அனல்பறக்கும் விவாத போரில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் Vs ஹாத்வே நிறுவனங்கள்...!
|
சமீபத்தில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் என போன்ற பலதரப்பட்ட மீடியாக்களில் இரண்டு விதமான பிரச்சார விளம்பரங்கள் மோதல் போக்குடன் சுற்றி வருகின்றது.
ஒன்று, விளையாட்டு சேனல் ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்து வருவது, ஹாத்வே MSOs வில் இருந்து தனது சந்தாதாரர்களை மற்ற MSOs அல்லது DTH சேவைக்கு நகர்த்த என்பதாக விளம்பரம் வெளியிட்டிருந்தது... ஏனெனில் ஹாத்வேயில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களை சந்தாதாரர்களுக்கு கிடைக்கவில்லை எனவும் விளம்பரம் வெளியிட்டிருந்தது.
மற்றொருபுறம், ஹாத்வே MSO மேற்கொண்ட விளம்பரம்... MSO தனது சந்தாதாரர்களுக்கு இனி ஸ்போர்ட்ஸ் பேகேஜ் பிரிவில் அல்லது தனியாக -a la carte- அடிப்படையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களை சந்தாதாரர் பெறலாம் என அறிவிக்கிறது .
இது போன்ற விளம்பரங்களினால் இருதரப்பினரும் சந்தாதாரர்களை மிகவும் தெளிவாக குழப்புகின்றனர் ஸ்டார் இந்தியா நிறுவனமும் ஹாத்வே MSOவும் ஒரு வகையில் தொழில்முறை பங்காளிகள், துரோகம் புரிந்தவர்கள் போல் இருவரும் ஒருவரை ஒருவர் பொதுமக்கள் பார்வையில் தாக்கி கொள்வது வேடிக்கையாக உள்ளது.
ஆனால் இருவரும் ஒருவருக்கொருவரை வெளியே தாக்கியதை மறுக்கின்றனர்; இது குறித்து அவர்களிடம் பேசுகையில் அவர்கள் தங்களின் தனிப்பட்ட நலன்களை பாதுகாத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
"பல சந்தாதாரர்கள் எங்கள் சேனல்களை எப்படி சந்தா செலுத்தி பார்ப்பது என்பது கூட தெரியவில்லை என்பதை அறிந்தோம் மேலும் சேனல்கள் எங்கள் பார்வையில் அணைக்கப்பட்டுவிட்ட ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தன. எனவே நாம் எங்களுடைய பார்வையாளர்களுக்கு உதவி செய்வதற்கும் மேலும் நுகர்வோர் நமது சேனல்களை தொடர்ந்து பெற தங்கள் விருப்பங்களை ஆராய முடியும் என்ற வகையில் மெயின்லைன் செய்திதாள்களில் விளம்பரத்தை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டோம் , " என்பது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்தி தொடர்பாளரின் கூற்று.
"நாங்கள் பலதரப்பட்ட நுகர்வோர் தரப்பில் இருந்து எங்கள் சேனல்களை பெறுவதில் நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பன போன்ற புகார்களை பெற்றுள்ளோம் என்று சுட்டிகாட்ட விரும்புகிறேன் . Hathwayயில் இருந்து, எங்கள் சேனல் சிக்னல்களை பெறுவதற்கு சந்தாதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி செய்தித்தாள் அறிக்கைகள் உள்ளன எனவும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து Hathway கேபிள் & Datacom தலைமை நிர்வாக அதிகாரி திரு.ஜெகதீஷ் குமார் அவர்கள் பேசுகையில், எங்களுக்கு எதிராக தவறான வகையில் பிரச்சாரம் மற்றும் தகவல்களை பரப்பி வருகிறது என்பதால் நாங்கள் எங்கள் தரப்பில் இருந்து விளம்பரத்தை வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் " ,என்று கூறியவர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களை நாங்கள் நிறுத்தவில்லை. நாம் சாதாரணமாக நமது பிரீமியம் பேகேஜ் தொகுப்பில் இருந்து நீக்கி... இப்போது சந்தாதாரர்கள் ஸ்போர்ட்ஸ் பேகேஜ் அல்லது அ லா கார்டே மூலம் கொடுக்கின்றோம். "
|
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அதன் சேனல்களின் கட்டணத்தை உயர்த்துகிறது என Hathway நடவடிக்கை தூண்டுவதாக இல்லையா...? "நாங்கள் எங்கள் சேனல்களின் விலை உயர்த்தவில்லை. சேனல்களின் விலையை இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI தான் கட்டுப்படுத்துகிறது மேலும் எந்த ஒரு சேனல்ஒளிபரப்பாளரும் தன்னிச்சையாக சேனல் விலையை அதிகரிக்க முடியாது, "என சேனல் தரப்பில் செய்தி தொடர்பாளர் மீண்டும் சுடுட்டி காட்டி பேசினார்.
எனினும், உறுதிப்படுத்தப்படாத செய்திகள்... ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதன் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வந்த போது - - அது அதன் சேனல்களை எந்த பேகேஜ் தொகுப்புகளிலும் வைத்து கொள்ளலாம் எனவும் ஆனால் இந்த ஆண்டு சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தி கொடுக்க வேண்டும் என Hathway விடம் கேட்டதாக கூறப்படுகிறது. எல்லா ஒளிபரப்பாளர்களும் சந்தாதாரர் வீடுகளில் செட் டா பாக்ஸ் பெட்டிகளை நிறுவி பரவல் செய்வது வெளிப்படைத்தன்மை தொடங்கும் தருணத்தில் ஏன் இது போன்ற ஒப்பந்தங்களை நாடுகின்றன...? என்பது சந்தாதாரர்களுக்கு சற்றும் புரியவில்லை.
இது ஒரு பெரிய பிரச்சினையாக கூறப்படுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை...? இது டிஜிட்டல் இல்லையா...? நமது நுகர்வோருக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை கொடுத்துள்ளோம். விளையாட்டு சேனல்களை விரும்பும் எந்த நுகர்வோரும் அவர்கள் அ லா கார்டே a la carte எனப்படும் தனியாகவோ அல்லது அவர்கள் எங்கள் விளையாட்டு பேக் மூலமாகவும் பதிவு செய்து சேனல்களை பெறலாம், " என்கிறார் ஹாத்வே நிறுவனத்தின் திரு. பிள்ளை அவர்கள்.
எனினும் இந்த நடவடிக்கையினால் Hathway நுகர்வோர் மோசமாக பாதிப்படைந்துள்ளனர் என கூறுகிறார் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்தி தொடர்பாளர். " நுகருவோர் இப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் உட்பட சேனல்களை அதே தொகுப்பில் உள்ள கட்டணத்தை விட Hathway நிறுவனத்திற்கு இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் பதிலளித்தார் .
யார் கூறியது நாங்கள் அதிகம் வாங்குகிறோம் என்று... ? நாம் அதற்கு பதிலாக a la carteவில் சேனல்களை நுகர்வோர்களுக்கு தருகிறோம், இது பேகேஜ் விலையை விட மிகவும் குறைக்கப்பட்ட விலை என்பது திரு. பிள்ளை அவர்களின் பதில்,...
அவர் மேலும் கூறுகையில் MSO அதன் பிரீமியம் தொகுப்பின் விலையை ரூ 5 குறைத்துள்ளது, மேலும் ஒரு மாதத்திற்கு ரூ 17.25 என்ற விலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 , 2 , 3 மற்றும் 4 சேனல்களை வழங்கி வருகிறது என்றும் தெரிவித்தார். இந்த சேனல்கள் தேர்வு நுகர்வோர் மூன்று மாதங்களுக்கு எனவும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார் அவர். வேறு வகையில் என்றால் ஸ்போர்ஸ் பேகேஜ் தொகுப்பின் மூலம் பெறமுடியும் எனவும் அதே விலையில் கிடைக்கும் எனவும் கூடுதாலாக நியோ ஸ்போர்ட்ஸ் சேனலும் கிடைக்கும் எனவும் நுகர்வோர் ஒரு மாத காலத்திற்கு பதிவு செய்ய முடியும் எனவும் கூறினார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்தி தொடர்பாளர் ஹாத்வே நிறுவனம் அதன் பேகேஜ் தொகுப்பு அமைப்புகளை மாற்றம் செய்வதற்கு முன் நுகர்வோருக்கு தகுந்த முன்னறிவிப்பு ஏதும் கொடுக்க வில்லை என Hathway குற்றஞ்சாட்டினார்.
"Hathway நிறுவனத்தில் எங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் அடங்கிய பேகேஜ்களை ஆறு மாதங்களுக்கு சந்தா கட்டியவர்கள் மற்றும் வருடாந்திர அடிப்படையில் சந்தா செலுத்தியவர்களை பாதுகாக்கவில்லை என்று தகவல்கள் கிடைத்தது ... இது விதிமுறை மீறல்...இதுவரை தங்களுக்கு பிடித்த சேனல்களை பார்த்துகொண்டிருந்தவர்களுக்கு திடீரென்று சேனல்களை நிறுத்துவது என்பது நியாய பூர்வமான முறையாகாது என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிள்ளை இந்த குற்றச்சாட்டை ஒரு விரைவான பதிலின் மூலம் மறுத்த அவர் கூறுகையில் " நாங்கள் எந்த முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என்று கூறுவது யார்....? நாங்கள் எங்கள் பேகேஜ் திட்டம்பற்றி எங்கள் சந்தாதாரர்களுக்கு 20 நாட்களுக்கு முன்னதாகவே ஒரு பொது அறிவிப்பின் மூலம் தகவல் தெரிவித்து விட்டோம் எனவும் மேலும் தொலைகாட்சியில் ஸ்க்ரோல் செய்தி மூலமாகவும் தகவல் ஒளிபரப்பு செய்துள்ளோம் எனவும் சூடாக பதிலளித்தார்
"நாங்கள் எப்போதும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றோம். இதன் விளைவு, எங்கள் உள்ளடக்க சேனல்கள் அனைத்து கேபிள் டிவி மற்றும் DTH தளங்களில் முழுவதும் பரவலாக இருக்கிறது, " என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்தி தொடர்பாளர் என்று கூறும் அவர்... நாம் அப்படியே எங்கள் பார்வையாளர்களை விட்டுவிட முடியாது. TRAI வகுத்துள்ள கட்டமைப்பு விதிமுறைகள் மூலம் இரண்டு தரப்பினரும் ஒளிபரப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களும் பார்வையாளர்களுக்கு ஒரு குறைந்தபட்ச சேவை தர கடமைப்பபட்டிருகின்றோம் எனவே விநியோக தளங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.
திரு. பிள்ளை அவர்கள் கூறுகையில் தனது நிறுவனத்தின் மூலம் ...அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம் "என்றும் கூறியவர் மேலும் கூறுகையில் சந்தை டிமான்ட் பின்பற்றி நடவடிக்கை எடுக்கிறது. இது குறித்த வழக்கு ஏற்கனவே TDSAT தீர்ப்பயத்திற்கு வந்தபோது ...அங்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மனுவை தொலைதொடர்பு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது...எனவும் தெரிவித்தவர்... ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பாளரின் பேச்சுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்றே கருதுகின்றேன் எனவும் தெரிவித்தார். எங்களுக்கு டிஜிட்டலாக்கத்தின் நடைமுறையும் தெரியும் அதன் அர்த்தமும் தெரியும் எனவும் கூறிமுடித்தார்.
Labels: starsports vs hathway, TV NEWS


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home