9/12/12

இன்டர்நெட்டில் டிவி பார்க்க வேண்டுமா?

இன்டர்நெட்டில் டிவி பார்க்க வேண்டுமா? அதற்கு ஒரு புதிய வழியை உருவாக்குகிறது பாக்ஸ்டிவி.காம் இணையதளம் டைம்ஸ் இன்டர்நெட் லிமிடெடு நிறுவனம், பாக்ஸ்டிவி.காம் இணையதளம் மூலம் ஆன்லைனில் டிவி நிகழ்ச்சிகள், வீடியோக்கள், திரைப்படங்கள், குறும்படங்கள் என்று அனைத்தையும் பார்க்கும் வசதியை வழங்குகிறது. இந்த வசதியை அமெரிக்காவில் ஹுலு மற்றும் நெட்ஃபிலக்ஸ் போன்ற இணையதளங்களின் மூலம் எளிதாக பெறலாம். ஆனால் இந்த வசதி நமது நாட்டில் வர சில மாதங்களாகும். எந்த எல்லையில் இருந்தாலும் இது போன்ற ஆன்லைனில் டிவி நிகழ்ச்சிகள்,
திரைப்படங்கள் போன்றவற்றை பார்க்கும் வசதி சிறந்தது தான்.உலகில் எந்த தேசத்திற்கு சென்றாலும் அவரவர் மொழிகளில் வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதில் அனைவருக்கும் இருக்கும் ஆசை குறைவதில்லை. இந்த ஆசையை பூர்த்தி செய்ய வருகிறது பாக்ஸ்டிவி.காம்.இந்க பாக்ஸ்டிவி வசதியை டேப்லட், ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் என்று எதில் வேண்டுமானால் பெறலாம். இந்த பாக்ஸ்டிவி வசதி  ஆன்லைன் சம்மந்தப்பட்டது என்பதால், இதை ஐபோன், ஐபேட், ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் என்று எதில் வேண்டுமானாலும் பெறலாம். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வீடியோக்களையும் இதில் பார்க்க முடியும்.இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் இதில் தமிழ் வீடியோக்களையும் பார்த்து ரசிக்க முடியும்.  இந்த பாக்ஸ்டிவி வசதியை மாத கட்டணத்தின் மூலம் பெறும் வகையில் இருக்கும்.
நமது நாட்டில் மாதம் ரூ. 199 கட்டணம் செலுத்தி பெறும் வகையில் இருக்கும். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த ஆன்லைன் சவுகரியத்தின் மூலம் திரைப்படம், வீடியோ, டிவி என்று எதுவானாலும் கண்டு மகிழலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home