3/30/14

சென்னையில் விஜய் டிவி இடத்தை பிடித்தது வேந்தர் டிவி...!!

சென்னையில் விஜய் டிவியின் இடத்தை பிடித்தது... புதிய தொலைக்காட்சியான வேந்தர் டிவி... சென்னையில் அனலாக் முறை ஒளிபரப்பு சேவை அளித்து வரும் பிரபல நிறுவனமான SCVயில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதுவரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த அலைவரிசையில் புதிய தொலைக்காட்சியான வேந்தர் டிவியின் ஒளிபரப்பை இணைத்துள்ளது...!!
-->

வேந்தர் டிவிக்கு அடுத்த நிலையில் விஜய் டிவியின் ஒளிபரப்பை இணைத்துள்ளது மீடியா உலகினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரேஜ் கட்டணம் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்க முடியாது எனவும்... எனினும் விஜய் டிவியை மாற்றம் செய்யும் அளவிற்கு எனில் கேரேஜ் தொகை எப்படியும் மிக பெரிய தொகையாக இருக்கும் எனவும் ஒளிபரப்பாளர்கள் மற்றும் கேபிள் ஆப்ரேட்டர்கள் மத்தியில் பேச்சுகள் உலாவரத்தொடங்கியுள்ளது.

இந்த போட்டி அலைவரிசை இடத்தில் மட்டுமா அல்லது அனைத்திலுமா என போகப்போகத்தான் வேந்தரின் விஜயம் தெரியவரும்.

Labels: , , , , ,

3/28/14

தந்தி டிவி , வேந்தர் டிவியின் அதிரடி மாற்ற நிகழ்வுகள்!

ஆம் நண்பர்களே நான் ஏற்கனவே கூறியது போல வேந்தர் டிவி தனது நிரந்தர ஒளிபரப்பை
நேற்று முதல் துவங்கியது தேர்தல் நேரம் என்பதால் பாஜாக கூட்டணியின் பிரதான பரப்புரை சேனலாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே வீடியோகான் டிடிஹச் சேவையில் இன்னும் பத்து தினங்களுக்குள் இந்த சேனல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேலையில் தந்தி டிவி தனது 68.5 டிகிரியிலிருந்து தமிழ் சேனல்களின் கூவியலாக கருதப்படும் செயற்கைகோளான 66டிகிரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மாற்றங்களும் வரவேற்க்க தக்கது.
-->

Labels: , , , , ,

3/25/14

வேந்தர் டிவி தற்பொழுது ஏர்டெல் சேவையில் இணைந்துள்ளது.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி டிடிஹச் சேவை தனது வாடிக்கையாளர்களுக்காக வேந்தர் டிவியை தனது குழுமத்தில் இனைத்துள்ளது . இந்த சேனல் விரைவில் அனைத்து டிடிஹச்களிலும் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது அடுத்த கட்டமாக இந்த சேணலானது வீடியோகான் சேவைகளில் விடப்படவுள்ளது கூறிப்பிடத்தக்கது . எனவே தற்பொழுது சோதணை ஒளிபரப்பை செய்யும் வேந்தர் டிவி விரைவில் தனது நிரந்தர ஒளிபரப்பை துவங்கும் என்னபதில் எவ்வித மாற்றமும் இல்லை . இந்த சேணல் வரும் அமைவிடம் 518. இதில் ஏற்கனவே கேப்டன் டிவி வந்தது கூறிப்பிடத்தக்கது.

Labels: , , , ,

7/7/13

வேந்தர் டிவி 15ம் தேதி தனது ஒளிபரப்பை துவக்கவுள்ளது!!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு வேந்தர் டிவி அடுத்த வாரம் 15ம் தேதி முதல் தனது ஒளிபரப்பை துவங்கவுள்ளது. இதற்கன அனைத்து வேலைகளூம்
முடிந்து விட்ட நிலையில் இந்த அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






Labels: , , , ,