4/12/12

தொலைக்காட்சி ஒளிபரப்பில் டிடிஎச் சேவை அதிகரிப்பு.

மத்திய அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு தரத்தை அதிகரிக்க முயற்சித்து வருகிறது. 2012 ஜூன் 30ஆம் தேதிக்குள் நாடுமுழுவதும் கட்டணச் சேனல்கள்அனைத்தும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரில் கேபிள் தொலைக்காட்சி ஒளி பரப்பை 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதிக்குள் முழுவதும் டிஜிட்டல் மயமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்திய அரசு விதித்துள்ள கெடு காரணமாக வாடிக்கையாளர்களை தக்க வைக்க போதுமான செட்டாப் பாக்ஸ்களை நிறுவனங்கள் வழங்க உள்ளன. டாடா ஸ்கை நிறுவனம் நான்கு பெருநகரங்களில் உள்ள மொத்த டிடிஎச் சேவையில் இதன் பங்கு 56 சதவிகிதம் ஆகும். ஏர்டெல் 17 சதவிகிதமாகவும்,சன் டைரக்ட் 10 சதவிகிதமாகவும், டிஷ் டிவி 8 சதவிகிதமாகவும், ரிலையன்ஸ் டிஜிட்டல் 6 சதவிகிதமாகவும் உள்ளன. டில்லி, கொல்கத்தாவில் டாடாஸ்கை 68 விழுக்காடாக உள்ளது.மும்பையில் அது 63 சதவிகித சந்தாதாரர்களை பெற்றுள்ளது.சென்னையை பொறுத்தவரை சன் டைரக்ட் மக்கள் அதிகம் விரும்பும் டிடிஎச் சேவையாக உள்ளது.

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home