12/12/14

சூடு பிடிக்கும் டிவி ஹோம் ஷாப்பிங் சந்தை ரிலையன்ஸுக்கும் டாடாவுக்கும் நிழல் யுத்தமா...!!

சூடு பிடிக்கும் டிவி ஹோம் ஷாப்பிங் சந்தை ரிலையன்ஸுக்கும் டாடாவுக்கும் நிழல் யுத்தமா.

 

இணையத்தில் பெருவாரியான மக்களை எட்டி வரும் ஸ்னாப்டீல்.காம் நிறுவனம் இப்போது கேபிள் வழியாகவும் உங்கள் வரவேற்பறையை எட்டிப் பார்க்கப் போகிறது. அதற்காக கேபிள் டிவி வினியோக நிறுவனமான டென்வொர்க்ஸுடன் 50:50 கூட்டுறவு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது.

    இந்தியாவின் 5,000 நகரங்களில் 2.5 கோடி உறுப்பினர்களை, 50,000 விற்பனையாளர்களை இணைப்பதாகக் கூறும் ஸ்நாப் டீல் நிறுவனமும் 13 மாநிலங்களில் 1.3 கோடி டிவி நேயர்களை எட்டுவதாகக் கூறும் டென்வொர்க்ஸும் இணைந்து ஒரு புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளன. உலகமே ஆன்லைன் விற்பனைச் சந்தையை நோக்கி நகரும் சமயத்தில், ஏற்கனவே பல பெரிய முதலைகளைக் கொண்டிருக்கும் டிவி சந்தைக்குள் நுழைகிறது இந்தக் கூட்டணி. இவர்கள் இணைந்து ஒரு டிவி சேனல் துவக்கி, அதன் மூலம் ஹோம் ஷாப்பிங் பொருட்களை விளம்பரப்படுத்தி விற்பார்கள்.

    இது மறைமுகமாக டாடா-ரிலையன்ஸ் இடையிலான யுத்தம் என விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்னாப்டீல் நிறுவனத்தில் டாடா குழுமம் சமீபத்தில் வெளியே தெரிவிக்கப்படாத ஒரு மர்மமான தொகையை முதலீடாகப் போட்டது. ஏற்கனவே டிவி தளத்திலும் வியாபாரம் செய்யும் அதன் போட்டியாளரான ஹோம்ஷாப்18.காமின் முதலாளிகளில் ஒருவர் யார் தெரியுமா? ரிலையன்ஸ் முழுவதுமாக தனதாக்கிக்கொண்ட நெட்வோர்க்18 குழுமம்தான். டாடாவின் முதலீடு தந்த உற்சாகத்தில் தங்களுக்கிடையிலான போட்டியை டிவி தளத்திற்கும் கொண்டு செல்கிறது ஸ்னாப்டீல்.

    இந்த டேபிள் மேட் வாங்குங்க, அந்த உடற்பயிற்சிக் கருவி வாங்குங்க என்று உங்கள் ஹாலில் டிவி போடுகிற சத்தம் இனி அதிகமாகலாம். டிவி மட்டுமின்றி, உங்கள் ஸ்மார்ஃபோனிலும் இவர்களை நீங்கள் தரிசிக்க நேரலாம். எனினும் டென் நெட்வொர்க்ஸுக்கு இதுவரை தமிழகத்தில் நெட்வொர்க் இல்லாததால் இந்தப் போட்டியை இங்கு பார்க்க கொஞ்சம் நாளாகும்.

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home