மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட மழை 17 இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர் வீடுகளிலுமாக 34753 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட மழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களும்
வெள்ளத்தால் மூழ்கியதால் 17 இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர்
வீடுகளிலுமாக 34753 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 135464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் இறந்துள்ளனர்.
ஒருவர் காணாமல் போய் உள்ளார். மட்டக்களப்பில் செங்கலடி, கிரான், ஏறாவூர்
ஆகிய பிரதேசங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இம்மக்களுக்கு
அவசர உதவி வழங்கும் வகையில் மனிதநேயமிக்க புலம்பெயர் உறவுகள் மற்றும்
அவர்களது மனிதநேய அமைப்புக்கள், புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள இந்து
ஆலயங்கள், எம்நாட்டில் உள்ள மனிநேய அமைப்புக்கள், இந்து ஆலயங்கள்,
தர்மசிந்தையாளர்கள் போன்றோர் இயன்ற உதவிகளை வழங்க முன்வருமாறு பாராளுமன்ற
உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உதவி செய்ய விரும்பும் அமைப்பு அல்லது தனி நபர்கள் மட்டக்களப்பு மாவட்ட
இந்து இளைஞர் பேரவையின் பேரில் தங்களது ஆதரவை வழங்கலாம் என்பதையும்
தெரிவிக்கின்றார்.
வழங்கப்படும் உதவிகளுக்கு பற்றுச்சீட்டு
மற்றும் நன்றி நவிலல் கடிதம், உதவி வழங்கப்பட்டமைக்கான ஆவணங்கள்
(புகைப்படங்கள்) உட்பட்டவை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால்
தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதன் தொடர்புகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் கீழ்வரும் தொடர்புகளை பயன்படுத்த முடியும்.
தொலைபேசி இலக்கம் : 0094652228273, 0094652228018, 0094776034559, 0094653656608
தொலைநகல் இலக்கம் : 0094652228273
மின்னஞ்சல் முகவரி : btdymha@gmail.com / yoheswaran.mp@gmail.com
வங்கி சார்பான தகவல் : மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின்
(Federation of Young Men’s Hindu Association) என்ற பெயரில், மட்டக்களப்பு
கொமர்ஷினல் வங்கி (Commercial Bank) கணக்கு இலக்கம் 1105040264. SWIFT
CODE : CCEYLKLX, Bank Code : 7056-105 இதில் பணங்களை அனுப்பிவைக்கலாம்.
அத்தோடு உதவி வழங்குபவர்கள் மின்னஞ்சல் மூலம் தங்கள் விபரங்களை அனுப்பி
வைத்தல் அவசியமானதாகும்.
posted by BasKaran @ 6:57 AM 0 Comments



0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home