9/30/12

இலங்கை சேனல்கள் இந்தியாவிற்கு கிடைக்காதது பற்றிய ஓரு செய்தி.

நண்பர்களே இலங்கை தமிழ்ர்களின் பேச்சை கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்டக தோன்றும் அளவுக்கு அவர்களது பாசை மிகவும் பிடிக்கும். இதனை போலவே அங்குள்ள தமிழ் சேனல்களை பார்க்க தமிழ்நாட்டு மக்களிடையே அதிக ஆர்வம் உள்ளது. ஒர் சிலர் என்னிடம் தொடர்பு கொண்டு அந்தசேணல் பார்க்க முடியவில்லையே என வருத்தம் தெரிவித்தனர். எனக்கும் அப்படித்தான் முன்பு ஒரு காலத்தில் எனது ஊரில் இலங்கை ரேடியோ சனல்கள் சாதாரண வானொலி பெட்டிகளில் கூட பயங்கர சத்தத்துடன் கிடைத்தது. அதில் தென்றால் எப்எம், சக்தி எப்எம், வெற்றி எப்எம, என வெழுத்து வாங்கியது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் விளம்பரம் அதிகம் கொடுத்தது இந்த ரேடியோ சனல்கள் தமிழ்நாட்டின் மூலம் வாழ்ந்தது என்றே சொல்லாம் .
ஆனால் தற்பொழுது இந்த நிலை மாறி அடையாளத்திற்கு கூட இந்த சேனல்கள் தமிழ்நாட்டில் கிடைப்பது இல்லை என்பது வருத்தம் அளிக்கும் செயல். ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு 30 கி .மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு நாட்டில் இருந்து 2500கீ.மீட்டர் தொலைவில் இருக்கும் நாட்டிற்கு எடுக்கும் சேனல்கள் . மிக அருகில் உள்ள இந்தியா நாட்டிற்கு கிடைக்க வில்லை என்பது தான்
வருத்தம் அளிக்கும் செய்தி. உலகில் எங்கு வேண்டுமென்றாலும் சொல்லட்டும் இந்தியாவிற்கு கவரோஜ் இல்லாத குறிப்பாக தமிழ்நாட்டில் கவரேஜ் சட்லைட்டில் மட்டுமே ஒளிபரப்பு செய்வோம் என்பது தான் அந்நாட்டின் நோக்கம், இதற்கு காரணம் கண்டிப்பாக இந்திய அரசு தான் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். (எ.கா ) இந்தியநாட்டு டிடிஎச் சேவைகள் அங்கு எளிதில் கிடைக்கிறது. ஆனால் அந்நாட்டு டிடிஎச் சேவை ஏன் இந்தியாவிற்கு கிடைக்கவில்லை . இதில் கேள்வியும் உள்ளது பதிலும் உள்ளது . புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன் . இந்த குறையை நீக்கத்தான் கடந்த ஒரு மாதகாலமாக முயற்சி எடுத்துள்ளேன்.(நண்பர்களே நான் அந்நாட்டு அரசாங்கத்திடம் பேசி இங்கு கிடைக்குமாறு வலியுருத்த முடியாது. அப்படி பேசும் அளவிற்கு நான் ஒரு பெரிய ஆள் கிடையாது. அரசியல் வாதியும் இல்லை வேறு வழி உள்ளது.) விரைவில்!!!காத்திருங்கள்!!! கொழும்பு நண்பரே பயப்படவேண்டாம் , எங்கள் ஆதங்கத்தை விலக்கினோம்.
எனக்கு கிடைத்த தகவலின் படி ஒரு நாடு இருக்கிறது . என்றால் அந்நாட்டில் என்ன நிகழ்வு நடக்கிறது என்பதை காட்டுவது தொலைக்காட்சி, மற்றும் பத்திரிக்கைகளே , அதை இருட்டடிப்பு செய்தால் என்ன நடக்கும் என்பது அனைவரும் அறிந்த ஓன்றே . விரைவில் அந்நாட்டு சேனல் இந்தியாவிற்கு கிடைக்கும் என்று ஓரு செய்தி வெளியாகியுள்ளது. அரசு சம்மந்தப்பட்ட வேலைகள் என்றாலே சிறிது நாள் ஆகத்தான் செய்யும். பொருத்திருந்து பார்ப்போம்.

Labels:

5 Comments:

At September 30, 2012 at 7:45 PM , Anonymous Anonymous said...

இந்த சணல்கள் என்ன இங்கு நடககும் உண்மைகளைத் தெரியப்படுத்தும் என்று நினைக்கின்றீர்களா? இங்கு இவைகள் அரச ஊதுகுழல்களாகவே செயல்படுகின்றன. அத்துடன் தமிழக தொல்லைக்காட்சிகளில் காட்டும் குப்பைகளைத் தான் தூசு தட்டி காண்பிக்கின்றார்கள். இதற்காக ஏன் கவலைப்படுகின்றீர்கள்.

 
At September 30, 2012 at 9:04 PM , Blogger BasKaran said...

கவலைபடவில்லை இப்பதிவின் நோக்கமே வேலூர் மாவட்டத்திலிருந்து, அப்பறம் நீலகிரி, சேலம் , திண்டுக்கல் , அரியலூர் போன்ற மாவட்டத்திலிருந்து கூறியதை பதிவாக காண்பித்தோம் அதோடு எனக்கும் பிடிக்கும் அதனால் கூறினேன்.

 
At September 30, 2012 at 10:08 PM , Anonymous Sathish said...

Good Info...

 
At October 1, 2012 at 11:49 PM , Anonymous Anonymous said...

i am getting FM channel from srilanka in night time ... my location samayanallur, Madurai.

 
At October 2, 2012 at 7:14 PM , Blogger MaduraiGovindaraj said...

nalla thakaval

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home