூலம் வோடபோன் அல்லது ஐடியா மொபைல் இணைப்பு வைத்திருப்பவர் கூட மொபைல் போனில் தொலைக்காட்சி பார்க்க முடியும் ...அவர்கள் வீட்டில் ஏர்டெல் டிஜிட்டல் இணைப்பு இருந்தல் அவசியம், இதன் மூலம் அனைத்து  வாடிக்கையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் வைத்திருக்கும் மொபைல் போன்களின் மூலம் data தரவு பயன்படுத்துவது அதிகரிக்கும் எனவும் எதிர்பார்கபடுகிறது.



Labels: , , , , ,

3/28/14

தந்தி டிவி , வேந்தர் டிவியின் அதிரடி மாற்ற நிகழ்வுகள்!

ஆம் நண்பர்களே நான் ஏற்கனவே கூறியது போல வேந்தர் டிவி தனது நிரந்தர ஒளிபரப்பை
நேற்று முதல் துவங்கியது தேர்தல் நேரம் என்பதால் பாஜாக கூட்டணியின் பிரதான பரப்புரை சேனலாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே வீடியோகான் டிடிஹச் சேவையில் இன்னும் பத்து தினங்களுக்குள் இந்த சேனல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேலையில் தந்தி டிவி தனது 68.5 டிகிரியிலிருந்து தமிழ் சேனல்களின் கூவியலாக கருதப்படும் செயற்கைகோளான 66டிகிரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மாற்றங்களும் வரவேற்க்க தக்கது.
-->

Labels: , , , , ,

3/25/14

Solid Satellite Signal Finder SF 309 for sale!!!!

Dear All Frnds My New Solid Satellite Signal Finder Snaps Then Some Details

Model : SF-309
Features
Capable To Edit Transponder, Symbol Rate And Lo Frequency Etc
Accurate And Convenient Fecility For Antenna Installation
Support DVB S2 - MPEG4 - DVB S And QPSK,8PSK Modulation
Buli In Buzzer


SOLID Digital Satellite Finder Image Below

    





    
    
    
Below Image Dialog Tv & Dishtv Snaps 
    
   

Labels: , , ,

வேந்தர் டிவி தற்பொழுது ஏர்டெல் சேவையில் இணைந்துள்ளது.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி டிடிஹச் சேவை தனது வாடிக்கையாளர்களுக்காக வேந்தர் டிவியை தனது குழுமத்தில் இனைத்துள்ளது . இந்த சேனல் விரைவில் அனைத்து டிடிஹச்களிலும் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது அடுத்த கட்டமாக இந்த சேணலானது வீடியோகான் சேவைகளில் விடப்படவுள்ளது கூறிப்பிடத்தக்கது . எனவே தற்பொழுது சோதணை ஒளிபரப்பை செய்யும் வேந்தர் டிவி விரைவில் தனது நிரந்தர ஒளிபரப்பை துவங்கும் என்னபதில் எவ்வித மாற்றமும் இல்லை . இந்த சேணல் வரும் அமைவிடம் 518. இதில் ஏற்கனவே கேப்டன் டிவி வந்தது கூறிப்பிடத்தக்கது.

Labels: , , , ,

3/13/14

விஜய் டிவியில் மார்ச் 15 முதல் புதிய நிகழ்ச்சி ஒல்லி பெல்லி...!!

தமிழ் தொலைக்காட்சி உலகில் நிகழ்ச்சிகளில் தனக்கென ஒரு பாணியை கொண்டுள்ள விஜய் டிவி தற்போது மிகவும் வித்தியசாமான ரியாலிட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது ஒல்லி பெல்லி என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ள இந்த ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி மார்ச் 15ம் தேதி முதல் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது..


தற்போதைய காலகட்டத்தில் மக்கள் சந்திக்கும் உடல் பருமன் பிரச்சனையை வைத்து இந்த நிகழ்ச்சி வடிவமைக்கபட்டுள்ளது....  




இந்த நிகழ்ச்சியில் சராசரிக்கும் அதிகமான உடல் பருமன் கொண்ட ஆண்களும், பெண்களும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர்.14 போட்டியாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கு இடையேயும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதியில் தேர்வாகும் போட்டியாளர்களை, அவர்களது வயதிற்கு, உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை அடையச் செய்வதே நிகழ்ச்சியின் நோக்கமாகும்.



நிகழ்ச்சியின் புதுமை என்னவெனில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய தினத்தை யோகா உடன் துவங்க வேண்டும் மேலும் உணவு பழக்கம்,ஜிம்,டான்ஸ்,என அனைத்தும் கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.போட்டியாளர்கள் எப்போது நடுவர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள்.       




இந்த நிகழ்ச்சியை மூலம் வீட்டில் இருந்து கொண்டே, உடல் எடையை குறைக்கலாம். மேலும் போட்டியில் பங்கேற்பதன் மூலமாகவும் உடல் எடையை குறைக்கலாம். 

Labels: , , , ,

3/12/14

Angel tv , Ptv News other 1 channels now fta on ses8 95deg .

SES8 DISHTV LANKA DTH SERVICES

Dear All friends Angel tv tamil , ptv news , other one channel now Fta on dishtv lanka platform but You Change to v pid & A pid  

Angel TV


LNB FREQ : 10600
TRANS FREQ : 12170
SYMBOL RATE : 40700
VIDEO PID : 7616
AUDIO PID : 7617
PCR PID : 7616
DISEQC : OFF
POLARTIY : H
22 K : ON




Labels: , , , ,

தமிழன் டிடிஹச் செய்தி தளத்தின் இலங்கைக்கான தளம் ஆரம்பம் !!!

WWW.SRILANKADISHTV.COM
தமிழன் டிடிஹச் செய்தி தளம் முக்கியமாக தமிழ்செய்திகளை தமிழர்கள் நமது அழகு தமிழில் அறிவதற்காக 2011 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது அதற்கு முன்னர் ஆங்கிலம் , தெலுங்கு , பிற மொழி என அனைத்திலும் இருந்தது முதன் முதலில் தமிழில் செயற்கைகோள் பற்றிய தகவல்களை மக்களுக்கு வழங்கியது தமிழன்டிடிஹச் ஆகும் . அதன் பின் எண்ணற்ற தமிழ்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டது . அதைப்பற்றி நமக்கு தேவையில் இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நகர்வாக நமது பார்வை இலங்கை பக்கமும் ஈழம் பக்கமும் செல்ல திட்டமிட்டது அதன் நமது அதிகாரபூர்வமான இலங்கைக்கான தளம் ஆரம்பம் இந்தளத்தில் ஆங்கிலம் மட்டுமே இடம் பெறும் ஏனென்றால் எனது நண்பர்கள் தனிஸ்காந்த் , பிரதேஷ் ஆகிய இருவரும் இரண்டு தமிழ்தளங்கள் வைத்துள்ளனர் . ஏற்கனவே உள்ள காரணத்தால் தமிழர்கள் , சிங்களர்கள் இருவரையும் கவரும் வகையில் சிறிலங்கா டிஷ்டிவி என்ற தளத்தை ஆரம்பித்துள்ளோம் இதணை இந்த லிங்கில் சென்று பார்க்கலாம்  WWW.SRILANKADISHTV.COM

Labels: , , , , , ,

3/9/14

SES 8 சேட்லைட் சேவை துவங்கியது.

தமிழன் டிடிஹச் வாசகர்களே ஒரு நல்ல செய்தி நேற்று முதல் எஸ் இ எஸ் 8 95யின் புதிய சேட்லைட்யில் சிங்கப்பூர் டலர் டிஷ்டிவி வாடிக்கையாளர்களுக்காக பாகிஸ்தான் , பாங்களதேஷ் , துபாய் நாட்டு சேனல்களை துவக்கியுள்ளது இந்த சேனல் இந்திய டிஷ்டிவி வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது. இந்தியாவிலும் சரி மற்ற நாடுகளிலும் சரி டாலரில் ரிஜார்ஜ் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேணல்கள் கிடைக்கும் . இந்த சேனல்கள் அனைத்து நமது FREE TO AIR எனப்படும் அனைத்து பாக்ஸ்களிலும் தற்பொழுது இலவசமாக கிடைக்கிறது. மொத்தமாக 24 சேனல்கள் ஒரே டரான்ஸ்பான்டரில் கொடுத்துள்ளது இதில் ஒரு சில சேனல்கள் வேறு வேறு பெயர்களில் கிடைக்கிறது. ஒரே சேனல் 2 அல்லது 3 இடங்களில் கிடைக்கிறது. இதன் ஒரு படங்கள் மற்றும் அலைவரிசை விபரம் உங்கள் பார்வைக்காக
SATELLITE : SES8 95 DEG
LNB FRQ   :  10600
TRANS FR :  12170
POLARTY  :   H
SYMBOL   :  40700









Labels: , , , , , ,

3/4/14

டிஷ் டிவியின் இலங்கை சேவை துவக்கம் , மக்களின் பாதிப்பு ஒரு சிறப்பு பார்வை!!!

டிஷ் டிவியின் இலங்கை சேவை துவக்கம் , மக்களின் பாதிப்பு ஒரு சிறப்பு பார்வை!!!

டிஷ் டிவி லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் ஆகும் . தனக்கென ஒரு டிவி குழுமம் , Z, ZEE என்ற பெயரை முன் எழுத்தாக கொண்டு துவங்கும் அனைத்து சேனல்களும் டிஷ் குழுமமே ஆகும் . முதன் முதலாக டிஷ் டிவி 2004 ஆம் ஆண்டில் தனது சேவையை இந்தியாவில் துவங்கியது . பின்னர் படிப்படியாக டிஷ் டிவி அன்டை நாடுகளான பாகிஸ்தான் , ஆஃப்கானிஸ்தான் , நேபாளம் , இலங்கை , குவைத் , துபாய் , சவுதி என கொஞ்சம் தொலைவில் உள்ள நாடுகளுக்கும் இதன் கவரேஜ் கிடைத்ததன் காரணமாக அங்குள்ள நாடுகளுக்கு டிஷ் டிவி பாக்ஸ்கள் நாடு கடத்தப்பட்டது. இதனை கண்டறிந்த டிஷ் டிவி அந்தந்த நாடுகளில் ரீசார்ஜ் சேவையை துவங்கியது . இதில் அந்தந்த நாட்டு பணங்களில் ரீசார்ஜ் செய்யும் வசதியை கொண்டுவந்தது . இதனால் மக்கள் அனைவரும் அங்கு ஒரு முறை பணம் கட்டி கணக்கை புதுப்பித்தார்கள் பின்னர் அவ்வாறு புதிப்பித்தவர்கள் அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது டிஷ் டிவி. டலரில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது . அதை போல பாகிஸ்தானில் தனியாக ஆரம்பித்து அதை போலவே அமல் படுத்தியது.

இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இலங்கையில் தனது சேவையை துவங்கி அங்குள்ள வாடிக்கையாளர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை செய்துவிட்டது. இதன் படி தனது இலங்கைகான வெப்சைட்களை ஆரம்பித்தும் விட்டது. 

www.dishtv.lk
www.dishtvbiz.lk
www.easy-pay.lk

இனி வாடிக்கையாளர்களின் ஆதாரவு கிடைக்குமா கிடைக்காத என்பதை பற்றி ஒரு விவாதம். இந்த விவாதம் நானும் எனது நண்பர் ஹாரிஸ் என்பவரும் செய்தோம். டிஷ் டிவி நேரடியாக இலங்கையில் காலடி எடுத்து வைக்க முதல் காரணம் அங்கு உள்ள சந்தாதரர்களின் தன் வசம் கொண்டு வரவே . அவ்வாறு வசப்படுத்துவதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என்ற நோக்கத்தோடு களமிறங்கியுள்ளது . இவர்கள் யோசணை மிகவும் சரியானது ஆனால் இலங்கை தமிழர்கள் இலங்கையின் தமிழ்சேனல்களை விரும்புவது கிடையாது . ஏனென்றால் அங்கு சிறிய அலுமனிய கம்பிகளை போட்டாலே தெளிவாக கிடைக்கும் அப்படி இருக்கும் போது . டிஷ் எந்த நம்பிக்கையில் ஒரு கம்பெனியை ஆரம்பம் செய்தது ? இலங்கை டிஷ்டிவி யில்  சன் குழுமச்சேனல்களை கண்டிப்பாக கொடுக்க முடியாது ஏனெனில் அதற்கான உரிமத்தை ஏற்கனவே டைலாக் பெற்றுள்ளது. எனவே டைலாக் நிறுவனம் இவ்வாறு கொடுக்ககூடாது இவ்வாறு கொடுப்பதன் மூலம் தற்பொழுது இருக்கும்  வாடிகையளர்களையும் இழக்க நேரிடும் எனவே  தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும். ஒரு வேலை சன் குழும சேனல்களை கொடுக்கும் பட்சத்தில் இலங்கை  டிஷ் டிவியின்  முதல் package யில் 300 க்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது.இதில் சன் tv கிடைக்காது.அடுத்த படியாக  700க்கு சன் குழும சேனல் கிடைக்கும் என்றால்  இலங்கை டிஷ்டிவில் மொத்தமாய் குறைந்த பட்சம் எட்டு தமிழ் சேனல்கள் அதிக பட்சமாக ஒரு 13 தமிழ் கிடைக்கும் . அங்கு ஒருமுறை இந்திய டிஷ்டிவி வாடிகையளர்கள் recharge செய்து விட்டால் அவர்களால் இந்திய தமிழ் சேனல்களை மறுபடியும் பெற முடியாது . இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது அங்குள்ள டிலர்கள் இந்திய டிஷ்டிவி செட் டாப் பாக்ஸ்களுக்கு 150 க்கு recharge செய்தல் அந்நாடு பணத்திற்கு 700 வசூல் செய்கிறார்கள் . ஒரு மாதம் recharge க்கு நம் நாட்டு பண மதிப்பிலிருந்து குறைத்தல் 200 லாபம் பெருகிண்டனர் . நம் இந்திய பணம் 150க்கு recharge செய்து நம் இந்திய பணத்திற்கு 200 லாபம் பெருகிண்டனர் . சாமீ எவளவோ லாபம் பாருங்க இதுளையும் ஒரு சில டிலர்கள் நமக்கு கிடைக்கும் அந்த 3 ரூபாயையும் கேட்டு தொல்லை கொடுப்பார்கள் , இனி உங்கள் லாபம் அவலவோதன் நிங்கள் 700க்கு செய்ய முடியாது என பேரம் பேசினால் dishtv கம்பெனி 700க்கு கேட்கும் , அவர்களிடம் நேரடியாக மக்கள் recharge செய்து விடுவர்கள்.  என்ன செய்வது என யோசிக்க வைக்கும் பதிவு தொலைபேசியில்தகவல் பெற என்னை தொடர்பு கொள்ளலாம் .

Labels: , , , , ,