1/5/12

தமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன்

1993 ஏப்ரல் 14 உலக தமிழர்களின் வாழ்வில் ஒரு உன்னதமான நாள். ஆம் சன் டிவி ஆரம்பிக்கப்பட்ட நாள். தமிழின் முதல் தனியார் அலைவரிசை, இந்தியாவில் இரண்டாவது தனியார் அலைவரிசை சன் டிவிதான் (இந்தியாவில் முதல் தனியார் டிவி ஜீ டிவி ஆகும்). அதன் பிறகு எத்தனையோ தமிழ் சேனல்கள் வந்தாலும் சன் டிவி அனைவருடைய மனதிலும் நீங்காத இடம் பெற்றுள்ளதை யாரும் மறுக்க இயலாது.
காரணம்:
சன் டிவி அனைவருடைய மனதிலும் இடம் பெறக் காரணம் யாதெனில், வாரம்
மூன்று திரைப்படம், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஒளியும் ஒலியும் திரைப்பட
பாடல்கள், ஏதோ ஒப்புக்கு நாடகங்கள் என DD1 (பொதிகை) ஒளிபரப்பி வந்த
காலத்தில், தினந்தோறும் திரைப்படங்கள், பாடல்கள், முடிவுறா தொடர்கள்,
விழாக்கால சிறப்பு நிகழ்ச்சி என மக்களின் மனதில் எளிதாக சன் டிவி இடம்
பெற்றது.
அதோடு நிற்காமல் அப்போதைக்கு வந்த பெரும்பாலன சூப்பர் ஹிட் படங்களின் ஒளிபரப்பு உரிமங்களையும் பெற்று வந்தது. சன் டிவிக்கு பிறகு துவங்கப்பட்ட ராஜ், ஜெயா, விஜய் டிவி ஆகியவை சன் டிவியுடன் போட்டியிட முடியாமல் போனதற்கு திரைப்பட உரிமையே ஒரு முக்கியக் காரணம். அந்த காலக் கட்டத்தில் சன் டிவியின் தாக்கம் மக்களை எந்தளவுக்கு பாதித்தது என்பதற்கு ஒரு உதாரணம், அந்த காலத்தில் எங்கள் வீட்டில் கேபிள் இணைப்பு உள்ளது எனக் கூறுவதற்கு பதில், எங்கள் வீட்டில் சன் டிவி உள்ளது என்று தான் மக்கள் கூறுவார்கள்.
சன் குழுமம்:
சன் குழுமத்தின் 2வது சேனல் கேடிவி 2001 ல் துவங்கப்பட்டது. கொண்டாட்டம் டிவி என்பதன் சுருக்கமே கேடிவி ஆகும். ஒரு நாளைக்கு 3 திரைப்படம்என துவங்கப்பட்டது. தற்போது 6 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. தொடர்ச்சியாக SCV சேனல் சன் மியூசிக் ஆகவும், செய்திகளுக்காக சன் நியூஸ், குழந்தைகளுக்காக சுட்டி டிவி, அதன் பின் ஆதித்யா நகைச்சுவை சேனல் ஆகியவை தற்போது சன் குழும தமிழ் சேனல்களாகும்.
ராஜ் மற்றும் ஜெயா டிவியில் துணைச் சேனல்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் சன்குழுமமே அதிகம் பேர் பார்க்கும் சேனலாக உள்ளது.தற்போது கலைஞர் தொலைக்காட்சி துவங்கப்பட்டு அதில் வரும் தொடர்கள் கிராமங்களில் அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளன. பல உள்ளூர் தொலைக்காட்சிகளும் தற்போது போட்டியில் உள்ளன.பெரும்பாலான சேனல்கள் திரைப்படங்களையும், மேற்கத்திய நிகழ்ச்சிகளை கொண்டே செயல்பட்டாலும், திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளே இல்லாமல், தமிழ் மொழியையும் பண்பாட்டையும் காக்கும் தொலைக்காட்சியாக மக்கள் டிவி உள்ளதை யாராலும் மறுக்க இயலாது. அதே
போல் தமிழன் டிவியில் ஒளிபரப்பப் படும் திரைப்படங்களின் பெயரை நான் இதுவரை கேள்விப் பட்டதே இல்லை.
அரசியல் ஆதிக்கம்:
பெரும்பாலான சேனல்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைப் பரப்பு செயலாளராகவே இருக்கிறது. தொலைக்காட்சி இல்லாத அரசியல் கட்சி மலட்டு கட்சி எனும் நிலையே உள்ளது.
திமுக----- கலைஞர் டிவி, சன் டிவி
அதிமுக---ஜெயா
காங்கிரஸ்--மெகா (தங்கபாலு)
வசந்த் (வசந்த் & கோ)
தேமுதிக--- கேப்டன்
பாமக------- மக்கள்
விடுதலை சிறுத்தை- தமிழன்.
அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் புது சேனல்கள்:
1. கலைஞர் முரசு (திரைப்படம் சார்ந்தது),
2. ஜெயா மூவிஸ்,
3. JP டிவி,
4. ETV தமிழ்,
5. ENT,
6. UFX,
7. TV9 தமிழ்,
8. SRM (ஐஜேகே- பாரிவேந்தர்),
9. ஏசியாநெட் தமிழ்,
10. கேப்டன் நியூஸ்,
11. தயா டிவி (தயாநிதி அழகிரி),
12. வாசன் டிவி (G.K.வாசன்),
13. நியூஸ் ப்ளஸ்,
14. பாலிமர் மியூசிக்,
15. ஜி செய்திகள்.
ஒரு ஊடகம் என்பது மக்களின்பொழுதைப்போக்கி அவர்களுக்கு தகவல்களை தெரிவிக்கும் கருவியாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய ஊடகங்கள் அனைத்தும் ஒரு கருத்தை திணிக்கும் ஆயுதமாக உள்ளது கவலை அளிக்கிறது.

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home