8/6/12

திக் திக் என்ன திக் திக் கீழே படிங்க, ராஜா சேனல் ஆரம்பிக்க போராரம்.

ஆ.ராசா அடுத்தபடியாய் தன் மீதானகறைகளை ஒரேயடியாய் துடைத்துப்போட தனி சேனல் தொடங்கும் முடிவில் இருக்கிறார். தன் தரப்பு நியாயங்களை சொல்ல மீடியாக்களின் துணை இல்லாமல் தவிக்கும் ஆ.ராசா இதுபற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பேசியிருக்கிறார். ''சன் டி.வி. என்னை எப்போதுமே புறக்கணிக்கும். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், கலைஞர் டி.வி.யும் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறது. நான் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அத்தனை மீடியாக்களும் என்னிடம் தனி இன்டர்வியூ கேட்டு துரத்தினார்கள். புதிய தலைமுறைக்கும் என்.டி.டி.வி.க்கும் மட்டுமே நான் பேட்டி கொடுத்தேன். அந்த பேட்டிகள் என்னை பெரிய அளவுக்கு மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்த்திருக்கின்றன. ஆனால், கலைஞர் டி.வி.யில் இன்றுவரை என்னிடம் யாரும் பேட்டி கேட்கவில்லை. நீங்கள் சரி எனச் சொன்னால் இப்போதே தனி சேனல் ஆரம்பிக்க நான் தயார். சன்,

                                             கலைஞர் டி.வி.க்களை விட என்னுடைய சேனல் தி.மு.க.வின் கொள்கை முழக்க தளமாக விளங்கும்!"என கருணாநிதியிடம் ஆ.ராசா விரிவாகப் பேச, கருணாநிதிக்கும் அந்தப் பேச்  சில் உடன்பாடு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். அதனால், சீக்கிரமே ஒரு செய்தி சேனல் தமிழ் உலகுக்கு புதிதாக வர இருக்கிறது. அதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்யத் தொடங்கிவிட்டார் ஆ.ராசா. டெல்லியில் இருக்கும் மீடியா ஆட்கள் சிலரின் துணையோடு பக்கா செட்டப்பில், பரபரப்பு, விறுவிறுப்பு என ஆங்கில சேனல்களுக்கு நிகரான சேனலாக ராசாவின் சேனல் இருக்குமாம்.

Labels:

3 Comments:

At August 12, 2012 at 10:20 AM , Blogger Karthick said...

நல்ல செய்தி நண்பரே ஒரு சின்ன வேண்டுகோள் மீடியாவிற்கான வேலைவாய்ப்பு பற்றி ஒரு பக்கம் ஒதிக்கினால் நல்ல இருக்கும்

வாழ்க வளமுடன்
Tally Karthick

 
At August 12, 2012 at 11:40 AM , Blogger BasKaran said...

நன்றி நண்பரே உங்கள் கோரிக்கை உடனே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உங்களே போன்று அனைவரும் இருந்தால் நன்றாக இருக்கும்.

 
At August 13, 2012 at 1:56 PM , Blogger Karthick said...

நன்றி நண்பரே

வாழ்க வளமுடன்
TallyKarthick

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home