4 எழுத்து தமிழ் GEC சேனலை கைப்பற்றிய 3 எழுத்து நிறுவனம்...! அது எது தெரிஞ்சவங்க சொல்லுங்க ?
சில
மாதங்களுக்கு முன்னர் பிரபலமாகி வந்த....ஒரு 4 எழுத்து தமிழ் சேனலை...
தமிழகத்தின் ஒரு முன்னணி 3 எழுத்து நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த
தமிழ் சேனலுக்காண ஆயத்த பணிகள் முழு வீச்சளவில் நடந்து கொண்டிருக்கிறது...
பல முன்னணி பிரபலங்களுடன் நிகழ்ச்சி மற்றும் சேனல் வடிவமைப்பு குறித்த
விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஊடகத்துறையில்
பல தளங்களில் கோலோச்ச தொடங்கியுள்ள அந்நிறுவனம்... கைப்பற்றியுள்ள தமிழ்
சேனல் பெயர் மாற்றத்துடன் விரைவில் வெளிவரும் எனவும்
எதிர்ப்பார்க்கபடுகிறது..!!
ஏற்கனவே
தமிழ் GEC எனப்படும் பொது பொழுது போக்கு துறையில்... நல்ல ஆரோக்கியமான
போட்டி நிலவ ஆரம்பித்துள்ளது... SRM குழுமத்தின் புதுயுகம் சேனலின் மூலம்
அந்த போட்டி மிகவும் வேகமான ஒரு கட்டத்திற்கு எட்டியுள்ளது... புதிய
திரைப்படங்களின் உரிமைகளை பெறுவது தொடர்பான போட்டி... தற்போது
அதிகரித்துள்ளது.
விஜய் டிவி... Zee தமிழ்... புதுயுகம் போன்ற சேனல்கள் இந்த போட்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
தமிழ்
GEC பிரிவு சந்தையில் மற்றுமொரு மிகப்பெரிய நிறுவனம் தடம் பதிப்பதால்...
புதிய தமிழ் திரைப்படங்கள்... இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக
திரைக்கு வராமல் நேரடியாகவே...என்ற அடைமொழியுடன் கூடிய படங்கள் வெளிவரலாம்
எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Labels: TV NEWS


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home